வல்லமையுள்ளவரா?
Thursday, June 17, 2021
B.A. Manakala
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசை தொடங்கி, அது அஸ்தமிக்குந் திசை வரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். சங். 50:1.
பூமியிலே, வெறும் மூன்று நபர்கள் மீது மட்டுமே எனக்கு ஆற்றலும், அதிகாரமும் இருக்கிறதாக நான் உணர்கிறேன்... அவர்கள்... என்னுடைய மூன்று குழந்தைகள்! தன் வல்லமையிலும், அதிகாரத்திலும், மனிதன் வரையறைக்கு உட்பட்டவனாய் இருக்கிறான். நாம் பலவீனர்கள் என்றும், பல விஷயங்களை நம்மால் செய்யவே முடியாது என்பதையும் நாம் உணருகிறோமா?
வல்லமையும், அதிகாரமும் படைத்தவராய்..., முழு மனித குலத்திற்கும், சிருஷ்டிப்பு அனைத்திற்கும், தேவனாய் இருக்கிற ஒருவர் இங்கே இருக்கிறார். நம்முடைய தேவன், 'எவ்வளவு வல்லமையுள்ளவர்' என்பதையும், 'எவ்வளவு இறையாண்மை படைத்தவர்' என்பதையும், புரிந்து கொள்கிறதிலே..., நாம் குறுகிய வரம்புக்குள்ளே தான் இருக்கிறோம்..., இல்லையா?
அவருடைய அறிவு அளவில்லாதது! ( சங் 147:5) அவர் இரட்சிக்க வல்லமையுள்ளவர் (செப். 3:17).
'தேவன் எவ்வளவு வல்லமையானவர்' என்பதை, நான் எவ்வளவு அதிகமாக அறிந்து கொள்கிறேனோ.., அவ்வளவு நன்றாக..., 'நான் எவ்வளவு பலவீனமாக இருக்கிறேன்' என்பதை உணர்கிறேன்.
ஜெபம்: ஓ! வல்லமையுள்ள தேவனே, நீர் என்னோடு பேசும் போது, கவனமாகக் கேட்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
Comments
Post a Comment