தேவைப்படும்போது அவற்றை பயன்படுத்துங்கள்.

Wednesday, July 07, 2021

B.A. Manakala

கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய். சங். 52:4.

பழைய ஏற்பாட்டில்..., 'கண்ணுக்கு - கண்', 'பல்லுக்கு - பல்' என்பதே தண்டனைக் கொள்கையாகக் காணப்படுகிறது. பொதுவாக.., நாம் 'என்ன சொல்கிறோம்' என்பதைக் காட்டிலும், நாம் 'என்ன செய்கிறோம்' என்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது (1 யோவா. 3:18; யாக். 2:17).

ஆயினும்..., நாம் கோபமாக இருக்கும் போது.., இந்த விளைவு தலைகீழாக மாறுகிறது: நம் செயல்களைப் பார்க்கிலும், நம் சொற்களே அதிக சக்திவாய்ந்தவை ஆகின்றன (நீதி. 15:1). செயல்கள் அல்ல..., சொற்களே ஆவியையும் நொறுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவையாக இருக்கின்றன (15:4). ஆனால்..., இனிய சொற்களோ..., தேனைப் போன்றவை. அவை ஆத்துமாவுக்கு மதுரமும், சரீரத்திற்கு ஔஷதமுமாய் இருக்கின்றன (16:24).

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைப் பற்றி...,குறிப்பாக, நீங்கள் கோபமாய் இருக்கும் போது பேசுவதைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். அதிகப்படியான பேச்சு, பாவத்திற்கு வழிவகுக்கும் (10:19) என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிறரை ஆசீர்வதித்து, ஊக்குவிக்கும் வார்த்தைகளை மட்டும் விளம்புக! எஞ்சியவற்றை விழுங்குக!

ஜெபம்: கர்த்தாவே, ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்த மட்டும் என்னுடைய வார்த்தைகளைப்  பயன்படுத்த எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்