Posts

Showing posts from February, 2021

பூமியின் அஸ்திபாரத்தை நிலையாக வைத்திருப்பவர் யார்?

Image
B.A. Manakala பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்து போகிறது. அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். சங். 75:3. ' நீர்மப் பொருட்கலவையைக் கொண்டு சுவர் ' (Slurry wall) எழுப்பக் கூடிய கட்டிடக்கலைத் தொழில்நுட்பமே... , உலக வர்த்தக மையத்தின் ( World Trade Centre) இரட்டை கோபுரங்களுக்கு ( Twin Towers) அடித்தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 1973ல் நிறுவப்பட்ட இவை... , 2001 செப்டம்பர் 11ல் விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்டன. தேவனின் படைப்பில் ஒரு பகுதியான... கற்பாறைகளின் மேல் கட்டுவதை மனிதன் எளிதாகக் காண்கிறான். சொல்லப்போனால்... , தேவன் ஏற்கனவே படைத்து வைத்துள்ளவற்றின் மேலே மட்டுமே நாம் கட்டமைக்கிறோம். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம்! ஆகவே... , அஸ்திபாரங்கள் அவருடையவை. ' தேவனே பூமியின் அஸ்திபாரங்களை வலுவானதாக வைத்திருக்கிறார் என்றால்... , பூமி அதிர்ச்சிகள் ஏன் நிகழ்கின்றன ?'... என்னும் கேள்வியை , நமக்குக் கேட்கத் தோணலாம். பூகம்பங்களை நிறுத்துவதற்கோ.... அல்லது பூமியின் அடித்தளத்தை வலுவாக வைத்திருப்பதற்கோ.... , நீங்களும் நானும் செய்யக்கூடிய ஏதாவது ஒன்று உண்ட...

நியமிக்கப்பட்ட காலம்

Image
B.A. Manakala நியமிக்கப்பட்ட காலத்திலே , யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். சங். 75:2. நான் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக , ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். அதில் , புறப்பாடு நேரம் நள்ளிரவு 00:05 என்று இருந்தது. புறப்படும் நாளில்.. , நான் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். வண்டியும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது. நான் ரயிலில் ஏறி , என் இருக்கைக்குச் சென்று பார்த்தால்... , அங்கே வேறு யாரோ ஒருவர் என் இருக்கையில் உட்கார்ந்திருந்தார்! எங்கள் இருவருக்கும் இடையே நடந்த சில வாக்குவாதங்களுக்குப் பின்னர்... , அவர் என்னுடைய பயணச்சீட்டை வாங்கி , எனக்குக் காண்பித்து.. , அதிலிருந்த என் முன்பதிவானது , முந்தைய நாளுக்கானது என்பதைச் சுட்டிக்காட்டினார்! ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு (பிர. 3:1-8). துன்மார்க்கருக்கு எதிராக நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதற்குக் கூட , தேவன் ஒரு காலத்தை நியமித்திருக்கிறார் (சங். 75:2). என்னைப் பொருத்தவரை , நான் ரயில் நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து விட்டேன் என்ற  நிச்சயத்தோடு இருந்தேன். ஆனாலும் கூட... , தவறு என் மீது தான் இருந்தது. தேவன் , திட்டமிட்ட காலத்திலும் , நியமிக்...

எங்குமுள்ள ஜனங்கள் கூறுகிறார்கள்

Image
B.A. Manakala உம்மைத் துதிக்கிறோம் , தேவனே , உம்மைத் துதிக்கிறோம். உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. சங். 75:1. கொரோனா பெருந்தொற்று... , படிப்படியாகக்  குறைந்து கொண்டு வந்தாலும் , உலகம் எங்குமுள்ள ஜனங்கள்... , அது எங்கு தொடங்கியது , எப்படிப் பரவுகிறது , எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் , எப்படி குணப்படுத்த வேண்டும்... , என இப்பெருந்தொற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய ஜனங்கள் , அவருடைய கிரியைகளைப் பற்றிக் கூறி அறிவிக்கிறதை நாம் கேட்கிற போது , இன்னும் அதிகக் கருத்தோடு நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. தேவன் அற்புதமானவர். அவருடைய செயல்களும் எப்போதுமே அற்புதமானவை. இவை மட்டுமே... , எங்கும் , எப்போதும் , எல்லோரிடமும் , நீங்கள் தைரியமாகப் பறைசாற்றக் கூடிய விஷயங்கள். இயேசு கிணற்றருகே சமாரிய ஸ்திரீயுடன் பேசி முடித்த பின்பு , அவள் ஊருக்குள் திரும்பிச் சென்று , தன் கிராமத்தார் அனைவருக்கும் அதைப் பறைசாற்றினாள். அந்த ஊரார் வந்து , இயேசுவுக்கு செவிகொடுத்து , அவரில் விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 4). நம்முடைய வாழ்க்கை , நம்மைச் சுற்றியு...

எளிமையும் சிறுமையுமானோர் தேவனைத் துதிக்கின்றனர்

Image
B.A. Manakala துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்ப விடாதிரும். சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும். சங். 74:21. கிரெடிட் சூசி உலகளாவிய சொத்து அறிக்கைப்படி ( Credit Suisse Global wealth report)...., " 1% சதவீத பணக்கார இந்தியர்கள் , நாட்டின் செல்வத்தில் , 58.4% சதவீதத்தை வைத்திருக்கிறார்கள்" ஆக்ஸ்பாம் அறிக்கைப்படி ( Oxfam report)…, " இந்தியக் கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பானது... , நாட்டின் முழு வறுமையையும் இரு முறை அகற்றப் போதுமானதாக இருக்கும்." ' எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால்.. , செல்வந்தராக இருக்க வேண்டியது முக்கியம் '... என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சில பணக்காரர்களை நாம் கேட்டால்... , எல்லாம் அவர்களுக்கு நல்லபடியாக நடக்கிறதா இல்லையா என்று அவர்கள் சொல்வார்கள். ' ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது மிகவும் அரிது ' என்று இயேசு கூறினார் (மாற். 10:24-25). அதே போல... ,  தேவனைத் துதிப்பதும் , அவரிடம் விண்ணப்பம் பண்ணுவதும் கூட , ஐசுவரியவான்களுக்கு மிகவும் கடினமான காரியமே. நல்ல செய்தி என்னவென்றால் , ஏழைக...

சமுத்திரத்தைப் பிளந்தார்!

Image
B.A. Manakala தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து , ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர். சங். 74:13. டைட்டன்( Titan) கைக்கடிகார தயாரிப்பாளர்களிடம் , பின்னோக்கி இயங்கும் ஒரு கடிகாரத்தைச் செய்து தரும்படி நாம் கேட்டால்... , அதற்கு அவர்கள் ஒரு நிமிட எந்திர மாற்றத்தை மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால்... , அண்ட சராசரங்களைப் படைத்த சிருஷ்டிகருக்கு... , சூரியனை அதின் மண்டலத்திலே 24 மணி நேரம் நிறுத்தி வைப்பதும் , அதன் பாகையைப் பின்னிட்டுத் திரும்பச் செய்வதும் , கடலைப் பிளப்பதும் , தண்ணீரின் மேல் நடப்பதும் , மரித்தோருக்கு ஜீவன் கொடுப்பதும்.... , மிகவும் எளிதானதாக இருக்கும் இல்லையா ? அவரால் முடியாதது தான் என்ன ?! சங்கீதம் 74ல் 13 முதல் 17 வரையிலான வசனங்களை நாம் வாசித்தால்... , அவை நமக்கு தேவனின் வல்லமை பற்றின சில குறிப்புகளைத் தரலாம். தேவன் செய்த மற்றும் செய்கிற அனைத்து பெரிதான , வியத்தகு அற்புதங்களும்... , அவர் உண்மையிலேயே என்ன செய்ய முடியுமோ.... அவற்றைவிட மிகக் குறைவான... , அணுவிலும் சிறிய அளவே ஆகும். இப்படிப்பட்ட ஒப்பீடுகளும் கூட... , தேவனைக் கீழ்ப்படு...

பூர்வ காலமுதல் உள்ள ராஜா!

Image
B.A. Manakala பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்து வருகிற தேவன் பூர்வ காலமுதல் என்னுடைய ராஜா. சங். 74:12. 2018ம் வருடம்... , நாங்கள் குடும்பமாக வேல்ஸ் ( Wales) தேசத்திற்கு விஜயம் செய்த போது... , அங்குள்ள டிரெலெக் ( Trellech) என்ற இடத்தில் இருந்த ஹரால்ட் கற்களைப் ( Harold's stones) பார்ப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. வெண்கல யுகத்திற்கு 3500 ஆண்டுகள் முந்தைய  காலகட்டத்தைச் சார்ந்த அவற்றைப் பார்த்ததே... பிரமிப்பாகவும் , சுவாரஸ்யமாகவும் இருந்தது! இவ்வளவு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கும் ஒன்றைப் பற்றிப் புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதல்ல! பூமியில் பலர் ராஜாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு , ராஜாக்களாக அபிஷேகம் பண்ணப்பட்டனரே ஒழிய , அவர்களில் ஒருவரும் ராஜாவாகவே பிறந்து வரவில்லை. இங்கே இருக்கிற ஒருவர்... , கடந்த யுகாயுகங்களுக்கும் , இனி வரப்போகிற யுகங்களுக்கும் ராஜாவாக இருக்கிறவர். அவரை அபிஷேகம் பண்ணத்தக்க ஒருவரும் அவருக்கு மேல் இல்லை! பூமிக்கு இரட்சிப்பைக் கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவர் மாத்திரமே (சங். 74:12) ; அவர் ஒருவரே சதாகாலங்களிலும் அரசாளுகிறவர் ...

ஆற்றல்மிக்க கரம்!

Image
B.A. Manakala உமது வலது கரத்தை ஏன் முடக்கிக் கொள்கிறீர் ? அதை உமது மடியிலிருந்து எடுத்து , ஓங்கி நிர்மூலமாக்கும். சங். 74:11. மிகவும் சக்திவாய்ந்து உதைக்கக் கூடிய விலங்குகளுள்.... ஒட்டகங்களும் ஒன்று. அவைகள் , கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்... , தம் நான்கு கால்களாலும் , நான்கு வெவ்வேறு திசைகளில் உதைக்கக் கூடியவை. இவ்வாறாக உதைப்பதன் மூலம் , சில வேளைகளில் , சிங்கங்களிடம் இருந்து கூட அவைகள் தப்பிவிடுகின்றன. நாம் சிந்திக்கக்கூடிய ஏதோ ஒன்றுடன் , தேவனின் சக்திவாய்ந்த கரத்தை ஒப்பிடுவது என்பது... வெறும் மதியீனமாகவே இருக்கும் என்றே நான் நம்புகிறேன். அவருடைய கரத்தை சிலுவையுடன் ஆணி அடித்து அறைந்த போர்ச் சேவகர்களுக்குத் தெரியாது.... , அவருடைய கரங்கள் எவ்வளவு ஆற்றல்மிக்கவை என்று! ரோம அதிகாரிகள் , அவருடைய கல்லறையை முத்திரையிட்ட போது , அதிலிருந்து வெளியே வர அவருக்கு வல்லமை உண்டு என்பதை அவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. பூமியின் தூளில் இருந்து நம்மை உருவாக்கின அந்தக் கரங்களை மறந்துவிடாதிருங்கள் (ஆதி. 2:7) ; ஐந்து அப்பம் , இரு மீன்களை ஆசீர்வதித்த கரங்கள் (யோவா. 6) ; யாக்கோபின் தொடைச் சந்தைத் தொட்ட கரங்கள...

தேவனை நிந்தித்து, கனவீனம் பண்ணுகிறோமா?

Image
B.A. Manakala தேவனே , எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான் ? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ ? சங். 74:10. உங்களை நேருக்கு நேர் சந்திக்கிற போதெல்லாம் , உங்களைப் புகழ்ந்து தள்ளுகிற ஒரு நபரை நினைத்துப் பாருங்கள். அதே நபர் , அவருக்கு வாய்ப்புக் கிடைக்கிற பொழுதெல்லாம் , உங்களைப் பற்றிப் புறங்கூறித் திரிகிறார் என்றால்... , அவருடைய புகழ்ச்சிகளுக்கு எந்த மதிப்புமே இல்லை. அநேகமாக , நாம் வேண்டுமென்றே தேவனை கனவீனம் பண்ணுகிறதில்லை. ஆனால் , வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்கும் போது , நாம் அவரை கனவீனம் பண்ணுகிற பல்வேறு வழிகளைப் பற்றி நாம் அறிவோம். அவற்றுள் இரண்டு என்னவாக இருக்கலாமென்றால்.... , (1) நம்முடைய இருதயங்கள் அவரைவிட்டு தூரமாய் இருக்கையில் , நம்முடைய உதடுகளால் மாத்திரம் தேவனைக் கனம் பண்ணுதல் (ஏசா. 29:13).  (2) நியாயப்பிரமாணத்தை மீறுவதின் மூலம் , அவரைக் கனவீனம் பண்ணுதல் (ரோம. 2:23). நம் எல்லாருக்குமே , அந்தரங்கமான மற்றும் வெளியரங்கமான வாழ்க்கை உள்ளது. அந்த இரண்டிலுமே தேவனை கனம் பண்ணுவதும் , மாய்மாலமான இரட்டை வாழ்க்கை வாழாதிருப்பதும் முக்கியமானது. நான் தேவனை மெய்யாய் கனம் பண்ணத்தக்கத...

முன்பு நடந்த அற்புதங்களை இப்பொழுது காண்பதில்லையா?

Image
B.A. Manakala எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம். தீர்க்கதரிசியும் இல்லை. இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. சங். 74:9. பல வருடங்களுக்கு முன்பு... , தொடர்வண்டித் தடத்தின் ( railway track) அருகே இருந்த ஓர் அறையிலே நான் வசித்து வந்தேன். முதலில் சில நாட்களுக்கு... , இரவிலே தொடர்வண்டி( train)  எப்போதெல்லாம் கடந்து செல்லுமோ , அப்போதெல்லாம் நான் என் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வேன். ஆனால் படிப்படியாக... , வண்டிகள் எப்போது கடந்து செல்கின்றனவென்றே கண்டுகொள்ளாத அளவிற்கு... , அந்த சத்தத்திற்கு நான் மிகவும் பழகிப் போனேன்! அற்புதங்களைக் காணாததைக் குறித்தும் , தீர்க்கதரிசிகளும் இல்லாததைக் குறித்தும் சங்கீதக்காரர் குறைபட்டுக் கொள்கிறார் (சங். 74:9). சில சூழ்நிலைகளில் தேவன் எவ்விதம் கிரியை செய்கிறார் என்பதைப் பல காரணங்களுக்காக நாம் புரிந்து கொள்ளாதிருக்கலாம். அவருடைய சத்தத்தை நாம் கேட்காதிருக்கலாம். அல்லது அவருடைய பிரசன்னத்தை நாம் அனுபவிக்காதிருக்கலாம். கீழ்க்காண்பவை... இதற்கான சில காரணங்களாக இருக்கக் கூடும்: 1) தேவனுடைய கிரியை , குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகத் ...

பரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்தல்

Image
B.A. Manakala உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி , உமது நாமத்தின் வாசஸ்தலத்தை தரைமட்டும் இடித்து , அசுத்தப்படுத்தினார்கள். சங். 74:7. ஒருமுறை , இந்து நண்பர் ஒருவருடன் நான் சென்ற போது , ஒரு இடத்திலே... , அவர் தன் காலணிகளை கழற்றுவதை நான் கவனித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை காரணமாக , நானும் என்னுடைய காலணிகளைக் கழற்றினேன். மக்கள் அந்தப் பகுதியை செருப்புகள் அணியாமலே தான் கடந்து சென்றனர்.. , ஏனென்றால் , அந்தப் பகுதி... ஓர் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவருடைய தெய்வத்திற்காய் அவர் கொண்டிருந்த பக்தியைக் கண்டு நான் வியப்புற்றேன். ஆலயக் கட்டிடங்களை பாழாக்குவது , மற்றும் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவது ஆகிய இரண்டையுமே... தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்தும் காரியங்களாகக் கருதலாம்... ஏனென்றால் , நம்முடைய சரீரங்களும் தேவனுடைய ஆலயங்களே (1 கொரி. 6:19). ஆனாலும்... ,  தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறியாதிருக்கிறபடியால் , இயேசு செய்ததைப் போலவே , நானும் தேவனிடம் ஜெபித்து , அவர்களை மன்னிக்கும்படி கேட்கவே விரும்புகிறேன் (லூக். 23:34). எப்படியிருந்தாலும்.. ,  இந்த உலகில் பல உ...

தேவன் உலாவட்டும்...

Image
B.A. Manakala நெடுங்காலமாக பாழாய்க் கிடக்கிற ஸ்தலங்களில் , உம்முடைய பாதங்களை எழுந்தருளப் பண்ணும். பரிசுத்த ஸ்தலத்திலே , சத்துரு அனைத்தையும் கெடுத்துப் போட்டான். சங். 74:3. என்னுடைய பள்ளி நாட்களின் கூச்சல் மிகுந்த வகுப்பறைகளை... , மலரும் நினைவுகளாய் இன்னும் நான் நினைவுகூர்கிறேன். எப்பொழுதெல்லாம் முதல்வர் உள்ளே நுழைகிறாரோ... , அப்போதெல்லாம் அங்கு நிலவும் நிசப்தம்... , என் நண்பர்கள் விடும் மூச்சையும் நான் கேட்கக்கூடிய அளவுக்கு இருக்கும்! மனிதன் பாவம் செய்த போது... , முதலாவது தேவன் ஏதேன் தோட்டத்தில் உலாவினார் (ஆதி. 3:8). பின்னர் தேவன் மனிதனாகி , தமது வாசஸ்தலத்தை நம்மோடு கூட அமைத்துக் கொண்டார் (யோவா. 1:14). தேவனை , நம் நடுவே உலாவ அனுமதிக்கிறதின் மூலம் , அவர் நம் தேவனாகிறார். நாம் அவர் பிள்ளைகள் ஆகிறோம் (லேவி. 26:12). ஒருமுறை.... , தம்முடைய சீஷர்கள் புயல்காற்று சீறி வீசின கடலில் பயணிக்கையில்... , இயேசு தாமே கடல் மேல் நடந்து வந்து , அவர்கள் படவில் ஏறினார். உடனே காற்று அமர்ந்தது. சகலமும் அமைதியாயிற்று (மத். 14:32). நம் நடுவில் உலாவும்படி தேவனைக் கேட்டுக் கொள்வதே... , நம் பிரச்சனைகளுக்குத் தீ...

நீண்ட காலத்திற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டோம்!

Image
B.A. Manakala நீர் பூர்வ காலத்தில் சம்பாதித்த உமது சபையையும் , நீர் மீட்டுக் கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும் , நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும். சங். 74:2. நான் மிகவும் சிறுவனாக இருந்த போது... , என்னுடைய கொள்ளுப் பாட்டியம்மா , அவர்களுடைய பள்ளிப்பருவத் தோழியைப் பற்றியும்... , எப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் செல்வார்கள் , எப்படி ஒன்றாக விளையாடுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் என்னிடம் கூறுவார்கள். 1980களில் தனது 96வது வயதிலே அவர்கள் மரித்துப் போனார்கள். ஒரு சிறுவனாக... , எத்தனை வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் இளம் பெண்களாக இருந்து... , ஒன்றாக விளையாடினார்கள்.. என்பதை , அப்போது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் , இன்று நான் கற்பனை செய்து பார்த்தால்.... , அது ஒரு 130 ஆண்டுகால பழங்கதை! ' தேவ ஜனங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே அவரால் தெரிந்து கொள்ளப்பட்டார்கள் ' என்பதை சங்கீதக்காரர் தேவனுக்கு நினைவுபடுத்த முயற்சிக்கிறார் (சங். 74:2). தேவனுக்கு இதுபோன்ற நினைவூட்டல்கள் தேவைப்படுகின்றனவா ? உண்மை என்னவென்றால்... , ' உலகத் தோற்றத்தி...