சிறந்த பலி!

Saturday, July 03, 2021

B.A. Manakala

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவி தான். தேவனே, நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங். 51:17.

"என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன். மேலும், வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன்" என்று அந்த பரிசேயன் தற்பெருமையுடன் கூறினான் (லூக். 18:12).

தாவீது ராஜாவாக இருந்தார். அதனால், தேவனுக்குக் கொடுப்பதற்கு, அவருக்குப் போதுமானவை இருந்தது. ஆனால்..., எல்லா மிருகஜீவன்களும் தேவனுக்குச் சொந்தமானவைகளாய் (சங். 50:10) இருக்கும் போது, தன்னைவிட..., அதாவது... தன் சொந்த ஆவி, ஆத்துமா, சரீரத்தை விட விலையேறப்பெற்ற வேறு எதையும், தான் தேவனுக்குக் கொடுக்க முடியாது என்பதையும் தாவீது அறிந்திருந்தார்.

நன்மை செய்கிறதும், தேவையுள்ளவர்களோடு நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறதுமே, தேவனுக்குப் பிரியமான பலிகள் (எபி. 13:16). எப்போதும் தேவனைத் துதித்துக் கொண்டே இருக்கிற ஸ்தோத்திர பலியே நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது (எபி. 13:15). நம்முடைய சரீரங்களும் கூட, ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் (ரோம. 12:1).

மனந்திரும்பின இதயத்தோடு கூடிய நொறுங்குண்ட ஆவியே மிகச்சிறந்த பலி! (சங். 51:17).

ஜெபம்: கர்த்தாவே, நீர் விரும்புகிற பலியைச் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்