தூங்குகிற தேவன்!
Friday, May 21, 2021
B.A. Manakala
ஆண்டவரே, விழித்துக் கொள்ளும். ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும். எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும். ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும், எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? சங். 44:23-24.
வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களில்...., "நீர் ஏன் என் வேதனையைப் புறக்கணிக்கிறீர்?" என்று நாம் தேவனிடம் கேட்கக் கூடும். இந்தக் கொரோனா பெருந்தொற்றின் மத்தியிலும் கூட..., பலர் இதையொத்த கேள்விகளைக் கேட்கக் கூடும். தேவ ஜனங்கள், தேவனையே பின்பற்றி, அவருடைய கட்டளை மற்றும் நியமங்களின்படி நடந்தாலும் கூட..., தேவன் அவர்களைப் புறக்கணிக்கிற பல்வேறு வழிகளைப் பற்றி, சங் 44: 9-22 வசனங்கள் விவரிக்கிறது.
உண்மையில்..., தேவன் உறங்குவதுமில்லை. தூங்குகிறதுமில்லை (சங். 121:4). நம்மையும், நம்முடைய பாரங்களையும், அவரே ஒவ்வொரு நாளும் சுமக்கிறார் (சங். 68:19). அவர் எப்போதுமே சுறுசுறுப்பாய் இயங்குகிறவர். இருப்பினும்..., தேவனுக்கு முன்பாக உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்துவது நல்லதே. இயேசுவும் கூட அப்படிச் செய்தாரே! (மத். 27:46).
தேவன் எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டே இருக்கிறார்...., நீங்கள் அவ்வாறு இல்லாத போதும் கூட!
ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய அன்பின் ஆழத்தைப் பற்றியும், என் மீதான உம்முடைய அக்கறையைப் பற்றியும் அறிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment