அற்பமாகும் தேவனின் வார்த்தை!

Tuesday, June 22, 2021

B.A. Manakala

சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்து போடுகிறாய். சங். 50:17.

வழக்கமாக..., ஒவ்வொரு உணவு வேளையின் முடிவிலும்.., என் குழந்தைகளுடைய தட்டுகளில் ஏராளம் மிச்சம் இருக்கும். அதே சமயம், எங்களுடைய தட்டுகளோ.., காலியாகி, பொதுவாக சுத்தமாய் இருக்கும். காரணம்..., அவர்கள் காய்கறிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். நாங்கள் அவற்றை சாப்பிட்டு விடுகிறோம்.

குழந்தைகள், காய்கறிகளை உணவின் இன்றியமையாத பகுதியாகக் கருதினாலும்..., உணவின் முடிவில், அவை வீணாகின்றன என்பது தெளிவாகிறது.

நம்மில் யாரும் தேவனுடைய வார்த்தையை, குப்பை போல் அற்பமாகக் கருதுவதாக நான் நினைக்கவில்லை (சங். 50:17). ஆயினும்..., நாம் அதைக் கேட்டுவிட்டு, அடிக்கடி அதைப் புறக்கணித்து விடுகிறோமன்றோ? (யாக். 1:21-25). நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கவில்லையா? (1 யோ. 2:3). நாம் சத்தியத்தை சிதைத்துப் போடவில்லையா? ( அப். 20:30).

நாம் புறக்கணித்து, மதிப்பற்றதாய்க் கருதுகிற எதுவும் குப்பை போல் அற்பமாகின்றது..., அது தேவனுடைய வார்த்தையே என்றாலும் கூட!

ஜெபம்: கர்த்தாவே, ஒவ்வொரு நாளும் உம் வார்த்தையை மதித்து, அதற்கு இன்னும் நன்றாய்க் கீழ்ப்படிய எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்