பாவம் நம் மகிழ்ச்சியை சூறையாடுகிறது
Thursday, July 01, 2021
B.A. Manakala
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். சங். 51:12.
என் மனைவி, எங்களுக்காக பிரத்யேகமான கறி வகை ஒன்றை தயாரித்தார். அதைக் குறித்து என் குழந்தைகள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால்... அது சாப்பாட்டு மேஜைக்கு வந்தபோது..., அவர்கள் ஏமாற்றமடைந்தனர். காரணம்..., அதில் சில மூலிகைகள் இருந்தன!
இரட்சிப்பின் அனுபவம், நமக்கு மகத்தான மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது (சங். 9:13; 13:5). ஆனால்..., பாவம் செய்த போது, தாவீது அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்து போனான்! (சங். 51:12).
உலகம் என்ன கொடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்: மாம்ச சிற்றின்பங்கள், கட்டுக்கடங்கா ஆசை இச்சைகள் மற்றும் பெருமையையே உலகம் அளிக்கிறது.(1 யோவா. 2:16) இவை தற்காலிகமானவை. மேலும்..., இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெரும்பாலும் இவை களவாடி விடுகின்றன. உலகம் தருகிற இவற்றை நீங்கள் நேசித்தால்..., உங்களால் பிதாவை நேசிக்க முடியாது (1 யோவா. 2:15).
தற்காலிக சிற்றின்பத்திற்காக..., நித்திய பேரின்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள்.
ஜெபம்: கர்த்தாவே, தற்காலிக இன்பங்களை அல்ல..., நித்திய பேரின்பத்தையே பற்றிக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment