இதை நீங்கள் சீரமைக்க முடியாது!

Tuesday, June 29, 2021

B.A. Manakala

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங். 51:10.

ஒரு தடவை..., என் மகன் என்னிடம் ஓடி வந்து, "அப்பா, தயவுசெய்து என் சைக்கிளை சரிசெய்து கொடுங்கள்" என்றான். சின்னச்சின்ன பிரச்சனைகள் என்றால்..., அவனே சரிசெய்ய முயற்சிப்பான். ஆனால் இந்த தடவை..., பெரிய பழுது ஒன்றை சரிசெய்ய வேண்டியதாய் இருந்ததால்..., என்னாலும் முடியாமல்..., நான்   அதைப் பழுது நீக்கும் கடைக்கு எடுத்துச்செல்ல வேண்டியதாயிற்று!

பல பிரச்சனைகளை நாமே சரிசெய்துவிட முடியும். ஆயினும்..., எல்லாவற்றையும் அல்ல! சைக்கிளை சரிசெய்யக் கூடிய  இடத்தை நான் அறிந்திருந்ததைப் போலவே..., தான் அதிதீவிரமாய் வாஞ்சித்த... சுத்தமான ஓர் இருதயத்தை உருவாக்கக்கூடியவரை தாவீது அறிந்திருந்தார். இதயம் என்பது..., அடிக்கடி, விரைவாய் அழுக்காகிவிடும் ஒன்று. மேலும்..., அதனுடைய சிருஷ்டிகர் மட்டுமே அதை சுத்திகரிக்க முடியும். மனதைப் புதுப்பித்தல்..., ஓர் தொடர்ச்சியான செயல்முறை (ரோம. 12:2).

பல விஷயங்களை மனிதன் சரிசெய்ய முடியும்; ஆனால்..., பாவம் நிறைந்த இருதயத்தை அவனால் சீரமைக்க முடியாது!

ஜெபம்: கர்த்தாவே, தேவைப்படுகிற போதெல்லாம்..., சுத்திகரிப்பு செயல்முறைக்கு அடிக்கடி என்னை நானே சமர்ப்பிக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்