Posts

Showing posts from January, 2021

தேவன் நல்லவர்!

Image
B.A. Manakala சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். சங். 73:1. என்னுடைய நண்பர்களுள் ஒருவன் என்னிடம் , " அந்த ஆசிரியர் மிகவும் நல்லவர்" என்று எங்கள் ஆசிரியர்களுள் ஒருவரைப் பற்றிக் கூறினான். ஆனால் , இன்னொரு நண்பனோ , அதே ஆசிரியரைப் பற்றி அதற்கு நேர்மாறாக , " அந்த ஆசிரியர் மிகவும் மோசமானவர்" என்று   என்னிடம் கூறினான். ஒரே ஆசிரியரைப் பற்றின இந்த அறிக்கைகள் ஏன் மாறுபட்டு இருக்கின்றன என்பதை நாம் எல்லாருமே யூகிக்கக் கூடும். இங்கே ஆசாப் , ' தேவன் இஸ்ரவேலுக்கு நல்லவர் ' என்று கூறுகிறார் (சங். 73:1). ஆனால் , இந்த இஸ்ரவேல் ஜனங்கள் , அவர்கள் விரும்பாத கடினமான நேரங்களை பூமியில் எதிர்கொள்ள நேர்ந்த போது , எத்தனை முறை தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிறதாலோ , எல்லாவித ஆபத்துக்களுக்கும் நம்மை விலக்கிக் காக்கிறதாலோ , நமக்கு நூறு வயதாகிற வரை , நம்மை இந்த உலகில் உயிரோடு வைப்பதாலோ மாத்திரம் தேவன் நல்லவராக இராமல்... ,  உண்மையுள்ளவராகவும் , நாம் இப்பூவுலகில் எதை எதிர்கொள்ள நேர்ந்தா...

மகிமை பொருந்திய நாமம்!

Image
B.A. Manakala அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென் , ஆமென்! சங். 72:19. எனக்கு ஒரு நண்பர் உண்டு. அவருடைய பெயர் ' குளோரியஸ் ' (Glorious). முதன்முறையாக அவருடைய பெயரை நான் கேட்ட போது , நான் சரியாகத் தான் காதில் வாங்கினேனா என்பதை , அவரிடம் நான் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. என் நண்பர் குளோரியசை சந்தித்து , அவரோடு பேசியதை நான் கெளரவமாகக் கருதினேன். என்றென்றும் சகல துதிக்கும் பாத்திரமாய் இருக்கிற , மகிமை பொருந்திய நாமத்தை உடைய ஒருவர் நமக்கு உண்டு (சங். 72:19). தனது இயற்பெயர் , நல்ல அர்த்தமுடையதாக இல்லாததால் , வளர்ந்தவுடன் தன் பெயரை மாற்றிக் கொண்ட ஒரு நண்பனை நான் அறிவேன். தேவன் தாமும் , சில சமயங்களில் , ஜனங்களின் பெயரை மாற்றினார்: 'ஆபிராம்' என்பதை 'ஆபிரகாம்' என்றும் , ' சாராய்' என்பதை 'சாராள்' என்றும் , ' யாக்கோபு' என்ற பெயரை 'இஸ்ரவேல்' என்றும் மாற்றினார். என்னுடைய பெயருக்கு ஏதாவதொரு மொழியில் அர்த்தம் இருக்கிறதா என்பது...

அவர் அதிசயமான காரியங்களைச் செய்கிறார்

Image
B.A. Manakala இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அவரே அதிசயங்களைச் செய்கிறவர். சங். 72:18. உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற தாஜ்மகாலைக் கட்டி முடிக்க... , 1000 யானைகள் மற்றும் 22,000 தொழிலாளர்களின் உதவியோடு... , 17 வருடங்கள் எடுத்துக் கொண்டது. மனிதன் பல அற்புதமான விஷயங்களை பூமியில் செய்தான். ஆயினும்... , தேவன் செய்கிற அதிசயமான காரியங்களைப் பார்த்து , நாம் தொடர்ந்து வியக்க மட்டுமே முடியும். தேவன் நமக்குக் கொடுத்த குறுகிய அறிவைக் கொண்டு , பூமியிலுள்ள அனைத்து வியத்தகு செயல்களையும் நாம் செய்தோம். தேவன் அனுமதித்தால் மட்டுமே , நம்மால் அதிசயங்களைச் செய்ய முடியும். ஆம்! ' பாபேல் ' என்ற அதிசயத்தை தேவன் எழும்பி வர விடவில்லை (ஆதி. 11). ஆனால்... , மற்ற எல்லா ஜனங்களையும் , மிருக ஜீவன்களையும் அழித்துப் போட்ட பெருவெள்ளத்தின் போது... , நோவாவையும் , அவன் குடும்பத்தையும் , பூமியின் எல்லாவித ஜீவ ராசிகளில் ஒவ்வொரு ஜோடையும் , காத்த ' பேழை ' என்ற ஓர் அதிசயத்தை உருவாக்க... , நோவாவை தேவன் அனுமதித்தார்! தேவனுடைய அற்புதமான பல காரியங்களை , நாம் இன்...

சகல ஜாதிகளும் அவர் மூலம் ஆசீர்வதிக்கப்படல்

Image
B.A. Manakala அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும். சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும். மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். எல்லா ஜாதிகளும் அவரை பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். சங். 72:17. கணக்கு ஆசிரியர் , வகுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு கணக்கைக் கொடுத்தார். மாணாக்கர் எல்லாரும் மிகவும் கஷ்டப்பட்டு , நெடு நேரமாக , அக்கணக்கிற்கான விடை காண முயன்றனர். கடைசியில்... , அவர்களுள் ஒரு புத்திசாலி மாணவன் விடையைக் கண்டுபிடித்து விட்டான். ஆசிரியர் , மற்ற மாணவர்களை ஒவ்வொருவராக அவனிடம் அனுப்பி , எப்படி அந்த கணக்கைச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளச் செய்தார். ' எல்லா தேசங்களும் அவர் மூலமாய் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் ' என்று வாஞ்சிப்பது என்ன அழகான ஓர் விருப்பம் (சங். 72:17). தேவன் ஆபிரகாமை பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதமாய் இருக்கும்படி செய்தார் (ஆதி. 22:18). நம்மை சபிக்கிறவர்களையும் கூட நாம் ஆசீர்வதிக்க வேண்டும் (லூக். 6:28). ஒரு பிரச்சனையை நாமாகவே தீர்த்துவிட்டால் , நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஒவ்வொருவருக்கும் அதே பிரச்சனையைத் தீர்க்க , எளிதாக ...

ராஜா நீடூழி வாழ்க!

Image
B.A. Manakala அவர் பிழைத்திருப்பார். ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும். அவர் நிமித்தம் இடைவிடாமல் ஜெபம் பண்ணப்படும். எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். சங். 72:15. 'Le Roi est mort , Vive le Roi!' என்ற பிரஞ்சு சொற்றொடருக்கு , ' ராஜா இறந்து விட்டார் ', ' ராஜா நீடூழி வாழ்க! ' என்று அர்த்தம். இது , 1461ம் வருடம் சார்லஸ் VII ம் மன்னர் இறந்த போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ' ராஜா வாழ்க ' அல்லது ' தேவன் ராஜாவைக் காக்கட்டும் ' ஆகிய பதங்கள் பல முறை வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (1 சாமு. 10:24 , 2 சாமு. 16:16). மெத்தூசலா 969 வருடங்கள் வாழ்ந்தார் (ஆதி. 5:27). ஆனால்... , இன்றைக்கு 100 வருடங்கள் வரை வாழ்கிற எவரையேனும் காண்பதே அரிதாய் இருக்கிறது. ' ராஜா நீடூழி வாழ்க ' என்று சாலொமோன் வாழ்த்தப்பட்டாலும் கூட , 80 வருடங்களுக்கு மேல் அவர் வாழ்ந்ததாகத் தெரியவில்லை! நீடித்த ஆயுள் என்பது ஒரு ஆசீர்வாதம் எனினும் , ' எவ்வளவு நீண்ட காலம் நாம் இவ்வுலகில் வாழ்கிறோம் ' என்பது உண்மையில் ஒரு பொருட்டல்ல. அந்த வாழ்வைக் கொண்டு ,  இவ்வுலகில் நாம் எ...

வறியோர் அவருக்கு விலையேறப்பெற்றோர்

Image
B.A. Manakala அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் , கொடுமைக்கும் தப்புவிப்பார். அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.  சங். 72:14. வெகு நாட்களுக்கு முன்னதாக... , நான் ஒரு திருமண விருந்திலே கலந்து கொண்டேன். வழக்கம் போல , பங்கேற்ற அனைவரும் நேர்த்தியான உடையணிந்திருந்தனர். உணவு வேளையின் போது , அவர்கள் , தங்களுடைய விறுவிறுப்பான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் இல்லாவிட்டாலும்... , பெரும்பாலான மக்கள் , தங்களுக்கு வைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தனர். ஆனால் , பங்கேற்றவர்களுள் ஒருவர் , விருந்து மண்டபத்தின் வெளியே நின்றிருந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு , உணவு வழங்குவதை நான் கவனித்தேன். அந்தப் பிச்சைக்காரர் ,   அவ்வுணவை ரசித்து , ருசித்துப் புசித்ததை நான் கண்ட போது , இதற்கு முன்னர் இந்தப் பிச்சைக்காரருக்கு இப்படிப்பட்ட ஒரு உணவு கிடைத்திருக்குமா என நான் வியந்தேன். ஏழைகள் , நம் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்கள். அதனால் அவர்களை வஞ்சகத்திற்கும் , கொடுமைக்கும் அவர் விலக்கி மீட்கிறார் (சங். 72:13-14). அநேகமாக நாம் , குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ள மக்களோடு மட்டுமே தொடர...

இரங்கி, இரட்சியுங்கள்

Image
B.A. Manakala பலவீனனுக்கும் , எளியவனுக்கும் அவர் இரங்கி , எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். சங். 72:13. ஒரு தடவை... , ஒரு மனிதன் திருடர்களால் தாக்கப்பட்டு , காயப்பட்ட நிலையிலே... , குற்றுயிராய்.. , தன்னந்தனியே சாலையில் விடப்பட்டான். அவ்வழியாக வந்த ஒரு மதகுரு , அவனைக் கண்டும் , விலகிப் போய்விட்டார். பின்னர் வந்த ஆலயப் பணியாளன் ஒருவன் , அந்த மனிதனைக் கண்டு... , அவனும் தன் வழியே போய்விட்டான். பின்பு , அப்பக்கமாக வந்த கனிவுள்ள ஒரு மனிதன்... , காயப்பட்டுக் கிடந்த மனிதனுக்கு முதலுதவி செய்து , அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அம்மனிதனின் முழு சிகிச்சைக்கும் உரிய தொகையை , தான் தந்து விடுவதாகவும் வாக்களித்தார். ஒருவருடைய நிலையைக் கண்டு பரிதாபம் கொள்வது ஒரு விஷயம் என்றால் , அச்சூழ்நிலையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது மற்றொரு காரியம். பல ஜனங்கள்.... , ஏழைகள் மற்றும் தேவையில் உள்ளவர்களுக்காகப் பரிதாபப்படுவர். ஆனால் , வெகு சிலரே அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குவர். மேலுள்ள வசனம்... , ஏழைகள் மீது இரக்கங்கொள்வது , மற்றும் அவர்களை  இரட்சிப்பது என்ற இரண்டைப் பற்றியும் பேசுகிறது...

சகல ராஜாக்களும் பணிவார்கள்!

Image
B.A. Manakala சகல ராஜாக்களும் அவரைப் பணிந்து கொள்வார்கள். சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். சங். 72:11. ஒருமுறை... , ஜன நெருக்கடி நிறைந்த ஒரு சாலையை நான் கடந்து செல்கையில்.... , அவ்வழியே கடந்து சென்ற பெரும்பாலான ஜனங்கள்... , ஓர் இடத்தில் நின்று , குறிப்பிட்ட ஒரு பக்கமாகத் திரும்பி , ஒரு விநாடி தலை குனிந்து வணங்கி , பின்னர் தங்கள் வழியே செல்வதை நான் கவனித்தேன். அந்தப் பக்கத்தில் ஒரு கோயில் இருந்ததை நான் உணர்ந்து கொள்ள , எனக்குச் சிறிது நேரம் பிடித்தது. மேலுள்ள கரு வசனத்தில் விரும்புவது போலவே , பல்வேறு தேசங்களிலுமிருந்து ராஜ்யப்பிரதிநிதிகள் , சாலொமோனின் ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள் (1 இரா. 4:34). சாலொமோன் மிகச்சிறந்த ஞானியாகக் கருதப்பட்டாலும் , ராஜாதி ராஜாவாக இருக்கிறவர் ஒருவர் மாத்திரமே (வெளி. 17:14). ஒரு நாள் , முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும் (ரோம. 14:11). எனினும் , இயேசுவின் மூலமாய் , நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பற்றியும் மறந்து விடாதிருங்கள். மேலான அதிகாரமுள்ளவரோடு கூட நாம் வீற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் , நாம் காண்கிற சகல அந்தகார வல்லமைகள் மேலும...

எங்கும் எப்போதும் ஆளுகை!

Image
B.A. Manakala அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான். சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந் தொடங்கி ,  மறு சமுத்திரம் வரைக்கும் , நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார். சங். 72:7 , 8. பள்ளிப்பருவ நாட்களில்... , சில நண்பர்கள்... , " நான் எப்போதும் உன்னுடைய நண்பனாக இருப்பேன்". "நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்"... என்றெல்லாம் வாக்களிப்பது வழக்கம். ஆனால்... பெரும்பாலானோரின் விஷயத்தில்... , பள்ளியை விட்டு வெளியேறிய நாளிலிருந்து இன்று வரை... நான் அவர்களைப் பார்க்கவே இல்லை. அவர்களில் ஒருவருடனும் தொடர்பிலும் இல்லை! இந்த வசனங்களில்.. , சாலொமோனின் ஆளுகை , சந்திரனுள்ள வரைக்கும் இருக்க வேண்டும் என்றும் , பூமியின் எல்லைகள் வரைக்கும் செல்ல வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது (சங். 72:7,8). ' எங்கும் ', ' என்றென்றும் ' ஆகிய வார்த்தைகளுக்கு நித்திய விளைவு உண்டு. எந்த மனிதனாலும் அல்லது ராஜாவாலும் எல்லா இடங்களையும் சென்றடையவோ , பூமியில் என்றென்றைக்கும் ஆளுகை செய்யவோ... ஒருபோதும் முடியாது! கர்த்தர் சதா காலங்களாக...

புத்துணர்வூட்டும் ஆளுகை

Image
B.A. Manakala புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப் போலவும் , பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இறங்குவார். சங். 72:6. இந்தியாவில் உள்ள விவசாயிகள்... , நிலத்தின் உழவுக்கும் , அறுப்புக்கும் இடையேயான பல்வேறு கால கட்டங்களில்... , மழைக்காகக் காத்திருக்கின்றனர். சில சமயங்களில் , நெடுங்காலமாக... அவர்கள் மழைக்காய் ஏங்கி , தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கின்றனர். கடைசியில்.... , ஒருவழியாக மழை பெய்கின்ற போது , அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு , நன்றியுடன் இருக்கின்றனர். மழையானது.... , அவர்களுடைய விவசாயத்திற்கு மிகப் பெ‌ரிய வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. ராஜாவின் ஆளுகை , புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப் போலவும் , பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இருக்க வேண்டும் என்பது சங்கீதக்காரரின் ஜெபமாய் இருக்கிறது (சங். 72:6). ' பூமியிலுள்ள வம்சங்களுக்கெல்லாம் ஆசீர்வாதமாக இருப்பான் '.... என்பதே தேவன் ஆபிரகாமுக்கு அருளிய வாக்குத்தத்தம் (ஆதி. 12:3). இது.... , ' பூமிக்கு உப்பாகவும் ' ' உலகுக்கு வெளிச்சமாகவும் ' இருப்போம் என்று நம்மைப் பற்றி இயேசு கூறியதற்கு ஒத்த...

அவருக்கே என்றென்றைக்கும் பயப்படுங்கள்!

Image
B.A. Manakala சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும் , அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். சங். 72:5. நான் மலைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போதெல்லாம்... , ஒரு குறிப்பிட்ட இடத்தில் , பெரிய பாறைகளைக் குடைந்து , அதன் நடுவே போடப்பட்ட சாலை ஒன்று வரும். ஆரம்பத்தில்.. , அந்த சுரங்கப் பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது மிகவும் பயமாக இருந்தது... ஏனென்றால் , அது மிகவும் நிலையற்ற தன்மையுடன் காட்சியளிக்கும். ஆனால் , ஆண்டுகள் பல கடந்த பின்னர்... , நான் அவ்வழியே பல முறை ஓட்டிச் சென்று வந்த போது... , அந்த குகைப் பாதையைப் பற்றியோ , என் தலை மேல் இருக்கும் பாறையைப் பற்றியோ... நான் கண்டுகொள்வதே இல்லை! நாம் பல வருடங்களுக்கு முன்பாக கர்த்தரை நம் இதயத்திலே ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் , காலங்கள் செல்லச்செல்ல... , கர்த்தரைப் பற்றிய நமது பயம் அனலற்ற நிலையில் , குளிர்ந்து போயிருக்கக் கூடும். இந்த உலகில்... , சுகவீனங்கள் , பெருந்தொற்று , யுத்தம் , பாதுகாப்பு , அல்லது தனியுரிமை என பல காரியங்களைக் குறித்து நாம் பயப்படுகிறோம். நாம் தேவனுக்குப் பயப்பட்டால் , இவைகளில் ஒன்றுக்கும் நம்மை பயமுறு...

ஏழைகளைப் பாதுகாருங்கள்

Image
B.A. Manakala ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து , ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து , இடுக்கண் செய்கிறவர்களை நொறுக்குவார். சங். 72:4. ஒருமுறை , இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு அருகே உட்கார்ந்திருந்தார். அநேக தனவான்கள் வந்து ஏராளம் பணத்தை அதில் போட்டாலும் கூட , இயேசுவோ.... , இரண்டு சிறிய காசுகளைப் போட்ட ஒரு ஏழை விதவையையே ஆவலுடன் கவனித்தார். இயேசுவைத் தவிர அங்கிருந்த வேறொருவரும் அவளை கவனித்திருக்க மாட்டார்கள். ஏழைகளுக்கு நாம் செய்யக்கூடிய மூன்று காரியங்களைப் பற்றி சங்கீதக்காரர் கூறுகிறார்: 1) பாதுகாத்தல். 2) மீட்டல். 3) ஒடுக்குபவர்களை நொறுக்குதல். (சங் 72:4). ஏழைகளுக்காக நிற்பதற்கு எல்லாருக்கும் மனம் இருக்காது. ஆனால் நாம் மெய்யாய் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களானால் , நமக்கு அவர்களுக்கு உதவும் இதயம் வேண்டும். தேவையுள்ளவர்களின் விஷயத்தில் நாம் எதுவுமே செய்யாதிருந்தால் , நாம் நிம்மதியற்று உணர்வோம். ஏழைகளுக்கான நீதியும் , உரிமைகளும் , அடி‌க்கடி அவர்களுக்கு  மறுக்கப்படுகின்றன. ஏராளமானோர் , மிகவும் தரித்திரராய்... , தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பிறரிடம் இருந்து உதவி தேவைப்ப...

மலைகளில் செழிப்பு

Image
B.A. Manakala பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும். மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். சங். 72:3. நான் சமவெளியில் பிறந்து வளர்ந்தேன். ஏதோ சில காரணங்களுக்காக... , அந்தப் பகுதியில் உள்ள சின்ன குன்றுகள் கூட , பயனற்ற நிலங்களாகக் கருதப்பட்டு , பயிர்செய்வதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. சில சமயம் , நம்முடைய பார்வைக்குக் கடினமான இடங்களாகக் காணப்படுகின்ற... மலைகளையும் , குன்றுகளையும் செழிப்பாக்கி... , பலன் தரச் செய்ய தேவனால் முடியும் (சங். 72:3). பல வருடங்கள் , மலைகளில் வசிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால்... , அந்த மலைகள்... , பழங்கள் , காய்கறிகள் மற்றும் பயிர்வகைகளால் நிறைந்து , செழிப்பாய் இருந்தன. தேவனோடிருக்கையில்... , இருளில் வெளிச்சமும் , நம்பிக்கையற்ற நிலையில் நம்பிக்கையும் , சுகவீனத்தில் சுகமும் , மலைகளில் கூட செழிப்பும் உண்டு. நிலத்தில் கடினமாக உழைத்து (நீதி 12:11) , அதைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு (ஆதி. 2:15) நமக்கு உள்ளது. இது செழிப்புக்கு முக்கிய பங்களிக்கிறது. நம்மை இன்னும் செழித்தோங்கச் செய்வதற்காக , தேவன் நம்மோடு இணைந்து உழைக்க விரும்புகிறார். செழிப்பை நோக்கி வளர்...