ஒரு ராஜாவை என்றென்றும் துதிப்பதா?
Wednesday, May 26, 2021
B.A. Manakala
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன். இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் துதிப்பார்கள். சங். 45:17.
தாவீது ராஜாவின் கீர்த்தியும், புகழ்ச்சியும் தலைமுறைகளுக்கு மட்டுமல்லாது..., என்றென்றைக்கும் இருப்பது பற்றி..., இங்கே கோராகின் புத்திரர் பேசுகின்றனர். இது..., ஓர் ராஜாவைப் புகழ்வதற்கான வழியே அன்றி வேறல்ல.
ஆனாலும்..., ஒரே ஒருவரை மாத்திரமே நாம் சதாகாலங்களிலும் துதிக்க முடியும். "என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்" (சங். 86:12). மிக முக்கியமாக..., தேவனைத் துதிக்கிற பழக்கத்தை நம் பிள்ளைகளுக்கும், இனி வரப்போகிற பல தலைமுறைகளுக்கும் நாம் பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.
நாம்..., நம் பிள்ளைகள்..., அவர்களுடைய பிள்ளைகள்...., என எல்லாரிடமிருந்தும் துதிகளைப் பெற நம் ராஜா பாத்திரர்.
ஜெபம்: கர்த்தாவே, என் ஜீவிய நாட்களெல்லாம் உம்மை உண்மையோடு துதிக்கவும்..., அதையே என் பிள்ளைகளும் செய்வதற்கு, அவர்களைப் பழக்குவிக்கவும்... எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment