நம்மில் பரிசுத்த ஆவியானவர்
Wednesday, June 30, 2021
B.A. Manakala
உமது சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும். சங். 51:11.
நம்முடைய பாவங்களினிமித்தம்..., பரிசுத்த ஆவியானவரை நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள தேவன் முடிவு செய்துவிட்டால்..., என்ன செய்வது? உண்மையைச் சொல்லப்போனால்..., சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்தி (யோவா. 16:13), நம்மைப் பாவத்திலிருந்து விலக்கிக் காக்கிறவரே... (கலா 5:16) பரிசுத்த ஆவியானவர் தானே..?!
அப்படியானால்..., தீர்வு..., பாவத்தை அறிக்கையிடுதலும், மனந்திரும்புதலும் தான். நாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தேவனிடம் திரும்பும் போது, அவர் நம்மை மன்னிக்கிறார் (1 யோவா. 1:9). தேவனுடைய மன்னிப்பு.., நம்முடைய புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டது (லூக். 15:11-43). ஆயினும்.., நாம் தொடர்ந்து பாவம் செய்யும்போது, கிருபை பெருகும் என்று எண்ணாதீர்கள் (ரோம. 6:1-2). பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருந்தால்.., நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் (ரோம. 8:9). நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாய் இருந்தால்..., பரிசுத்த ஆவியானவர் உங்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டார் (யோவா. 14:16).
பரிசுத்த ஆவியானவர், நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாக இருக்கிறார் (எபே. 1:14).
ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் ஆவியானவரால் வழிநடத்தப்பட எனக்குக் போதித்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment