நாம் தேவனுக்கு ஒரு வெகுமதியைக் கொடுக்க முடியுமா?

Saturday, June 19, 2021

B.A. Manakala

சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். சங். 50:10.

என்னுடைய பிள்ளைகள் இளம் பிராயத்தில் இருந்த போது..., அவர்கள், என்னுடைய சொந்த அலமாரியில் (shelf) இருந்தே ஒரு பொருளை எடுத்து, அழகான காகித உறையில் அதைப் பொதிந்து, என் பிறந்தநாளில், எனக்கே பரிசளித்தார்கள். எனக்கு பரிசளிக்க வேண்டும் என்ற அவர்களுடைய வாஞ்சையையும், அவர்களுடைய அன்பையும் நான் மெச்சினேன்.

ஏற்கனவே தேவனுக்கு சொந்தமானவற்றை மட்டுமே, நாம் அவருக்குக் கொடுக்கிறோமாஅவருக்குச் சொந்தமல்லாத ஏதாவதொன்றை, நம்மால் அவருக்குக் கொடுக்க முடியுமா? உங்களுடைய நன்றிகளை நீங்கள் தேவனுக்கு பலியாகச் செலுத்துங்கள். உன்னதமானவருக்கு நீங்கள் பண்ணின பொருத்தனைகளை நிறைவேற்றுங்கள் (50:14). அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவரை மகிமைப்படுத்துங்கள் (50:15). ஸ்தோத்திர பலிகளைச் செலுத்துங்கள் (எபி. 13:15-16).  நீங்கள் கபடாய் நடக்காதபடிக்குப் பாருங்கள் (50:16). அவருடைய கட்டளைகளைக் குப்பையைப் போல எறிந்து போடாதிருங்கள் (50:17).

நம் வெகுமானங்கள்.., நம்முடைய இதயங்களில் இருந்து உதயமானால்..., அவற்றை தேவன் விரும்புகிறார்.

ஜெபம்: கர்த்தாவே, நீர்  விரும்புகிறதை உமக்குக் கொடுக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்