தேவனுக்கு விரோதமாக!
Friday, June 25, 2021
B.A. Manakala
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். நீர் பேசும் போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும் போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். சங். 51:4.
யானைகளும், சிங்கங்களும்... மனிதனை விட மிக அதிக பலம் வாய்ந்தவையாக இருந்தாலும்..., அவைகள், மனிதனால் வசப்படுத்தப்பட்டு, அடக்கப்படுகின்றன. எப்போதாவது, நாம் தேவனுக்கு விரோதமாக எதையாவது செய்ய முடியுமா? தேவன் ஒருவரே ஏக சக்ராதிபதி என்பதையும் அவரே வல்லமையுள்ளவர் என்பதையும் நான் அறிந்திருக்கிறபடியால்..., நான் வேண்டுமென்றே தேவனுக்கு விரோதமாக எதையும் செய்கிறதில்லை என நான் நினைக்கிறேன்.
எனக்கும், தேவனுக்கும் இடையே.., பகையை உருவாக்குகிற ஒரே விஷயம்..., பாவம்! இதுவே..., 'எனக்கு விரோதமாக' தேவனின் நியாயத்தீர்ப்பையும் விளைவிக்கிறது! ஆயினும்..., நான் மனந்திரும்பும் போது..., இயேசு கிறிஸ்துவின் மூலமாக.., தேவனுடைய இரக்கத்தை நான் கண்டுகொள்கிறேன் (1 தீமோ. 1:16) உங்களுக்காகவும், எனக்காகவும்..., இடைவிடாமல் இயேசு பரிந்து மன்றாடிக் கொண்டிருக்கிறார் (ரோம. 8:34).
'பாவம்'..., நமக்கும், தேவனுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குகிறது. 'குமாரன்'..., நமக்கும், தேவனுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புகிறார்.
ஜெபம்: பிதாவே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரம் உம்மை அணுக, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment