ஒருவனும் நல்லவன் இல்லை!

Monday, July 12, 2021

B.A. Manakala

அவர்கள் எல்லாரும் வழி விலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. சங். 53:3.

சென்ற வருடம்..., நாங்கள் குடும்பமாக, இந்தியாவிலுள்ள வேறொரு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தோம். நாங்கள் சேர வே‌ண்டிய இடத்தைச் சென்றடைந்த உடன்தானே..., அம்மாநில அரசாங்கம், எங்கள் ஒவ்வொருவர் மீதும், "நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்டவர்" (institutional quarantined) என்ற முத்திரையைக் குத்தியது! எங்களுக்கு சிறு குழந்தை இருந்தபடியால்..., மறுநாளிலே, "வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்டவர்" (home quarantined) என்று வேறொரு முத்திரையைப் பதித்து, அவர்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!

"நல்லவர் இல்லை" என்ற  முத்திரை குத்தப்பட நீங்கள் விரும்புவீர்களா? ஆனால்..., சங் 53:3ல் வலியுறுத்தப்பட்டபடி, உண்மை அதுவாகத் தான் இருந்தது. ஆயினும்..., இயேசுவானவர், "நல்லவன் இல்லை" என்கிற அந்த முத்திரையைத் தம்மீது ஏற்றுக் கொண்டு, நம்மீது பதிந்திருந்ததை, "நீதியுள்ளவன்" என்ற புது முத்திரையால் மாற்றியமைத்தார். (2 கொரி. 5:21).

ஏற்கனவே தேவன் ஒருவரை "நீதிமான்" என்று முத்திரை குத்தியிருந்தால்..., "நல்லவர் அல்லர்" என்று ஒருபோதும், அவர் ஒருவரையும் முத்திரை குத்தாதீர்கள்!

ஜெபம்: கர்த்தாவே, 'நான் நல்லவன் இல்லை' என்று பிசாசானவன் சொல்கிற பொய்யை நம்பாதிருக்க எனக்கு உதவி செய்தருளும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்