Posts

Showing posts from March, 2021

நீடிய வாழ்வு!

Image
Tuesday, April 20, 2021 B.A. Manakala கர்த்தாவே , நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும் , என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். சங். 39:4. வேத வசனங்களில் வாக்குப் பண்ணப்பட்ட (உ.ம்.: எபே. 6:2) ' நீடித்த வாழ்நாள் ' என்பதும்கூட... மிகக் குறுகியதே! சங் 39:4ல் , தாவீதிடம் இருந்து வருகிற இந்த ஜெபத்திற்கு... , ஒருவேளை ' கொரோனா பெருந்தொற்று ' ஒரு பதிலாகக் கருதப்பட முடியுமா ? எல்லாம் இல்லாவிட்டாலும்... , உலகிலே மக்கள் செய்கிற பெரும்பாலான விஷயங்கள்... , இப்பூமியில் மாத்திரமே நன்மை பயப்பனவாக இருக்கும். நித்தியத்திலே அது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாமல் போகலாம். பூமியிலே , நம்முடைய வாழ்க்கையின் தற்காலிகத்தன்மையைப் பற்றி... 4-6 வசனங்களில் , தாவீது தொடர்ந்து பேசுகிறார். ஆனால்... ஏன் ? ஒருவேளை... , 7ம் வசனம் அதற்கான பதிலாக இருக்கலாம். பூமியிலுள்ள தற்காலிகமான விஷயங்களின் மீது நம்பிக்கையை வைப்பதே நம்முடைய மனப்பான்மையாக உள்ளது. ஆனால்... , நித்தியத்தை முன்னோக்கில் வைத்திருக்கும் ஒருவருக்கு.. , அவருடைய நம்பிக்கை , தேவனில் மட்டுமே  இருக்க வேண்டும். ...

தூரத்தில் தேவன்!

Image
Saturday, April 17, 2021 B.A. Manakala கர்த்தாவே , என்னைக் கைவிடாதேயும். என் தேவனே , எனக்குத் தூரமாயிராதேயும். சங். 38:21. நேரத்திலும் , இடத்திலும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்கிறோம். நேற்று , இன்று , நாளை ,... மற்றும் தொலைவு , அருகே... , ஆகியவற்றையெல்லாம் நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம். ஆனால்.... , தேவனோ , காலத்திற்கும் , இடத்திற்கும் அப்பாற்பட்டவர். ' என்றென்றும் ' என்பது தேவனின் காலம். ' எங்கெங்கும் ' என்பது அவரது இடம். தேவன் எங்கிலும் இருக்கிறார் எனில் (எரே 23:24) , அவர் எப்படி தூரமாய் இருக்க முடியும் ? ( சங் 38:21). ஒருபோதும் தேவன் , யாரையும் , எதையும் விட்டு விலகியிருக்க முடியாது! ஆயினும்... , துன்மார்க்கருக்கு அவர் தூரமாயிருக்கிறார். (நீதி 15:29) ஏனெனில்... , தேவன் பாவத்தை வெறுக்கிறார் (நீதி 6:16-19). நாம் கால வரையறைக்குட்பட்டவர்களாதலால்.... , மனிதராகிய நம் பொருட்டே தேவன் , " நான் அல்பாவும் , ஓமெகாவும் , முந்தினவரும் , பிந்தினவரும் , ஆதியும் , அந்தமுமாய் இருக்கிறேன்" என்று திருவுளம்பற்றினார்.... என நான் விசுவாசிக்கிறேன்.  அவருடைய காலமோ நித்திய...

சமூக இடைவெளி!

Image
Thursday, April 15, 2021 B.A. Manakala என் சிநேகிதரும் , என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள். என் இனத்தாரும் தூரத்தில் நிற்கிறார்கள். சங். 38:11. இந்நாட்களில் , ' சமூக இடைவெளி ' என்பது பழக்கப்பட்ட ஒரு பதமாகி விட்டது. ஏனெனில் , கொரோனாவைத் தோற்கடிக்கும் மிக முக்கியமான வழிகளுள் இதுவும் ஒன்று. மனிதன் ஓர் சமூக விலங்கு. சமுதாயம் இல்லாமல் அவனால் உயிர்வாழ முடியாது. ஆனால் தற்போதைய நிலைமையோ , இதற்கு நேர்மாறாக இருக்கச் சொல்கிறது. இன்றைக்கு நான் தும்மினால் கூட , மக்கள் என்னிடமிருந்து விலகி இருக்க முயல்கிறார்கள்.  சங் 38:11ல் தாவீதின் அன்புக்குரியவர்களும் கூட.. , அவர் வியாதியாய் இருக்கையில் , அவரைத் தூர விலக்கினர். இத் தருணத்தில்... அவருடைய வியாதி என்பது... , பத்சேபாளிடத்தில் அவர் செய்த பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வேயன்றி வேறு எதுவுமாகத் தெரியவில்லை. ஏதேன் தோட்டத்தில்.. , பாவத்தின் குற்ற உணர்வு , மனிதனை தேவனிடமிருந்து விலக்கியது. இன்றைக்கு அது சமூக விலகலையும் ஏற்படுத்துகிறது. பாவத்தின் குற்ற உணர்வு , உங்களை தேவனிடமிருந்தும் , மனிதனிடமிருந்தும் தூர விலக்கலாம். ஆயினும் மனம்திரும்புதல...

பாவத்தினால் வியாதி

Image
Wednesday, April 14, 2021 B.A. Manakala உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.  என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. சங். 38:3. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளைத் திருமணம் செய்து கொள்வதற்காக... , தாவீது அவனைக் கொன்ற பின்னர் எழுதப்பட்ட சங்கீதமாக இது இருக்கலாம். அவருடைய சுகவீனத்திற்கான காரணம் தேவனுடைய கோபம்... என்று இந்த சங்கீதத்தின் சில வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன (சங். 38:3அ). ஆயினும் , அவருடைய பாவமே அவரை வியாதிக்குள்ளாக்கியது என்பதையும் தாவீது இங்கே ஒப்புக்கொள்கிறார் (சங். 38:3ஆ-4) உங்களுடைய சொந்த பாவமே உங்களை சுகவீனமாக்க முடியும். தாவீதுடைய பாவத்தின் குற்ற உணர்வு , அவரால் தாங்கக்கூடாத பாரமாக இருந்தது (வச:4). ஆனால் , அப்படிப்பட்ட குற்ற உணர்வும் , சுகவீனமும் மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்துவதால் , அவை நல்லதே. தாவீது பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தாலும் , அவர் மன்னிக்கப்பட்டார். உங்களுடைய பாவத்தைக் குறித்த குற்ற உணர்வற்று நீங்கள் இருந்தால் , எச்சரிக்கையாய் இருங்கள்! உங்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தி , அதன் மூலம் தேவனை இன்னும் கிட்டிச் சேரச்...

தேவனுடைய சிட்சை

Image
Tuesday, April 13, 2021 B.A. Manakala கர்த்தாவே , உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்து கொள்ளாதேயும். உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். சங். 38:1. ஒரு முறை... , குழந்தை ஒன்று , சூடான இஸ்திரிப் பெட்டியைத் ( Iron Box) தொட வேண்டும் என்று தன் தந்தையிடம் அடம்பிடித்து அழுததை நான் பார்த்தேன். தந்தையோ , கண்டிப்புடன் மறுத்தார். குழந்தை இன்னும் அதிகமாக முரண்டு பண்ணி அழுதது. கடைசியில்... , குழந்தை அதைத் தொடுவதற்கு அந்தத் தந்தை விட்டுவிட்டார்! பின்விளைவைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது  உங்களுக்கே தெரிந்திருக்கும்!   நீங்கள் கோபமாய் இருக்கையில் உங்கள் பிள்ளையை அடிக்காமல் இருப்பது நல்லது. ஆயினும் , எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஒழுங்கீனமாய் விட்டுவிடுகிறதில்லை. இங்கே தாவீது , தேவன் கோபமாயிருக்கையில் மட்டும் தன்னை தண்டிக்க வேண்டாம் என்றே வேண்டிக் கொள்கிறார் (சங். 38:1). தேவன் நம்மை எவ்விதம் சிட்சிக்கிறார் என்பது எபி 12:4-11ல் அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.   எபி 12:6... , " கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து , தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மக...

அன்றன்றுள்ள அப்பம்

Image
Friday, April 09, 2021 B.A. Manakala நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன்.  ஆனாலும் ,  நீதிமான் கைவிடப்பட்டதையும் , அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. சங். 37:25. கொரோனா சூழ்நிலையானது.. , நம்மில் பலரை , மளிகை சாமான்களையும் , தேவையான பிற திண்பண்டங்களையும் சேமித்து வைக்கச் செய்துள்ளது. எதிர்காலத்தில் பஞ்சம் வரப்போகிறதா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது. அப்படி வந்தால் , நாம் என்னவெல்லாம் சேமித்து வைத்துள்ளோமோ , அவை போதுமானதாக இருக்காது. இருப்பினும்... , நீதிமான் அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை (சங். 37:25). அன்றன்றுள்ள ஆகாரத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம் (மத். 6:11).   மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைத்துவிட முடியாது (மத். 4:4) என்றும் , தானே ஜீவ அப்பம் (யோவா. 6:35) என்றும் இயேசு சொன்னார். நம்முடைய சரீரத்தை போஷிப்பதிலேயே நாம் முனைப்புடன் இருக்கிறோம். எந்த அளவிற்கு நம்முடைய உள்ளான மனிதனை நாம் போஷிக்கிறோம் ? பூமியில் மிகக் குறுகிய வாழ்க்கை வாழும் நம் சரீரத்திற்கு , சரீர போஜனம் ஊட்டமளிக்கிறது. ஆவிக்குரிய போஜனமோ , நம்மை நித்தியத்துக்கு ஆயத்...

உங்கள் மனதை நிரப்புங்கள்

Image
Thursday, April 08, 2021 B.A. Manakala அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. சங். 37:31. நம்மில் அநேகர் இந்நாட்களில் கொரோனா பற்றிய செய்திகளால் நம் மனதை நிறைத்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆம்.. , உங்களைச் சுற்றியுள்ள , மற்றும் உலகெங்கிலும் உள்ள தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வது முக்கியமே. ஆகிலும்... , இதுபோன்ற செய்திகளால் உங்கள் மனதை நிரப்புவதால்... ஏதாகிலும் பிரயோஜனம் உண்டா ?   தேவனுடைய பிள்ளைகளாக , நாம் ' நம் இருதயத்தை எதினால் நிரப்புகிறோம் ' என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவனுடைய வழியில் நடப்பதே நம் பிரதான நோக்கமாய் இருக்கும் போது , நம்முடைய இருதயங்களை தேவனுடைய வார்த்தையால் நிரப்புவது மிக முக்கியமான ஒன்று. சங் 119:11 கூறுகிறது , " நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு , உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்" என்று. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். (மத். 12:34 பொதுவாக நீங்கள் எதை தியானித்துக் கொண்டே இருக்கிறீர்களோ , அதையே நீங்கள் எப்போதும் பேசுவீர்கள். ஜெபம்: கர்த்தாவே , ...

தடுமாறினாலும் தடுக்கி விழுவதில்லை!

Image
Wednesday, April 07, 2021 B.A. Manakala அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். சங் 37:24. கர்த்தர் நம் கையைப் பற்றிப் பிடித்திருக்கையிலும் கூட , நாம் தடுமாற ஏதுவுண்டு என்பதை நம்ப முடியாதிருக்கலாம்! ஆயினும்... , அவர் நம்மைக் கீழே விழவிட மாட்டார் என்று அதே வசனம் கூறுகிறது. நிச்சயமாகவே நம்மேல் தேவ பாதுகாப்பு இருக்கிறது. அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை. உங்களைக் கைவிடுவதுமில்லை (உபா. 31:6). அவர் உங்கள் கால்களைத் தள்ளாட வொட்டார் (சங். 121:3). ஆயினும்... , தேவனுடைய பயிற்சியின் ஒரு பகுதியாக , நாம் அடிக்கடி தடுமாற நேரலாம். ஒருமுறை , இயேசுவே தம் சீஷர்களை அக்கறைக்குப் போகும்படி அனுப்பியிருந்தும் , கடலிலே கடும்புயலை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது (மத். 14:22-33). கழுகு தன் கூட்டைக் கலைத்து , தன் குஞ்சுகளை செளகரியமான கூட்டிலிருந்து வெளியே தள்ளி , அவைகளைப் பயிற்றுவிப்பது போல... , தேவனும் நம்மைப் பயிற்றுவிக்கிறார் (உபா. 32:11).   நம் ஒவ்வொருவருக்குமான தேவனுடைய பயிற்சி முறைகளை நாம் கண்டுணர்ந்து , அந்நாட்களில் முறுமுறுக்காமல் இருப்போமாக. உங்களை நன்றாகப் ...

தேவன் எல்லாவற்றிலும் ஈடுபாடு கொள்கிறாரா?

Image
Tuesday, April 06, 2021 B.A. Manakala நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்.  அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். சங். 37:23. நான் எப்படி என் தலைமுடியைச்  சீவுகிறேன் ? காலையில் என்ன சாப்பிடுகிறேன் ? எந்த பள்ளிக்குச் செல்கிறேன் ? என்ன வேலையைத் தெரிவு செய்கிறேன் ? எவ்வாறு என் பெற்றோரைக் கனம் பண்ணுகிறேன் ? யாரைத் திருமணம் செய்கிறேன் ? நான் எங்கு வசிக்க வேண்டும் ? எனக்கு என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் ? நான் எப்படிப்பட்ட ஊழியத்தைச் செய்ய வேண்டும் ?..... என்பதைப் பற்றியெல்லாம் கர்த்தர் கவலை கொள்கிறாரா ?... ஆம்!... உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கிறது (லூக். 12:7).   ' நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்திலும் கர்த்தர் ஆர்வம் கொள்கிறார் ' என்பதை அறிவது  எவ்வளவாய் ஆச்சரியம் அளிக்கிறது! ' இவையெல்லாம் அற்ப விஷயங்கள் தானே... , இதை நானே என் இஷ்டத்துக்குச் செய்ய முடியும் ' என நான் நினைக்கலாம். கர்த்தர் மகிழக் கூடிய  விதத்திலே , நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறோமா ? அல்லது நம் வாழ்வின் சில பகுதிகளில்... நாம் தேவனை  ஒதுக்கி வைக்கிறோமா ? உங்களையும...

கடன் வாங்குதல் Vs கடன் வழங்குதல்

Image
Saturday, April 03, 2021 B.A. Manakala துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்.  நீதிமானோ , இரங்கிக் கொடுக்கிறான். சங். 37:21. பல வருடங்களுக்கு முன்பு , என்னைப் பார்க்க வந்திருந்த என் ஆருயிர் நண்பர்களுள் ஒருவன்... , இரவு வெகு நேரம் கழித்துதான் கிளம்பிச் சென்றான்.  அவனிடம் கையிலே பணம் இல்லாததால்... , அந்த அர்த்த இராத்திரியிலே.... , கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நடந்தே சென்று... , வீடு போய்ச் சேர்ந்திருக்கிறான்... என்று எனக்குப் பின்னர் தெரிய வந்தது! அதைக் கேள்விப்பட்ட போது... , நான் கோபமுற்று , அவனைத் திட்டினேன்!   ஒருவேளை... , நாம் எல்லாருமே கடன் வாங்கி , அதைச் சரியான நேரத்திலே திருப்பிச் செலுத்தி விடுகிறவர்களாய் இருக்கலாம். ஆனால் , இந்த வசனம்... , கடன் கொடுப்பதே (பிறர் நம்மிடமிருந்து கடன் வாங்குவது) தேவபக்தி உள்ளவர்களுக்குச் சிறந்த பழக்கம் என்று கூறுகிறது. அதிலும் முக்கியமானது என்னவென்றால்... , ஒருவர் , அவருடைய சொந்த வருமானத்திலிருந்து மாத்திரமே , கடன் கொடுக்க வேண்டும்.  வேறு விதமாகக் கூறின்... , ஒருவருக்குக் கடன் கொடுப்பதற்காக , இன்னொருவரிடம் கடன் வாங்குவது பு...

மறைந்து போகும் புகை!

Image
Friday, April 02, 2021 B.A. Manakala துன்மார்க்கரோ , அழிந்து போவார்கள். கர்த்தருடைய சத்துருக்கள் , ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப் போல் புகைந்து போவார்கள். அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். சங். 37:20. இரண்டு நாட்களுக்கு முன்பு... , கொஞ்சம் காய்ந்த சருகுகளையும் , குப்பைகளையும் , எங்களுடைய வீட்டு முற்றத்தில் , நாங்கள் குடும்பமாக எரித்துக் கொண்டிருக்கையில் , திடீரென அது கடும் புகையை உண்டாக்கியது. அந்தப் புகைக்குத் தப்பிக்க , நாங்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினோம். ஆனால் ஐந்தே நிமிடங்களில் ,  புகை அனைத்தும் மறைந்து போனது!   வரலாற்றிலே... , பலர் , கிறிஸ்தவர்களையும் , அவர்களுடைய தேவனையும் எதிர்த்துள்ளனர். சிலர் , கிறிஸ்தவத்தின் சுவடே இப்பூமியில் இல்லாதபடி அழித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சித்தனர். இன்றும் கூட , ஒரு சிலர் , அதே போன்ற விருப்பத்துடன் முயற்சித்துக் கொண்டிருக்கக் கூடும்.   நாம் புகைக்கு அஞ்சுகிறோமா ? இல்லையெனில் , நம்முடைய சத்துருக்களுக்கு நாம் எப்படி அஞ்ச முடியும் ? கர்த்தருடைய சத்துருக்கள் , புகையைப் போல ஒழிந்து போவார்கள் (சங். 37:20). அவர்களால் நீண்ட நேரம் த...

சிறியது சிறந்ததா?

Image
Thursday, April 01, 2021 B.A. Manakala அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும் , நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. சங். 37:16. அநேகமாக... , மானிடர் அனைவருமே கொஞ்சமாகிலும் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.... , என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்! செல்வந்தர் , ஏழைகள்... என இரு தரப்பினருமே , ' தங்களுக்குப் போதுமானது இல்லை ' என்று நினைக்கிறார்கள். எனவே... இவ்விருதிரத்தாருமே மேலும் மேலும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். "செல்வந்தராய் இருப்பதே சிறந்தது" என்பது போன்ற இலக்குரை , இருதரப்பினருக்குமே பொருந்தக் கூடும்.   இங்கே... , வித்தியாசமான ஒரு கோஷம் வருகிறது... ,  நீதிமானுக்குள்ள "கொஞ்சமே நல்லது" என்று.! ஏழை விதவையிடம் இருந்து வருகிற இரண்டு காசுகளே மேல் (லூக். 21:2). கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம் (நீதி. 15:16). உத்தமமாய் நடக்கிற தரித்திரனே வாசி (நீதி. 19:1).   "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி , உங்கள் குறைவையெல்லாம் , கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி. 4:19). இவ்வசனத்தின் இரு பக்கங்களாவ...

தேவன் நகைக்கிறார்!

Image
Wednesday, March 31, 2021 B.A. Manakala துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து , அவன் பேரில் பற்கடிக்கிறான். ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார். அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். சங். 37:12-13. பொதுவாக... , சிரிப்பது பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகும். நாம் எல்லோருமே சிரிப்பதை அனுபவித்து , ரசிக்கிறோம். ஆனால்... , நீங்கள் நெருக்கத்தில் இருக்கும் போது , யாராவது உங்களைப் பார்த்து நகைப்பதை நீங்கள் கவனித்தால்... , உங்களுடைய உணர்வு என்னவாக இருக்கும் ? நிச்சயமாக மிகவும் வெறுப்பூட்டும்!   யாராவது நீதிமான்களுக்கு விரோதமாகப் பொல்லாங்கான திட்டங்களைத் தீட்டினால் , தேவன் நகைக்கிறாராம்! ஏனெனில்... , அப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டுகிறவர்களுக்காய்க் காத்திருக்கிற நியாயத்தீர்ப்பை அவர் அறிந்திருக்கிறார். நாமும் கூட ,  தேவனுடைய ஆலோசனையைப் புறக்கணித்து , அவருடைய கடிந்துகொள்ளுதலை நிராகரித்தால்.. , நாம் கஷ்டத்தில் இருக்கும் போது , அவர் நம்மையும் பார்த்து நகைப்பார்! (நீதி. 1:25-28). ஆனால்.. , தேவனுக்குச் செவிகொடுக்கிற அனைவரும் , விக்கினமின்றி வாசம் பண்ணி , ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதிய...

புல்லையும், பூவையும் போல!

Image
Tuesday, March 30, 2021 B.A. Manakala பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல்  பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப் போல் சீக்கிரமாய் அறுப்புண்டு , பசும்பூண்டைப் போல் வாடிப் போவார்கள். சங். 37:1-2. புற்களும் , பூக்களும் சீக்கிரமே செழித்து... , சீக்கிரமே வாடியும் போகும்! மனுஷருடைய நாட்களும்... , புல்லுக்கும் , பூவுக்கும் ஒப்பாயிருக்கிறது. சீக்கிரமே செழித்து , சீக்கிரமே அறுப்புண்டுபோம் (சங். 103:15). துன்மார்க்கரும் கூட , புல்லைப் போலவே அறுப்புண்டு போவார்கள் (சங். 37:2). ஆரோக்கியம் , செல்வம் , நண்பர்கள் , வேலை , சொத்துபத்துகள்... , இன்னும் இது போன்ற... , அநேகமாய் பூமியில் நாம் காண்கிற அனைத்திற்குமே.. , கிட்டத்தட்ட இதே இயல்பு தான் உள்ளது. அப்படியானால்... , அறுப்புண்டு போகாத ஏதேனும் ஒன்று இருக்கிறதா ? ஆம்! கர்த்தர் ஒருவரே அழியாதவர்! வசனங்கள் 3-5 , ஞானமுள்ள வழிமுறைகளை வழங்குகிறது: 1) கர்த்தரை நம்பி நன்மை செய். 2) கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இரு. 3) நீ செய்கிற எல்லாக் காரியத்தையும் கர்த்தருக்கு ஒப்புவி. கர்த்தருடைய வசனமும் கூட என்றென்றைக்கும் நிற்கும் (ஏசா. 40:...

மானிடர் யாவருக்கும் மறைவிடம்!

Image
Friday, March 26, 2021 B.A. Manakala தேவனே , உம்முடைய  கிருபை எவ்வளவு அருமையானது. அதினால் , மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். சங். 36:7. இந்தக் கொரோனா பெருந்தொற்றுச் சூழலில்... , தங்களைப் பாதுகாக்கக் கூடிய நல்ல ஒரு மறைவிடத்தை , மானிடர் அனைவருமே தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட... , இந்தச் சூழ்நிலையைக் கண்டு அஞ்சுகிறோம். நீதி 18:10ன் படி... , நீதிமான்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக , தேவனிடத்தில் ஓடுகிறார்கள். ஆனால்... , " தேவனுடைய செட்டைகளின் நிழலிலே , மனுபுத்திரர் அனைவரும் புகலிடம் காண்கிறார்கள்" என்று சங் 36:7 கூறுகிறது. கேரளாவில் வந்த பெருவெள்ளத்தின் போது... , ஜனங்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி , அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட உறைவிடங்களில் தங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இன்று கொரோனாவிற்கு எதிரான யுத்தத்திலும்... , 21 நாட்களுக்கு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும்படி , பாரதப் பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருவெள்ளக் காலங்களில் தங்கும் உறைவிடங்களும் , பெருந்தொற்றுக் காலத்தில் , நம்முடைய வீடுகளும் , நல்ல தற்காலி...

மனிதன் தேவனுக்கு உத்தரவிட முடியுமா?

Image
Thursday, March 25, 2021 B.A. Manakala நீர் கேடகத்தையும் , பரிசையையும் பிடித்து , எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். சங். 35:2. இந்த வசனம்... , ஜெபத்தின் ஒரு பகுதி போலத் தோன்றவில்லை. இந்த சங்கீதம்... , தாவீதின் ஒரு ஜெபத்தைப் போலக் காட்சியளிக்கிறது. "நன்றி செலுத்தவோ , அல்லது உதவி கோரவோ , தேவனிடம் நாம் சொல்லுகிற வார்த்தைகளே ஜெபம்" என்று... ' ஆக்ஸ்போர்டு கற்போரின் அகராதி ' (Oxford learners dictionary) ஜெபத்தை வரையறுக்கிறது. ஆனால் இந்த ஜெபத்தில் தாவீது... , பெரும்பாலும் இது தன்னுடைய சொந்த மீட்பைப் பற்றியது என்றாலும்கூட.. , தேவன் எவ்விதம் துல்லியமாகச் செயலாற்ற வேண்டும் என்பது பற்றி , தேவனுக்கே அறிவுறுத்தி , உத்தரவிடுகிறார் (வசனங்கள் 1-3 வாசியுங்கள்). எதை.. , எப்போது.. , எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தேவன் நன்றாகவே அறிந்திருக்கிறார். ஆயினும்... , தாவீது செய்ததைப் போல... , அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் , நம்முடைய எதிர்பார்ப்புகளை... , குறிப்பான வழிமுறைகளோடு , தேவனுக்குப் பரிந்துரைத்து வெளிப்படுத்துகிற சுதந்திரம் இருக்கிறது. தேவனும் , அவருடைய பிள்ளைகளும்... , தேவ ராஜ்யத்தைக...