Posts

Showing posts from September, 2020

சிசிடிவி!

Image
30 September 2020 B.A. Manakala ராஜாவோ தேவனில் களிகூருவார். அவர்பேரில் சத்தியம் பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். சங். 63:11. ஒருமுறை , ஒரு உணவகத்திலே , ஓர் பெண்மணி உணவருந்திக் கொண்டிருந்தாள். சாப்பாட்டின் இடையே ,  அவளது உணவிலிருந்து உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை அவள் எடுத்தாள். கத்திக் கூச்சலிட்டு , சுற்றி இருந்த எல்லா வாடிக்கையாளர்களின் கவனத்தையும் அவள் ஈர்த்தாள். அந்த உணவக அதிகாரிகள் அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்டனர். பின்பதாக... , சிசிடிவி கண்காணிப்புக் கேமராவின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது தான்... அவள் தானே அந்த கண்ணாடித் துண்டை உணவில் வைத்த குட்டு வெளிப்பட்டது! சத்தியத்திற்காக நிற்பதன் வாயிலாக , நாம் தேவனைத் துதிக்கிறோம். ஆனால் , பொய்யரோ மவுனமாக்கப்படுவர் (சங். 63:11). பெரும்பாலும்.. , பொய்யர்கள் செழிப்பது போலத் தோன்றலாம். ஆனால்.. , அவர்களால் நீண்ட தூரம் வரை செல்ல முடியாது. யூதேயா தேச ஆளுநரின் வழக்கப்படி , பிலாத்து.. , " நீங்கள் யார் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்... பரபாஸா... (மிகக் கொடிய சிறைக்கைத...

சதித்திட்டங்கள்

Image
29 September 2020 B.A. Manakala என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ , பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். சங். 63:9. பிரதமரைக் கொலை செய்யப் போவதாக , மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட ஒரு மின்னஞ்சலை ,  2020 ஆகஸ்ட் 8ம் தேதி ' தேசியப் புலனாய்வுத் துறை ' பெற்றது. இதுபோன்ற மிரட்டல்களைப் பெறுவது வழக்கமான நடைமுறையாய் இருக்கக் கூடும். இப்படிப்பட்ட மிரட்டல்கள் இருந்தாலும் கூட... , தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ,  அலுவலகங்களின் செயல்பாடுகள் சகஜமான முறையில் , தொடர்ந்து நடைபெறுகின்றன. தனக்கு எதிராக சதி செய்கிறவர்கள் யாரானாலும் , அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று தாவீது நிச்சயமாய் நம்புகிறார் (சங். 63:9,10). வாழ்வில் முன்னேறிச் செல்வதற்கு , நமக்கும் இந்த உறுதி அவசியம். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக , சாத்தான் தொடர்ந்து சதி செய்கிறான். ஆனாலும் , நாம் தொடர்ந்து தேவன் மீது கவனத்தைச் செலுத்தி , நம் இலக்குகளை அடைய வேண்டும். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொண்டு , நாம் தொடர்ந்து முன் செல்ல வேண்டும் (எபே. 6:13). சாத்தானின் சதித்திட்டங்களைக் குறித்த பயத்திலிருந்து விடுபடுவதற்கு , நீங்கள் ...

பற்றிக்கொள்ளல்

Image
28 September 2020 B.A. Manakala என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது. உமது வலது கரம் என்னைத் தாங்குகிறது. சங். 63:8. 70 பேரின் உயிரைக் காவு வாங்கிய பெட்டிமுடி நிலச்சரிவுக்குப் பின்னர்.... , " கூவி" என்ற நாய் ஒன்று , தொடர்ந்து பல நாட்களாக , ஆற்றங்கரை ஓரத்திலேயே காத்துக்கிடந்தது. காவல்துறையினர் வந்து அங்கே தேடி , அந்த நாய் காத்துக்கிடந்த இடத்திலிருந்து அதன் எஜமானருடைய சடலத்தைக் கண்டெடுத்தனர்! கடைசியாக... , " கூவி" அந்த காவலர்களுள் ஒருவரால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டது. தாவீது , அவரைப் பாதுகாப்பாய்த் தாங்கிப் பிடித்திருந்த தேவனைப் பற்றிக்கொண்டார் (சங் 63:8). இந்த உலகம் , நாம் பற்றிக்கொள்ளத்தக்க ஏராளமான விஷயங்களை நமக்கு வழங்குகிறது. இப்பூமியில் வாழ்கிறதால் , நாம் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும்  மனிதர்களுடன் உறவையும் , நெருக்கத்தையும் வளர்த்துக் கொள்கிறோம். ஆனாலும் , அவற்றுள் ஏதாவது ஒன்றை நாம் பற்றிக்கொள்வோமேயானால்... , ஒரு நாளில் நாம் ஏமாற்றமடையக் கூடும். நாம் என்றென்றும் சேர்ந்து வாழக்கூடிய ஒருவருடன் பற்றுதலாய் இருங்கள்! நீங்கள் பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்...

மெய்யான திருப்தி

Image
27 September 2020 B.A. Manakala நிணத்தையும் , கொழுப்பையும் உண்டது போல என் ஆத்துமா திருப்தியாகும் ;  என் வாய் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். சங். 63:5. ஒரு பிச்சைக்காரர் என்னிடம் வந்தார். நான் அவர் மீது இரக்கப்பட்டு , அவரைக் குளிக்க வைத்து , வேறு ஆடை அணிவித்து , ஒரு கேளிக்கைப் பூங்காவிற்கு அவரை அழைத்துச் சென்றேன். ஆனாலும்..... இன்னும் அவர் உற்சாகமற்று , இருண்டு போய் இருந்ததை நான் கண்டேன். அந்த நாளின் இறுதியில் , அவர் என்னிடம் , " எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா ?" என்று கேட்டார். அவர் உணவை உட்கொண்ட பிறகு தான் , அவருடைய முகம் பிரகாசமாக மாறியது. உலகில் உள்ள மிகச் சிறந்த ராஜபோக உணவு கூட , உங்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் போகக்கூடும். தாவீது , தேவனிடமிருந்து திருப்தியை அனுபவிக்கிறார் (சங் 63:5). நம்மை மெய்யாகவே திருப்திப்படுத்துகிறது எது என்பதை நாம் அடையாளம் காணாவிட்டால் , நம்முடைய ஏராளமான நேரத்தையும் , ஆற்றலையும் நாம் வீணடித்துக் கொண்டிருப்போம். உணவு , உடை , உறைவிடம் , உடைமைகள் , உடல் ஆரோக்கியம் உட்பட .... , இவ்வுலகில் நமக்கு இருக்கிற அனைத்துமே , தேவனால் அருளப...

என் ஜீவனுள்ளமட்டும்

Image
26 September 2020 B.A. Manakala என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து , உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். சங். 63:4. நண்பர்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுக்கையில் , " என் ஆயுசுக்கும் உன்னை நான் மறக்க மாட்டேன்" என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இத்தகைய வாக்குறுதிகள் எவ்வளவு காலத்திற்கு உண்மையாக இருக்குமோ... என்று நான் வியக்கிறேன். தாவீது தன் ஜீவனுள்ளமட்டும் தேவனைத் துதிக்க தீர்மானிக்கிறார் (சங். 63:4). நாம் உயிரோடிருக்கும் வரைக்கும்.... சாப்பிடுவது , தூங்குவது... போன்ற பல விஷயங்களை , அவற்றைப் பற்றின எந்த ஒரு முடிவும் எடுக்காமலே கூட நாம் செய்வோம். அதோடுகூட... , இன்னும் பல்வேறு காரியங்களை அன்றாடம் , வழக்கமாய்ச் செய்வதற்கும் , நாம் முடிவு செய்கிறோம். நாம் தேவனை எப்பொழுதும் துதிப்பதற்குத் தீர்மானிப்போமென்றால் , தாவீதைப் போலவே , நாமும் கூட , நம் ஜீவனுள்ள நாளெல்லாம்... நன்மையும் , கிருபையும் நம்மைத் தொடரும் என்கிற நிச்சயத்தோடு இருப்போம் (சங் . 23:6) . உங்கள் ஜீவனுள்ளமட்டும் , நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் ? உங்கள் ஜீவனுள்ளமட்டும் , நீங்கள் செய்யும் ஒரே ஒரு விஷ...

தவறாத அன்பு

Image
25 September 2020 B.A. Manakala ஜீவனைப் பார்க்கிலும் , உமது கிருபை நல்லது ; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். சங். 63:3. லக்கி ( Lucky) மற்றும் கோல்டுஸ்டார் ( Goldstar) ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்ததின் விளைவாக உருவானதே எல்.ஜி. ( LG) நிறுவனம் என்றாலும்கூட , எல்.ஜி. ( LG) என்பதின் விரிவாக்கம் ' வாழ்க்கை நன்றாக இருக்கிறது ' (Life's Good) என்று மக்கள் பலர் நினைக்கின்றனர். எப்படி இருந்தாலும் , எல்.ஜி. தயாரிப்புகள் இன்று வாழ்க்கையை எளிதாக்குகின்றன. தாவீது , வாழ்க்கையைக் காட்டிலும் , இன்னும் சிறப்பான ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிடுகின்றார். அது தேவனின் குறைவற்ற அன்பு (சங். 63:3). எல்லா நவீன வசதிகள் மற்றும் முன்னேற்றங்களுடன் வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாய் அனுபவிப்போம். ஆயினும் , எது சிறந்தது , மதிப்புமிக்கது , நிரந்தரமானது என்பதை மறவாதிருப்போமாக. அதே வேளையில்... , வாழ்க்கை நன்றாக இருக்கும் போது மட்டும் தான் தேவன் நல்லவர் என்று நினைக்காதேயுங்கள். அவருடைய தவறாத அன்பு , நம் வாழ்வின் கஷ்டங்களின் போதும் நம்மை நிலைநிறுத்துகிறது. உங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் , தேவனுடைய குறைவற்ற அன்ப...

உற்று நோக்குதல்

Image
24 September 2020 B.A. Manakala இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து , உமது வல்லமையையும் , மகிமையையும் கண்டேன். சங். 63:2. அன்றொரு நாள் , அந்தி சாயும் வேளையில் நாங்கள் மொட்டைமாடியில் இருந்த போது , வானத்தில் ஒரு சில நட்சத்திரங்கள் இருந்தன. என் மகன் சுற்றி நடந்து கொண்டிருக்கையில் , ஒரு நட்சத்திரத்தை உற்று நோக்கியவனாய் என்னிடம் , " அப்பா , அந்த நட்சத்திரத்தைப் பாருங்கள் ; நான் எங்கு போனாலும் அதுவும் என் கூடவே வருகிறது" என்று சொன்னான். தாவீது , தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் கண்டு , அவருடைய வல்லமையையும் , மகிமையையும் உற்று நோக்கினார் (சங். 63:2). இதுவே , எல்லா சூழ்நிலைகளிலும் , ஒருவர் தொடர்ந்து பிழைப்பதற்கான , முக்கிய விசையாய் இருக்கிறது. இன்று நம்மில் சிலர் , கொரோனா நோய்க்கிருமியையும் , அதன் பின்விளைவுகளையுமோ... , அல்லது வேறு ஏதோ சில பிரச்சனைகளையோ... கூர்ந்துநோக்கிக் கொண்டிருக்கலாம். தேவனுடைய வல்லமையை நம்மால் கருத்தூன்றிப் பார்க்க முடிந்து விட்டால்.. , பின்பு வேறெந்த ஒரு காரியத்தாலும் நாம் அசைக்கப்பட முடியாது! இயேசு கிறிஸ்துவின் மீது நம் கண்களைப் பதிக்கு...

ஆத்தும தாகம்

Image
23 September 2020 B.A. Manakala தேவனே , நீர் என்னுடைய தேவன் ; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன். வறண்டதும் , விடாய்த்ததும் , தண்ணீரற்றதுமான நிலத்திலே , என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங். 63:1. இயேசு , சிலுவையில் மொழிந்த வாக்கியங்களுள் ஒன்று ," தாகமாயிருக்கிறேன்" என்பதாகும். அவரைச் சுற்றி இருந்த ஜனங்கள் , அதை சரீரப்பிரகாரமான தாகமாகவே புரிந்து கொண்டனர். அவருடைய தாகமோ , அநேகமாக சரீரப்பிரகாரமான தாகத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. தாவீது வறண்ட நிலத்திலே இருக்கிறதால் , அவர் சரீரப்பிரகாரமாகவும் , ஆவிக்குரிய பிரகாரமாகவும் தாகமாய் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது (63:1). நாம் இவ்வுலகில் வாழ்வதால் , சரீரப்பிரகாரமான பல விஷயங்களுக்காக , நாம் தாகமாயிருக்கிறோம். ஆனால் , நம்முடைய ஆத்துமாவை திருப்திப்படுத்துவதே மிகவும் முக்கியம். ஒருமுறை , இயேசு தாமே சமாரியா ஸ்திரீக்கு ஜீவத்தண்ணீரை வழங்கி , " நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது. அது அவனுக்குள்ளே நித்திய ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாய் இருக்கும்" என்றார் (யோவா. ...

பலனும் பிரதிபலனும்

Image
22 September 2020 B.A. Manakala கிருபை உம்முடையது. ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர். சங். 62:12. ஒரு முறை , நாங்கள் ஒரு டால்ஃபின் கண்காட்சியைக் கண்டுகளித்தோம். அந்த டால்ஃபின்கள் செயலாற்றின விதத்தைக் கண்டு , நாங்கள் அதிசயித்துப் போனோம். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னர் , அந்த டால்ஃபின்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று , அவைகளுக்கு வெகுமானமாகக் கொடுக்கப்பட்டதை நாங்கள் கவனித்தோம். மனிதர்களாகிய நாம் வெகுமதிகளை விரும்புகிறோம். எனவே தான் , வெகுமானங்களை நாம்... கொடுக்கிறோம்... ; பெறுகிறோம்... ; எதிர்பார்க்கிறோம். இவ்வுலகில் நாம் பெறுகிற வெகுமதிகள் , தொடர்ந்து முன்னேறிச் செல்ல , பல்வேறு விதங்களில் நம்மை ஊக்குவிக்கின்றன. ஆனாலும் , இப்பூவுலகில் , எப்போதும் நாம் பலனை எதிர்பார்த்தோமேயானால் , ஒருவேளை நாம் ஏமாந்து போகலாம். நித்திய ஆசீர்வாதங்களில் கவனம் செலுத்துங்கள். தேவன் உங்களை ஏமாற்ற மாட்டார். அவர் நீதியுள்ளவர் ஆகையால் , மனுஷனுடைய துன்மார்க்கத்திற்கான பிரதிபலனும் கண்டிப்பாய் இருக்கும்.   இறுதிப் பலன் மீது பிரதான கவனம் செலுத்த , நீங்கள் என்ன செய்வீர்கள் ? நீங்கள் செய்கிற எல...

அதை பலமுறை கேளுங்கள்

Image
21 September 2020 B.A. Manakala தேவன் ஒருதரம் விளம்பினார் ; இரண்டுதரம் கேட்டிருக்கிறேன். வல்லமை தேவனுடையது என்பதே. சங். 62:11. எங்கள் இளம் வயதிலே , நாங்கள் எங்கள் அம்மாவோடு சண்டை போடுவது வழக்கம். சில சமயங்களில் , அவர்கள் மிகவும் கோபப்படுகையில் , ' நீங்கள் என்னைப் பார்க்கிறதற்கு ஏங்குவீர்கள் ' என்று சொல்வார்கள். 1995ம் ஆண்டிலேயே அவர்கள் காலமாகி விட்டாலும்... , அவர்களுடைய வார்த்தைகள் மட்டும் , இன்று வரையிலும் என் காதுகளில் அடிக்கடி தொனித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இன்று நாம் வாழ்கிற கூச்சலும் குழப்பமும் நிறைந்த இவ்வுலகிலே.. , நாம் விரும்புகிறதைக் கேட்கவும் , பார்க்கவும் ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றை , நாம் விரும்புகிற அளவுக்கு தியானிக்கவும் செய்கிறோம். நாம் நம்முடைய உள்ளான மனிதனை பலப்படுத்த விரும்பினால்... , எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கடி , தேவனுடைய சத்தம் நம் காதுகளில் எதிரொலிக்க , நாம் அனுமதிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையில் இரவும் பகலும் தியானமாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (சங். 1:2). நாள் முழுவதும் தியானிப்பதற்காக , நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்க...

வாழ்வின் மையப்பகுதி

Image
20 September 2020 B.A. Manakala கொடுமையை நம்பாதிருங்கள் ; கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள் ; ஐசுவரியம் விருத்தியானால் , இருதயத்தை அதின் மேல் வைக்காதேயுங்கள். சங். 62:10. நான் என்னுடைய பணப்பையை எங்கே வைக்கிறேன் என்பதைக் குறித்தும் , அதை எவ்விதம் கையாளுகிறேன் என்பதைக் குறித்தும் எப்போதுமே மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் , இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் , படிப்படியாக... , என்னுடைய பணப்பை கிட்டத்தட்ட ஒரு பயனற்ற பொருளாகி விட்டது... ஏனென்றால் , இப்பொழுது எல்லா பணப் பரிவர்த்தனைகளும் ' ஜீ-பே ' அல்லது பிற மின்னணு முறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறதே! இப்போதெல்லாம் வெளியே சென்றால் , என்னுடைய பணப்பையை எடுத்துச் செல்வது பற்றி நான் கவலைப்படுகிறதே இல்லை! தேவன் நம் ஒவ்வொருவரையும் அதிக... அல்லது குறைந்த... செல்வத்தைக் கொண்டு ஆசீர்வதிக்கக் கூடும். ஆனால் அச்செல்வம் நம் வாழ்க்கையின் மையப்பகுதியை ஆக்கிரமிக்க.. , நாம் அனுமதித்துவிட வேண்டாம். அதை , சுற்றி வர வைக்க... நம்மால் முடிகிற வரையில் , நாம் நம்முடைய வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். வாழ்வின் மையத்தைப் பிடிக்க , அத...

உங்கள் மதிப்பு என்ன?

Image
19 September 2020 B.A. Manakala கீழ்மக்கள் மாயையும் , மேன்மக்கள் பொய்யுமாமே ; தராசிலே வைக்கப்பட்டால் , அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். சங். 62:9. கொஞ்ச காலத்திற்கு முன்பு , நான் ஒரு அநாதை இல்லத்தை பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கே... , அழகாய் , துறுதுறுவென ஒரு சிறுவன் இருந்தான். அவன் , தனது சொந்த தாயாலேயே ஒரு லட்சம் ரூபாய்க்கு ( ₹ 1,00,000) விற்கப்பட்டான் என்று நான் கேள்விப்பட்ட போது , அதிர்ந்து போனேன்! நீங்கள் என்னவாய் தோற்றமளிக்கிறீர்களோ , அதன் அடிப்படையில் உங்களை நீங்களே அளந்தால் , நீங்கள் வெறும் மூச்சுக்காற்றுக்கு சமம். ஆனால் , ஆதியிலே உங்கள் நாசியில் ஊதப்பட்ட ஜீவ சுவாசக் காற்றை , நீங்கள் தொடர்ந்து சுவாசித்தீர்களேயானால் , நீங்கள் நினைக்கிறதைக் காட்டிலும் , நீங்கள் அதிக மதிப்பு பெற்றவர்கள் ஆவீர்கள் (ஆதி. 2:7). உலகப்பிரகாரமாக.... , நம்மை மதிப்புள்ளவர்களாய் நாம் கருதிக் கொண்டிருக்கிற எல்லாமே , ஒரு நாளில் ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால் , ஆவிக்குரிய பிரகாரமாக , நீங்கள் என்ன மதிப்புடையவர்களாய் இருக்கிறீர்களோ , அதற்கு நித்திய மதிப்புண்டு. உங்களுடைய ஆத்துமாவைக் காட்டிலும் , விலைம...

ஊற்றி விடுங்கள்

Image
18 September 2020 B.A. Manakala ஜனங்களே , எக்காலத்திலும் அவரை நம்புங்கள் ; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள் ; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். சங். 62:8. எங்களுடைய ஒரு வருட கால திருமண நிச்சயதார்த்த வாழ்க்கை எனக்கு நினைவு இருக்கிறது. உண்மையாகவே , ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு எங்களுக்கு ஏராளம் இருந்தது. எங்கள் சம்பாஷணையை நிறுத்தியவுடன் நாங்கள் சோகமாக உணர்வோம். அதன் பின்பும் , நாங்கள் அடுத்த உரையாடலுக்காக ஆவலாய்க் காத்திருப்போம். அது மாத்திரமல்ல , கணவன் மனைவியாகவும் , நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிற எங்கள் நேரங்களை நாங்கள் இன்னமும் விரும்புகிறோம். எப்போதுமே நம்முடைய இதயத்தை தேவனிடம் ஊற்றிவிட வேண்டுமென அவர் விரும்புகிறார். நீங்கள் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் கூட , உங்கள் இருதயத்தில் இருந்த... , இருக்கிற... , இருக்கப்போகிற... எல்லாவற்றையும் அவர் ஆழ்ந்து படிக்கிறார்... என்பதை நினைவில் கொள்ளுங்கள். அநேகமாய் , தேவனைத் தவிர வேறொருவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் நமக்கு இருக்கலாம். கர்த்தர் உங்களுக்காகக் காத்திருக்கிறார் (ஏசா. 30:18). நீங்கள் அவர...