Posts

Showing posts from November, 2020

களைப்புற்று சோர்ந்து போனீர்களா?

Image
B.A. Manakala நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன். என் தொண்டை வறண்டு போயிற்று. என் தேவனுக்கு நான் காத்திருக்கையால் , என் கண்கள் பூத்துப் போயிற்று. சங். 69:3. தானியேல் , தேவனிடம் ஜெபிப்பதில் சோர்ந்து போகவில்லை. காரியம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அவர் தினமும் மூன்று வேளையும் ஜெபித்துக் கொண்டிருந்தார்! அவருடைய வாழ்வில் வலி நிறைந்த தருணங்கள் அவருக்கு இருந்த போதிலும் , அவர் அதைச் செய்தார். எல்லாம் சுமூகமாக இருந்த போதும் கூட , அவர் ஜெபித்தார். நாம் சோர்வுற்று களைத்துப் போவது இயல்பானதே. சில சமயங்களில் , ' ஒரு குறிப்பிட்ட காரியமானது.... , ஒரு குறிப்பிட்ட விதத்தில்... , நாம் விரும்புகிற ஓர் குறிப்பிட்ட காலத்தில்... மாற வேண்டும் ' என்று நாம் தேவனிடம் ஜெபிக்கிறோம். ஜெபிப்பதில் சோர்ந்து போவதற்கு , நமக்கு இதுவும் கூட ஒரு காரணமாய் இருக்கக் கூடும். நாம்  விரும்புகிற வண்ணமாகவே தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். சில நேரம் , நம்முடைய ஜெபங்களுக்கு தேவனின் பதில் , நாம் எதிர்பார்க்கிற அதே விதத்தில் இல்லாதிருக்கலாம். நம்முடைய சந்தர்ப்பங்களுக்கு , ஒரு குறிப்பிட...

உளையில் அமிழ்ந்து போதல்

Image
B.A. Manakala ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன். நிற்க நிலையில்லை.  நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன். வெள்ளங்கள் என் மேல் புரண்டு போகிறது. சங். 69:2. ' உளை ' என்பது , செல்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களுள் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக... , உங்களுக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இன்றி , நீங்கள் தனியாக இருப்பீர்களென்றால் , தப்பித்துக் கொள்ள நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மீறி... , நீங்கள் மூழ்கிப் போவீர்கள்! நாம் அடிக்கடி , இந்த உலகத்தில் பெருவெள்ளத்திலும் , உளையிலும் அமிழ்ந்து போகிறோம். தேவன் மட்டுமே நம்மை இப்படிப்பட்ட உளையான சேற்றிலிருந்து மீட்க முடியும் (சங். 69:1-2). தேவன் நம்முடைய கரங்களைப் பிடித்திருக்கும் போது , நம்மால் மூழ்க  முடியாது. ஆயினும் ,  நாம் இந்த உலகில் வாழ்கிற காலம் வரைக்கும் , நம்மை அமிழ்ந்து போகச் செய்யும் பல விஷயங்கள் , இன்னும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறது. அடிக்கடி நாம் தேவனை விட்டு விலகி ஓடி , இந்த உலகத்தின் பிரச்சனைகளில் மூழ்கிப் போகிறோம்.  இந்த உலகில் மூழ்கிக் கொண்டிருக்கிற மற்றவர்களுக்கு உதவி செய்யவும் , அவர்களுக்கு நன்மை செய்யவும் , நாம் அழ...

அவருடைய ஜனங்களுக்கு அவருடைய வல்லமை

Image
B.A. Manakala தேவனே , உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர். இஸ்ரவேலின் தேவன் , தம்முடைய ஜனங்களுக்குப் பெலத்தையும் சத்துவத்தையும் அருளுகிறவர். தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. சங். 68:35. பவுல் என்று ஒரு மனிதர் இருந்தார். அவருக்குப் பல தேவைகள் இருந்தன. சில சமயங்களில் , அவர் வெறும் வயிற்றோடு வாழ்ந்திருக்கிறார். சில வேளை , உயிர் வாழத் தேவையான ஒன்றுமே அவருக்கு இல்லாதிருந்திருக்கிறது! அப்படிப்பட்ட வேளையில் அவர் , " என்னைப் பெலப்படுத்துகிறவராலே , என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் ; எதுவுமே இல்லாமல் வாழவும் முடியும்" என்று கூறினார். தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ,  பெலத்தையும் சத்துவத்தையும் அருளுகிறார். (சங் 68:35) நாம் பெரும்பாலும் ' தேவனுடைய வல்லமை என்ன ' என்பதைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ' போரில் வெற்றி பெறுவதற்கு... அல்லது ஒரு சத்துருவைத் தோற்கடிப்பதற்கு ' ... போன்ற நம்முடைய காரியங்களைச் செய்து முடிக்கவே தேவனுடைய வல்லமை என்று நாம் நினைக்கிறோம். ஆனால்... , இந்த உலகில் வாழ்கிற போது , நாம் கடந்து செல்ல நேர்கிற வியாதிப்படுக்கை , வறுமை , தனிமை ...

அவருடைய சத்தம் முழங்குகிறது

Image
B.A. Manakala ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள். இதோ , தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப் பண்ணுகிறார். சங். 68:33. சாதாரண உரையாடலின் ஒலி அளவானது , சுமார் 60 டெசிபல் ( dB) இருக்கும். ஒரு இடியின் ஒலி அளவு , சுமார் 120 டெசிபல் ( dB) இருக்கும். ஒலி அளவில்... 10 டெசிபல் அதிகரிப்பு என்றால்... , 10  மடங்கு அதிகமாக... சத்தம் பலமாய் இருக்கும் என்று அர்த்தம். இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே... , 1883ம் வருடம் ஏற்பட்ட ' க்ரகட்டோவா எரிமலை வெடிப்பே... , (Krakatoa Eruption)( 180 dB) பூமியின் மேற்பரப்பில் உண்டான மிகவும் பலத்த சத்தம் ஆகும். 194( dB) டெசிபலுக்கு அதிகமான சத்தம் , பூமியின் மேற்பரப்பில் நீடிக்க முடியாது! 120( dB) டெசிபல் ஒலி அளவுடைய பலத்த சத்தமானது , மனிதனின் கேட்கும் திறனுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் , சுமார் 2000 ஜனங்கள் மின்னல் தாக்கி பலியாகின்றனர். தேவன் நம்மோடு இடிமுழக்கக் குரலில் பேசினால்... , அது நமது கேட்கும் திறனுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது! நாம் தேவனைப் பற்றி சிந்திக்கிறதற்கெல்லாம் மிகவும் அப்பா...

தேவனுக்குப் பாடுங்கள்

Image
B.A. Manakala பூமியின் ராஜ்யங்களே , தேவனைப் பாடி , ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். சங். 68:32. ஒரு முறை , நான் ஓர் ஆலய ஆராதனையில் பங்கு பெற்றேன். வழக்கம் போல் , ஏராளம் துதிப் பாடல்கள் பாடப்பட்டன. என் இருதயம் அல்ல , என் உதடுகள் மட்டுமே பாடிக் கொண்டிருக்கிறது என்பதை... , ஒரு பாடலின் இறுதியில் நான் உணர்ந்தேன். பாடல் முழுவதும்... , தேவனை நினைக்காமலேயே... , சத்தமாகவும் , காதுக்கினிமையாகவும் , என்னால் பாட முடியும் என்பதை உணர்ந்து , நான் மிகவும் வருந்தினேன்! தேவனைப் புகழ்ந்து பாடும்படி , எகிப்து மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட அனைத்து தேசங்களையும் சங்கீதக்காரர் ஊக்குவிக்கிறார் (சங். 68:31-32). ஒரு நாளிலே , எல்லா தேசங்களும் தேவனுக்குக் காணிக்கையைக் கொண்டு வரப்போகிறது என்பது மெய் தான். ஒரு நாளிலே... , ஒவ்வொரு முழங்காலும் முடங்கி... , ' இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் ' என்று ஒவ்வொரு நாவும் அறிக்கை பண்ணத் தான் போகிறது. அது எதிர்காலத்தைப் பற்றியது. தற்போது என்ன... ? நான் தேவனுக்கு எப்படிப் பாடுகிறேன் ?  ' நீங்கள்... , உங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறீர்கள். உங்கள் இருதயமோ , எனக்குத் ...

யுத்தத்தில் மகிழ்ச்சியா?

Image
B.A. Manakala நாணலிலுள்ள மிருகக் கூட்டத்தையும் , ஜனங்களாகிய கன்றுகளோடு கூட , ரிஷபக் கூட்டத்தையும் அதட்டும். ஒவ்வொருவனும் வெள்ளிப் பணங்களைக் கொண்டுவந்து பணிந்து கொள்ளுவான். யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். சங். 68:30. பல வருடங்களுக்கு முன்பு.... , எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பொதுவாக , அவன் வகுப்பில் மிகவும் அமைதியாக இருப்பான். ஆனால் , நண்பர்களிடையே சண்டை வந்தால் , அவன் அங்கே தோன்றுவான். மிகவும் மென்மையான தொனியிலே அவனிடம் இருந்து வரும் ஒரு ஜோடி கேள்விகள் , அந்த மொத்த சூழ்நிலையையும் சில விநாடிகளில் அமைதியாக்கி விடும். அவன் பிரச்சனைக்கான காரணத்தை விசாரித்து , அதைத் தீர்ப்பதற்கான ஒரு வழியையும் பரிந்துரைப்பான். அவனுடைய தலையீடு , பெரும்பாலும் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளது! யுத்தங்களில் பிரியப்படுகிறவர்கள் சீக்கிரமே சிதறடிக்கப்படக் கூடும் (சங். 68:30). மனிதனில் உள்ள  பாவ சுபாவத்தின் காரணமாக , யுத்தங்களும் , சண்டைகளும் பூமியிலே சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் , இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் சமாதானத்தைப் பெற்றிருக்கிறவர்களாகிய நாம் , சமாதானம் பண்ணுகிறவர்களாய் இந்த பூமியில...

ராஜா vs ராஜாக்கள்

Image
B.A. Manakala எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம் ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். சங். 68:29. வாத்துக்கள் , தங்கள் நீண்ட நெடிய பயணத்தின் போது , ' வி ' (V)   வடிவ உருவாக்கம் எடுத்துப் பறக்கின்றன. வழிநடத்தும் தலைவருக்கு , பறப்பது கடினமாகிறதினால்... அவ்வாத்துக்கள் வழிநடத்திச் செல்வதில்... சுழற்சி முறையில் பங்கெடுக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம் , ஓய்வு எடுத்துக் கொள்ளும் முன்னர்... , அவைகளால் நெடு நேரம் பறக்க முடிகிறது. பூமியின் ராஜாக்கள் , பரலோக ராஜாவைத் தொழுது கொள்கிறார்கள் (சங் 68:29). நம்மில் சிலருக்கு , பூமியிலே மிக உயர்ந்த பதவிகள் இருந்தாலும்... , பரலோகத்தின் உச்சநிலை அதிகாரத்தை நாம் அங்கீகரித்தாக வேண்டும். தேவனின் எல்லா படைப்புகளும் உச்சநிலை அதிகாரத்திற்கு அடங்கி இருக்கின்றன. மனிதகுலத்திற்கு , தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதாலோ , அல்லது நம்முடைய ஞாபக மறதியாலோ... , நாம் அடிக்கடி தேவனை புறக்கணிக்க முனைந்து , நம்முடைய சொந்த வழியில் செல்கிறோம். பூமியின் ராஜாக்கள் உங்களை ஒருபோதும் அறியாதிருக்கலாம் ; உங்களுக்குத் தனிப்பட்ட கவனம் கொடுக்காதிருக்கலாம். ஆ...

சிறிய தலைவர்

Image
B.A. Manakala அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும் , யூதாவின் பிரபுக்களும் , அவர்கள் கூட்டமும் , செபுலோனின் பிரபுக்களும் , நப்தலியின் பிரபுக்களும் உண்டு. சங். 68:27. குடும்பமாய் நாங்கள் காலாற நடந்து வரும்படி செல்கிற போதெல்லாம்... எங்கள் சிறு மகன் முன்னால் சென்று , எங்கள் தலைவனாய் இருக்க விரும்புகிறான். சில சமயம் , எங்கு செல்வது என்று தெரியாமல் , அவன் மாட்டிக் கொள்வதுண்டு. பல வேளைகளில் , அவன் வழியை யூகித்து , முன்னேறிச் செல்கிறான். ' சின்ன தலைவர் ' என்பது ஒரு முரணான சொற்றொடராய்த் தோன்றுகிறது. ' ஒரு தலைவர்... , சிறியவராய் இருக்க முடியுமா ?' அல்லது ' சிறிய நபர் ஒருவர் , தலைவராய் இருக்க முடியுமா ?' போன்ற கேள்விகள் நம் மனதில் இருக்கலாம்.  மனித கண்ணோட்டத்தில் , இவை இரண்டும் முரண்பாடானவையே. இந்த உலகில்.... , பணம் , சாமர்த்தியம் , அறிவு , செல்வாக்கு , நல்ல தோற்றம்... இவை போன்றவை உள்ள ஒரு நபர் தலைவராக முடியும். அதனால் தான்... , இந்த குணாதிசயங்களெல்லாம் ஒரு தலைவருக்கு  இருக்க வேண்டும்... என்று நாம் பெரும்பாலும் நினைத்துக் கொள்கிறோம். தலைமைத்துவத்திற்கு மிகச் சிறந்த மாதி...

வாழ்வின் ஆதாரம்

Image
B.A. Manakala இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே , சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள். சங். 68:26. தட்டைப்புழுக்களை , இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் ,  அவைகளால் மீளுருவாக்கம் செய்து , மறுபடியும் உயிர் வாழ முடியும்! (இருபாலின உயிரி) சிலவற்றுக்கு , ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டுமே இருப்பதால்... , தேவைக்கேற்ப , அவைகளால் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக் கொள்ள முடியும். தேவன் அவைகளுக்கு , மீளுருவாக்கம் செய்யும் திறனைக் கொடுத்தார். ஆனாலும்... , தலையும் வாலும் கொண்ட எல்லா படைப்புகளுக்கும் இந்த ஆற்றல் இல்லை. தேவனே வாழ்வின் மூல ஆதாரம். ஒரே ஒருவர் மட்டுமே , " நானே....ஜீவன்" (யோவா. 14:6) என்றார். நம்மில் ஜீவன் இல்லையெனில் , நாம் மரித்துப் போனவர்கள். வேறு விதமாகக் கூறின் , வாழ்வின் மூல ஆதாரமாகிய அவர் இன்றி... , நம்மால் வாழ முடியாது. சரீரத்தை தக்கவைப்பதற்கான ஜீவன் , மற்றும் நம் ஆவியைத் தக்கவைப்பதற்கான ஜீவன் , என இரண்டு உள்ளன. தேவனே அவை இரண்டிற்குமான ஆதாரமாகத் திகழ்கிறார். ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்திலிருந்து , ஆதாமும் ஏவாளு...

தேவனின் நகர்வலம்

Image
B.A. Manakala தேவனே , உம்முடைய நடைகளைக் கண்டார்கள். என் தேவனும் , என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். சங். 68:24. பல வருடங்களுக்கு முன்பு , சகேயு என்ற ஒரு மனிதன் , ஓர் ஊர்வலத்தைப் பார்த்தான். அவன் குள்ளனாய் இருந்தபடியால் , அந்த ஊர்வலத்தின் நடுவில் வருகிறது யார் என்பதைப் பார்க்க , அவன் ஒரு மரத்தின் மேல் ஏற வேண்டியதாய் இருந்தது. கடைசியாக , ஊர்வலம் அந்த மரத்தடியில் வந்த போது , ஊர்வலத்தின் நடுவில் இருந்த இயேசு , மேலே ஏறிட்டுப் பார்த்து.... , " சகேயுவே , இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்" என்று கூறினார். பல்வேறு வகையான ஊர்வலங்கள் நம் பார்வைக்கு வருகிறது. நாமும் , அவ்வகை ஊர்வலங்களால் அடிக்கடி ஈர்க்கப்பட்டிருக்கலாம். தேவனுடைய பவனி , அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்கிறது (சங். 68:24). இன்று நாமே அவருடைய ஆலயம். அவருடைய பவனி நம்மை நோக்கி வருகிறது. தேவன் நம்மில் இருந்தாலும்கூட , பெரும்பாலும் , நாமே ஊர்வலத்தின் மையத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறோம். ஒருவேளை , நம்மில் வசிக்கிற தேவனைக் காட்டிலும் , நம்மை நாமே பகட்டாய் காட்டிக் கொள்கிறவர்க...

சமுத்திரத்தின் ஆழங்கள்

Image
B.A. Manakala என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன். அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார். சங். 68:23. ' விக்டர் வெஸ்கோவோ ' என்பவர் , 2019ம் வருடம் , ஆகஸ்ட் 24ம் தேதி , ' மரியானா அகழி ' யில் ( Mariana trench) ' சேலஞ்சர் டீப் ' ( Challenger Deep ') என்று அழைக்கப்படும் கடலின் அடி மட்டம் வரை (5,550 மீட்டர்) மூழ்கிச் சென்றார். ஆயினும்... ,  80 சதவிகிதத்திற்கும் அதிகமான கடல் பகுதிகள் இன்றுவரை ஆய்ந்தறியப்படாததாகவே உள்ளன! உலகின் கடல் பகுதிகளில் , 7 சதவிகிதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன! தேவன் குறிப்பிடுகிற ' சமுத்திரத்தின் ஆழங்கள் ' பற்றி வரையறுக்க , நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை. ஆனால் சிருஷ்டிகரிடம் உண்டு! அவருடைய படைப்பில் , இதுவரை நாம் எவ்வளவு ஆராய்ந்து அறிந்துள்ளோம் என்பது கூட அநேகமாய் நமக்குத் தெரியாது! அவரிடமிருந்து நாம் ஒளித்துக் கொள்ளக்கூடிய இடம் ஒன்றும் இல்லை. நாம் நட்சத்திரங்களுக்குள்ளே நம் கூட்டைக் கட்டினாலும் , அங்கிருந்தும் நம்மை விழத்தள்ள அவரால் மு...

தங்கள் அக்கிரம வழிகளை நேசிக்கிறவர்கள்!

Image
B.A. Manakala மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும் , தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். சங். 68:21. "கழுவப்பட்ட பன்றி சேற்றில் புரள்கிறது போல"... என்பது வேதத்தில் காணப்படுகிற ஒரு பழமொழி (2 பேது. 2:22). ஒரு பன்றியைக் குளிப்பாட்டினாலும் , அது தன் சுபாவத்தில் இருந்து மாறுகிறதில்லை. ஆனால் , நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் போது... , நம்மிலே ஒரு மாற்றம் நடக்கிறது. பொதுவாக , நாம் அக்கிரம வழிகளைப் பின்பற்ற விரும்புகிறதில்லை. ஆனாலும் , தேவனை நேசிக்கிறவர்கள் கூட , தங்கள் பாவ வழிகளை விரும்பி , இரகசியமாய் பின்பற்றத் தக்கதாய்... அதைத் தேர்ந்தெடுக்க முடியும். எனினும் , ' இது தேவன் வெறுக்கிற ஒரு காரியம் ' என்பதும் ' இதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ' என்பதும் மேற்காணும் வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது (சங்.  68:21). நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் , பாவம் செய்வதற்கான சுதந்திரத்தை , தேவன் நம்மிடம் இருந்து எடுத்துப் போடுகிறதில்லை. எனவே... , நீதியின் வழியை நேசித்து , அதைப் பின்பற்றுவது குறித்து , நாம் உறுதியாகவும் ,...

மரணத்திலிருந்து மீட்பு

Image
B.A. Manakala நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார். ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. சங். 68:20. அவர் ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கிக் கொண்டார். சுற்றியிருந்த ஜனங்கள் , அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு...  பின்னர் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களில்.... , ஒருபோதும் எதிர்பாராத , மிகவும் துக்கமான செய்தியோடு , மருத்துவர் வெளியே வந்தார்! உதவிக்காக.... , மருத்துவர்களை , மிகத் தீவிரமாக நாம் நோக்கிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் , குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் சென்று சமாளிக்க.... அவர்களால் முடியாது. இறுதியாய் நம்மோடு பகிர்ந்து கொள்ள ,  அவர்களிடம் துக்க செய்தி மட்டுமே இருக்கக் கூடும். சில ஜனங்கள் , மருத்துவர்கள் தான் தவறிழைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு , அவர்கள் மீது வருத்தம் கொள்கிறார்கள். பெரும்பாலும் , நாம் சரீரப்பிரகாரமான மரணத்திற்கு மட்டுமே பயப்படுகிறோம். அதனால் தான் , பூமியிலே நாம் செய்கிற பெரும்பாலான விஷயங்கள் , சரீரத் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே உள்ளது. ஆனால் தேவன் , நம்மை சரீர மற...