யார் உண்மையிலேயே புத்திமான்?

Sunday, July 11, 2021

B.A. Manakala

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். சங். 53:2.

என் பிரச்சனைகள் பலவற்றை..., கூகிள்  வலைதளத் தேடல் (Google Search) மூலமாகவே மேற்கொண்டு விடுகிறேன். பிரச்சனையின் சிக்கல் அதிகமாக அதிகமாக..., அதைத் தீர்ப்பதும் கடினமாகிறது. சுமார் 20 பீட்டாபைட்கள் (petabytes) அளவுக்கு தகவல்களைக் கூகிள் (Google) கையாள்கிறது என்றாலும்கூட..., சில சமயங்களில்.., என் தேடல்கள் குழப்பத்தில் தான் முடிவடைகிறது!

மனிதன் ஓர் சமூக ஜீவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான் (ஆதி 2:18). எனவே.., அவன் தனது ஜீவியத்துக்காக, பகிர்ந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும், நம்ப வேண்டும். ஏவாள் இல்லாமல், ஆதாமால் ஜீவிக்க முடியாது. நமக்கு தேவனும் வேண்டும். அத்துடன்.., மற்ற ஜனங்களும் வேண்டும். தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசா 5:21).

இடைவிடாமல் தேவனைத் தேடுவோன், மெய்யாகவே ஞானவான் (சங். 53:2).

ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்நாளெல்லாம்  உம்மைத் தேட எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்