தேவன் அரசாளுகிறார்.

B.A. Manakala தேவன் பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும் பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும். இனி இராதபடிக்கு, அவர்களை நிர்மூலமாக்கும். சங். 59:13. 'இவரை பிரதமராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை' - இவ்வாறு ஒருவேளை நான் அறிக்கை விடுகிறேன் என்றால், அதற்காக அவர் இனி பிரதமர் இல்லை என்று அர்த்தமாகிவிடுமா? இங்கே தாவீது ஜெபிக்கிறதைப் போல, தேவனே எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி செய்கிறார் என்பதை பூமியெல்லாம் அறிந்து கொள்ளத்தக்கதாக, தேவன் எப்பொழுதும் அவரது உக்கிரத்திலே தோன்றி, ஜனங்களை நிர்மூலமாக்க வேண்டிய அவசியம் இல்லை (சங். 59:13). என்ன காரியமானால் என்ன, அவரே ராஜா! (சங். 97:1). தேவன் அரசாளுகிறார் என்பதை எப்போதாவது ஒரு சில வேளைகளில் மட்டுமே நாம் உணரக் கூடும்: வெள்ளம் ஏற்படுகையில் (ஆதி. 6); கடல் இரண்டாகப் பிளக்கையில் (யாத். 14:21); ஏதாவது அதிசயம் நடக்கையில், சர்வதேச பெருந்தொற்று பரவல் காலத்தில், நமக்கு அருமையானவர்கள் மரிக்கையில்,... இன்னும் இது போன்ற நிகழ்வுகளில்... 'எல்லாக் காலங்களிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனே அரசாளுகிறார்' என்பத...