உங்கள் வார்த்தைகள் ஞானமுள்ளவைகளா?

Saturday, June 12, 2021

B.A. Manakala

என் வாய் ஞானத்தைப் பேசும். என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். சங். 49:3.

"வீட்டில் இருங்கள்! பாதுகாப்பாய் இருங்கள்!"... இது பெருந்தொற்றுச் சூழலில், பலருக்கும் உதவிய புத்திசாலித்தனமான முழக்கம்!

உங்களுடைய வாயிலிருந்து வெளிவருகின்ற ஞானமுள்ள வார்த்தைகள் என்ன? மற்றவர்களை, சரியான தெரிந்தெடுப்புகளையும், தீர்மானங்களையும் எடுக்கச் செய்கிறதில்..., உங்களுடைய ஞானம் எவ்வாறு அவர்களுக்கு உதவுகிறது?

பேசாதிருந்தால்.., மூடன் கூட ஞானவான் என்று கருதப்படுவானாம் (நீதி. 17:28). தேவனே ஞானத்தின் மூல உற்பத்தி ஸ்தானமானவர் (யோபு 12:13). நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாய் இருந்தால்.., கர்த்தரிடம் கேளுங்கள் (யாக். 1:5).

உங்களுக்கு ஞானம் இருக்கும் போது மட்டும் பேசுங்கள்; அர்த்தமற்ற வார்த்தைகளைப் பார்க்கிலும் மௌனம் சாலச் சிறந்தது!

ஜெபம்: கர்த்தாவே, நான் எப்போதும் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசத்தக்கதாக.., என்னை உம்முடைய ஞானத்தினால் நிரப்பியருளும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்