தொடர்ந்து செய்தல்
Thursday, May 20, 2021
B.A. Manakala
தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம். உம்முடைய நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். சங். 44:8.
நாம் எதை இடைவிடாமல் செய்கிறோம்.., சுவாசிப்பதையா?! ஆனால்..., இது நாம் தூங்கினாலும், விழித்திருந்தாலும்.... தானாகவே நடக்கிறதே!
சில காரியங்களை, நாம் இடைவிடாமல் செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது:
1) ஜெபித்தல் (1 தெச. 5:17).
2) அவருடைய வார்த்தையை தியானித்தல் (சங். 1:2).
3) தேவனைத் துதித்தல்/ஆராதித்தல் (இன்றைய வசனம்)
4) சக விசுவாசிகளோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளுதல் (அப். 2:4).
5) கர்த்தருக்குள் சந்தோஷமாயிருத்தல் (பிலி 4:4)
தேவனுடன் சீரான ஐக்கியம் கொள்வது... தானாக நடப்பதில்லை.
சுவாசிப்பதை நிறுத்துங்கள்...; உங்கள் சரீரம் படிப்படியாக இறந்து விடும். தேவனோடுள்ள ஐக்கியத்தை நிறுத்துங்கள்...; உங்கள் உள்ளான மனிதன் படிப்படியாக மரித்து விடுவான்!
ஜெபம்: கர்த்தாவே, உம்மோடு சீரான ஐக்கியத்தில் இருப்பதற்கு, எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment