எனக்குச் செவிசாய்க்கும் செவி!

B.A. Manakala உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து , என்னைக் காத்தருளும். உமது செவியை எனக்குச் சாய்த்து என்னை இரட்சியும். சங். 71:2. சமீபத்தில்... , ஒரு முதியவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குக் கிட்டத்தட்ட காது கேட்கவில்லை. நான் அவரோடு பேசின போதெல்லாம்... , அடிக்கடி அவர் தனது வலது கையை தன் வலது காதுக்குப் பின்னால் வைத்து , என்னிடமாய் தன் செவியை சாய்த்துக் கொண்டு... , நான் பேசியதை மறுபடியும் கூறும்படி என்னிடம் கேட்டார். அவருடன் நான் மிகவும் உரத்த தொனியில் பேச வேண்டியதாய் இருந்தது. தான் மீட்கப்படவும் , காக்கப்படவும் விரும்பினதால்... , தேவனுடைய செவியை தன்னிடமாய் திருப்புவதற்காக... சங்கீதக்காரருடைய ஜெபம் இருந்தது (சங். 71:2). நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கக் கூடாதபடிக்கு தேவனுடைய செவி மந்தமாகவில்லை (ஏசா. 59:1). அவரைத் தொழுதுகொண்டு , அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு , அவர் செவிகொடுக்கிறார் (யோவா. 9:31). நான் கோபமாயிருந்து , அபத்தமானவற்றைப் பேசுகையில்... , கர்த்தர் என்னிடமாய்த் தன் செவியைச் சாய்க்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்! கர்த்தர் என்னிடமாய்த் தன் செவியைச் சாய்க்கைய...