தேவன் இல்லையா!?
Saturday, July 10, 2021
B.A. Manakala
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். சங். 53:1.
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தை நீங்கள் கேட்டாலும், அதை உங்களால் பார்க்க முடியாது (யோவா. 3:8). வாழ்க்கையின் கடினமான கால கட்டங்களில்..., 'தேவன் எங்கே?', 'அவர் இருக்கிறாரா?'... என்றெல்லாம் நான் கேட்டால்..., நான் ஒரு மடையனா? நம்மில் யாரானாலும், இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது... இயல்பானது தானே? இயேசு, 'என் தேவனே!, என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?' (சங். 22:1) என்று கேட்டபோது.., பிதாவாகிய தேவன், மனம் புண்பட்டாரா?
தேவனின் ஆழங்களைப் புரிந்துகொள்வதில்.., நாம் குறுகிய வரையறைக்குள் இருக்கிறோம் (யோபு 11:7, 36:26; சங் 145:3). தேவனைப் பற்றிய என் அறிவு..., 'எனக்கு தேவனைத் தெரியாது!' என்று சொல்வதற்கு மட்டும் தான் போதுமானது. மற்ற சிருஷ்டிப்பு அத்தனையும்.. 'தேவன் இருக்கிறார்' என்று பறைசாற்றுகின்றது (ரோம. 1:20).
'தேவன் இல்லை' என்று நீங்கள் நினைப்பதினால்..., தேவன் வருந்தப்போதுமில்லை. அப்படி நீங்கள் நினைக்கிற காரணத்திற்காக..., அவர் இருப்பதை நிறுத்தப்போவதுமில்லை!
ஜெபம்: கர்த்தாவே, உம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், எனக்கு உதவுகிற என் இருதயமோ.., கண்களோ..., எதுவாயினும்..., அதைத் திறந்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment