விரும்புகிறது... நன்மையையா அல்லது தீமையையா?
Tuesday, July 06, 2021
B.A. Manakala
நன்மையைப் பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப் பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். சங். 52:3.
பெற்றோராகிய நாங்கள், உணவோடு சில காய்கறிகளும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், எங்களுடைய குழந்தைகளுக்கு அந்த யோசனையே பிடிப்பதில்லை. ஏதோ ஒன்றை..., நன்மையானது அல்லது தீமையானது என்று நாம் எப்படித் தீர்மானிக்கிறோம்?
நன்மையையும், தீமையையும் அறிந்து கொள்வது தேவனுடைய பண்பு. தோட்டத்தின் நடுவில் இருந்த விருட்சத்தின் கனியைப் புசித்ததின் மூலம்..., நாம் அதைப் பெற்றோம் (ஆதி. 3:22).
'நான் செய்கிற, பேசுகிற, பரிந்துரைக்கிற, போதிக்கிற எதுவாக இருப்பினும்..., அது எப்போதுமே நன்மையானது என்றும், பிறர் செய்கிற, பேசுகிற, பரிந்துரைக்கிற, கற்பிக்கிற எதுவானாலும்..., பொதுவாகவே அது ஒன்றும் அவ்வளவு சிறந்ததல்ல' என்றும் நாம் நினைக்கிறோம். நன்மையை விட, தீமையையே நாம் அதிகம் விரும்ப முனைகிறோம் (52:3). தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்பவர்களுக்கு ஐயோ! (ஏசா. 5:20). நாம் தேவனுக்கு பயப்படாத போது.., தீமைக்குத் திரும்புகிறோம் (நீதி. 3:7).
தீமையை, நன்மை என்று சொல்லிக் கொண்டு..., அதை விரும்பாதீர்கள்; நன்மையை, தீமை என்று சொல்லிக் கொண்டு..., அதை வெறுக்காதீர்கள்.
ஜெபம்: கர்த்தாவே, நன்மையை விரும்பவும், தீமையை வெறுக்கவும் எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment