வலக்கரம்

Tuesday, May 18, 2021

B.A. Manakala

அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை. நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது. சங். 44:3.

என்னுடைய அப்பா, இடதுகைப் பழக்கமுடையவர்கள். அவர்கள் ஏறத்தாழ எல்லாவற்றையும் தன்னுடைய இடது கையாலேயே செய்கிறார்கள். இந்தியச் சூழலில்..., பணம் கொடுப்பது, உணவு வழங்குவது, இன்னும் இதுபோன்ற பல காரியங்களை.., வலது கையினால் செய்வதே புனிதமாகவும், சுபமாகவும் கருதப்படுகிறது.

சங் 44:3, தேவனின் பலம் வாய்ந்த வலது கரத்தைப் பற்றிப் பேசுகிறது. நமக்கும் சுயமாக பலம் மிக்க வலக்கரம் இருந்தாலும்கூட.., தேவனுடைய வலது கரமே நம்மை விடுவிக்கிறது.

தேவன் வல்லமையானவர். அதனால், நாமும் கூட அப்படிப்பட்டவர்களே. அவருடைய வலக்கரம் வல்லமை மிக்கது. எனவே, நம்முடையவைகளும் அதே போன்றதே.

ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் எப்போதும் என்னோடே கூட இருக்கிறபடியினால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)     

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்