எவ்வளவு காலம் அவர் மன்னிப்பார்?

Tuesday, July 13, 2021 B.A. Manakala உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப் பண்ணினபடியால் , பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள். தேவன் அவர்களை வெறுத்தபடியினால் , நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். சங். 53:5. நான் ஒரு வளர்ப்பு நாயை ஆசையாக வாங்கினேன். அதை நன்கு பயிற்றுவிக்க , நான் நீண்ட காலமாய் முயற்சிகள் எடுத்தும்... , வருகிற விருந்தினர் அனைவருக்கும் , தீங்கு விளைவிக்கிறதாகவே அது தொடர்ந்து இருந்து வருகிறது! நான் இப்போது அதைப்பற்றி நம்பிக்கையற்றுப் போனேன். என் செல்லப்பிராணியிடம் , நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைப்பீர்கள் ? உங்களையும் , என்னையும் தேவன் ஒரு அற்புதமான நோக்கத்துடன் படைத்தார் (எரே. 29:11). நாம் அவருடைய வழிகளைத் தொடர்ந்து புறக்கணித்து , நம் வழியிலேயே சென்றால் என்ன செய்வது ? தேவன் , உலகில் உள்ள ஒவ்வொருவரையும் மன்னித்து , நித்திய வாழ்வை அருளவே விரும்புகிறார் (யோவா. 3:16). துன்மார்க்கம் உச்சத்தைத் தொட்டபோது.. , ஒருமுறை தேவன் அதை , வெள்ளத்தால் தீவிரமாகக் கையாண்டார் (ஆதி. 7). பூமியை , மீண்டும் வெள்ளத்தால் ஒருபோதும் நிர்மூலமாக்க மாட்டார் எ...