வசீகரிக்கும் வார்த்தைகள்

Saturday, May 22, 2021

B.A. Manakala

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன். என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. சங். 45:1.

வார்த்தைகளின்றி ஒருவராலும் உயிர்வாழ முடியாது! நீங்கள் எதைப் பேச வேண்டும்...; எதைப் பேசக் கூடாது... என்பதைத் தீர்மானிக்கிற ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்கள் வார்த்தைகளை இனிமையாக்குவதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம்.

மென்மையான வார்த்தைகள், ஜீவனைக் கொண்டு வருகின்றன (நீதி. 15:4). ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேச வேண்டுமென உங்களுக்குத் தோன்றுகையில்..., ஒருபோதும் மௌனம் சாதிக்காதீர்கள்... ஏனென்றால்..., அவ்வார்த்தைகள் பிறரை ஆசீர்வதிக்கக் கூடியவை.

ஓர் மலையாள முதுமொழி இவ்வாறாகச் சொல்கிறது...: "மௌனம் ஞானிகளுக்கு அலங்காரம்.... அதீத மௌனம் பைத்தியத்தின் அறிகுறி!"

நாவு..., ஓர் திறமையான கவிஞருக்கு எழுத்தாணி. அதே சமயத்தில்..., அது ஓர் நெருப்புச் சுடர்! (சங் 45:1; யாக் 3:6)

ஜெபம்: கர்த்தாவே, தேவைப்படும் போதெல்லாம்..., இனிமையான வார்த்தைகளைப் பேசுவதற்கு, எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்