ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
Thursday, June 24, 2021
B.A. Manakala
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான். தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்கிறார். சங். 50:23.
'உங்கள் தொல்லைக்கு நன்றி!' - இது அர்த்தமுள்ள வாக்கியமா? மனிதனுக்கு ஒருவேளை அப்படி இல்லாதிருக்கலாம். நமக்கு ஏதாவதொரு நன்மை செய்கிற ஒருவருக்கு, நாம் எளிதாக நன்றி சொல்லிவிட முடியும். ஆயினும்..., நல்லதோ, கெட்டதோ..., எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்தோத்திரம் செலுத்த வேதம் நமக்குக் கற்றுத் தருகிறது (1 தெச. 5:18). இன்னும் ஓர் படி தீவிரமானது எதுவென்றால்.., உங்கள் உபத்திரவங்களிலும் களிகூர்வது ஆகும் (யாக். 1:2).
நாம் அனுபவிக்கிற எல்லா நல்ல விஷயங்களுக்காகவும், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக. மேலும்...., வேதனைகளிலும், சோதனைகளிலும் கூட..., தேவனுக்கு நன்றி செலுத்த நாம் கற்றுக் கொள்வோமாக. ஏனென்றால்..., அப்படிப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலையையும் கூட..., அவர் நமக்கு நன்மையாக மாற்றுகிறார் (ரோம. 8:28).
மெய்யாய் தேவனை மகிமைப்படுத்த மிகவும் எளிய வழி.., நன்றி செலுத்தும் இதயமே (50:23).
ஜெபம்: கர்த்தாவே, எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்தோத்திரம் செலுத்த எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment