உபத்திரவங்களில் மட்டுமா?

Thursday, May 27, 2021

B.A. Manakala

தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங். 46:1.

சில வேளைகளில்..., எங்களுடைய பிஞ்சுக் குழந்தையை, அவளுடைய உடன்பிறப்புகளில் ஒருவருடன் சேர்த்து படுக்கையறையில் விட்டுவிட்டு, நாங்கள் கதவைப் பூட்டி விடுவோம். ஆயினும்..., எங்களுடைய கவனமெல்லாம் அங்கே தான் இருக்கும். அவள் அழுதால்..., உடனே நாங்கள் ஓடிச் சென்று, என்ன விஷயம் என்று பார்ப்போம்.

மேற்காணும் வசனத்தில்..., "தேவன் ஆபத்துக் காலத்தில் மாத்திரமே உதவி செய்ய தயாராக இருக்கிறார்" என்று சொல்வது போலத் தெரிகிறது! ஆனால்..., உண்மை என்னவென்றால்.., நாம் ஜெபிக்கும் போது மட்டுமே தேவனை நோக்கிப் பார்க்கிறோம். நமக்கு ஆபத்து நேரிடுகையில் மட்டுமே, அவரை நோக்கிக் கதறிக் கூப்பிட முனைகிறோம்.

எங்கள் குழந்தை அழுகையில்..., அவளுக்கு சிறப்பான பராமரிப்பு கிடைக்கிறது. என்றாலும்..., பெற்றோராக நாங்கள் எப்போதும் அவள் மீதே கவனமாய் இருக்கிறோம். நாம் போகும் இடமெல்லாம், தேவன் நம்மோடே கூட இருக்கிறார் (யோசு. 1:9).

நாம் முழங்காலில் நிற்கையில்.., தேவனை இன்னும் நன்றாகக் காண்கிறோம்.

ஜெபம்: கர்த்தாவே, உபத்திரவங்களில் மட்டுமல்லாது, எப்போதுமே நீர் என்னோடு தான் இருக்கிறீர் என்பதைக் கண்டுகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்