உங்கள் நல்நாமம் என்ன?
Friday, July 09, 2021
B.A. Manakala
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன். உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது. சங். 52:9.
சில ஜனங்கள்.., தங்களுடைய 'குடும்பப் பரம்பரைப் பெயர்' பற்றின மிகுந்த பெருமை காரணமாக..., அந்தப் பெயருடன் மட்டுமே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் அதிக முனைப்புடன் இருக்கின்றனர்.
இங்கே..., எல்லா நாமங்களுக்கும் மேலான ஒரு நாமம் இருக்கிறது! ஒரு நாளிலே.., முழங்கால் யாவும் அந்நாமத்திற்கு முடங்கும்! (பிலி. 2:9-10). சிலுவையில் அறையப்பட்டேன். இனி நான் அல்ல.., கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலா. 2:20). அவரும், அவருடைய நாமமும் பெருகவும், நானும், என்னுடைய நாமமும், சிறுகவும் வேண்டும் (யோவா. 3:30).
உங்களுடைய நாமங்கள் பரலோகத்தில் எழுதப்பட்டு இருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் (லூக்10:20). ஓர் நாளிலே..., உங்களுக்கு ஒரு புதிய நாமம் கொடுக்கப்படும் (வெளி. 2:17).
பூமிக்குரிய பெயர்கள், தற்காலிகமானவை. பரலோகப் பெயரைச் சம்பாதியுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, பூமிக்குரிய கீர்த்தியைக் காட்டிலும், பரலோகப் பெயரை சம்பாதிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment