என் பட்டயம்

Wednesday, May 19, 2021

B.A. Manakala

என் வில்லை நான் நம்பேன். என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. சங். 44:6.

என் பட்டயம்! எனக்கு வல்லமை, அதிகாரம், திறன், பலம், பணம்... இன்னும் இதுபோன்று எக்கச்சக்கம் உண்டு! என்னை இரட்சிக்கவும், நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும் இவைகள் போதுமானவை என்று நான் அடிக்கடி எண்ணுகிறேன்.

ஆனால், இவைகளில் எதுவுமே..., அவைகள் செய்யும் என்று நான் நினைத்ததை..., பெரும்பாலும் செய்ய முடியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால்..., இவற்றில் சில..., அவை என்ன செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ..., அதற்கு நேர்மாறாகவும் கூடச்  செய்கின்றன!

'நாம் நம்புகிற நம்முடைய பட்டயம் என்ன' என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். நம்மையும் அறியாமலேயே... நாம் அவற்றைத்தான் பெரும்பாலும் நம்புகிறோம்.

எப்போதும் தேவனையே நம்பக் கற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்!

ஜெபம்: கர்த்தாவே, என்னிடம் ஒரு பட்டயம் இருக்கும் போதும் கூட..., உம்மை மாத்திரம் நம்புவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)    

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்