மகிமையின் பிரகாசம்!
Friday, June 18, 2021
B.A. Manakala
பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். சங். 50:2.
என் சகோதரனுடைய வீட்டின் படுக்கையறையிலே..., முழு வீட்டையும், உள்ளேயும் வெளியேயும் ஒளிரச் செய்யக்கூடிய.., 'அவசரகால பிரதான சுவிட்ச்' (emergency master switch) ஒன்று உண்டு. முழு உலகத்தையும் ஒளிரச் செய்கிற 'மகிமையின் பிரகாசம்'... நம் தேவனிடம் உண்டு. அது..., இருளில் மறைந்திருக்கிறவற்றையும் கூட வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
அனைத்தையும், அதன் பாணியிலே பட்சித்துப் போடப் போகிற ஓர் நியாயத்தீர்ப்பும், அக்கினியும் காத்துக் கொண்டிருக்கிறது! (சங். 50:3-4). மரம், புல், வைக்கோலால் ஆனவை எதுவாயிருந்தாலும்..., அவை வெந்துபோகும். பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களால் ஆனவை எதுவாயிருந்தாலும், அவை நிலைத்திருக்கும். (1 கொரி. 3:12-14).
அந்த நாளிலே..., உங்கள் வாழ்க்கையில் உள்ள எது வெளியரங்கமாக்கப்படும்..., எது நிலைநிற்கும்... என்பதைப் பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
ஓர் மெழுகுவர்த்தியில் உள்ள தீச்சுடர், ஒரு அறையை ஒளிரச் செய்கிறது; வைக்கோல் மீது பற்றும் நெருப்போ..., அனைத்தையும் கபளீகரம் செய்து, பட்சித்துப் போடுகிறது!
ஜெபம்: கர்த்தாவே, உம் மகிமையின் பிரகாசத்தினுடைய வெளிச்சத்தில் வாழ, எனக்கு உதவி செய்தருளும். ஆமென்!
Comments
Post a Comment