எப்போதும் என் முன்னால்..!
Saturday, June 26, 2021
B.A. Manakala
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன். என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங். 51:3.
நம்மில் வெகு சிலருக்காவது..., கொரோனா பற்றிய செய்திகளே, எப்போதும் நம் கண் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கலாம். உங்கள் முன்பாக எப்போதும் இருப்பது என்ன? தாவீதைப் பொறுத்தவரை..., இந்தச் சூழலில், அவருடைய பாவம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து, அவரைக் காயப்படுத்தியது (51:3).
நம்முடைய சொந்த பாவங்களை, நாம் கண்டுணர வேண்டியது அவசியம் (51:3அ). ஆயினும்..., எவ்வளவு முடியுமோ அவ்வளவு சடுதியாக... நாம் மனந்திரும்பி, மறுசீரமைக்கப்பட்ட உறவுக்குள் திரும்பி வருவது அதைவிட அவசியம் (51:2). தேவன் மோசேயிடம், "நான் உன்னோடு செல்வேன்" என்றார் (யாத். 33:14). இயேசு, "நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன்" என்றார் (மத் 28:20). நம்மில் உள்ள அவருடைய வார்த்தையே, நம்மைப் பாவத்திலிருந்து விலக்கிக் காக்கிறது (சங். 119:105).
பாவத்துடன் வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தேவனோடும், அவரது வார்த்தையோடும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, உம்மாலும், உம் வார்த்தையாலும் என்னை எப்போதுமே நிரப்பிக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment