எவ்வளவு காலம் அவர் மன்னிப்பார்?
Tuesday, July 13, 2021
B.A. Manakala
உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப் பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள். தேவன் அவர்களை வெறுத்தபடியினால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். சங். 53:5.
நான் ஒரு வளர்ப்பு நாயை ஆசையாக வாங்கினேன். அதை நன்கு பயிற்றுவிக்க, நான் நீண்ட காலமாய் முயற்சிகள் எடுத்தும்..., வருகிற விருந்தினர் அனைவருக்கும், தீங்கு விளைவிக்கிறதாகவே அது தொடர்ந்து இருந்து வருகிறது! நான் இப்போது அதைப்பற்றி நம்பிக்கையற்றுப் போனேன். என் செல்லப்பிராணியிடம், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?
உங்களையும், என்னையும் தேவன் ஒரு அற்புதமான நோக்கத்துடன் படைத்தார் (எரே. 29:11). நாம் அவருடைய வழிகளைத் தொடர்ந்து புறக்கணித்து, நம் வழியிலேயே சென்றால் என்ன செய்வது? தேவன், உலகில் உள்ள ஒவ்வொருவரையும் மன்னித்து, நித்திய வாழ்வை அருளவே விரும்புகிறார் (யோவா. 3:16).
துன்மார்க்கம் உச்சத்தைத் தொட்டபோது.., ஒருமுறை தேவன் அதை, வெள்ளத்தால் தீவிரமாகக் கையாண்டார் (ஆதி. 7). பூமியை, மீண்டும் வெள்ளத்தால் ஒருபோதும் நிர்மூலமாக்க மாட்டார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் (ஆதி. 9:15). நாம் ஏன் அவரிடம் திரும்பக் கூடாது?
தேவனின் கோபத்திலிருந்து தப்பிக்க..., மனந்திரும்புதல் மட்டுமே ஒரே வழி!
ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கியதன் நோக்கத்தை கண்டுணர்ந்தவனாக, என் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு உதவி செய்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment