காண்கிற கண்
Thursday, July 08, 2021
B.A. Manakala
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து... சங். 52:6.
சில வேளைகளில்..., நான் எதையாவது வெறித்துப் பார்த்தபடி..., பேச்சற்று உட்கார்ந்திருப்பேன். ஆனால்..., நான் எதை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ..., அதை நான் காண்பதில்லை... காரணம்..., என் மனம் வேறெங்கோ சுற்றிக் கொண்டிருக்கும்.
விக்கிரகங்களுக்குக் கண்களிலிருந்தும் காணாது (சங். 115:5; 135:16). அறிவில்லாத ஜனங்களுக்குக் கண்கள் இருந்தும்..., அவைகளைக் கொண்டு காண முடியாது (எரே. 5:21). இயேசு, தம் சீஷர்களிடம்..., "உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணாதிருக்கிறீர்களா?" என்று கேட்டார் (மாற். 8:18).
தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பார்க்கிறதைக் காட்டிலும்..., நீதிமான்களால் இன்னும் ஏராளமானவற்றைக் காண முடியும். பெருந்தொற்று, வெள்ளம், தொழில்நுட்பம், அறிவியல்..., இவற்றை எல்லாம் தாண்டி, அதற்கப்பாலும் அவர்களால் பார்க்க முடியும். தேவன், தம்முடைய ஊழியக்காரருக்கு தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல், ஒரு காரியத்தையும் செய்யார் (ஆமோஸ் 3:7). மேலும்..., செம்மையானவர்கள், தேவனுடைய முகத்தைத் தரிசிக்கிறார்கள் (சங். 11:7).
உங்கள் சரீரப் பிரகாரமான கண்கள் காணக்கூடியவற்றிற்கும் அப்பால் பாருங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, பிரபஞ்சத்திற்கான உம்முடைய பிரமாதமான திட்டங்களைக் காண, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment