இருதயத்தில் பாவம்

B.A. Manakala என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் , ஆண்டவர் எனக்குச் செவிகொடார். சங். 66:18. மேற்காணும் படத்தில் உள்ளது ' துரியன் பழம் ' ஆகும். இது வெளியில் இருந்து பார்ப்பதற்குக் கூர்மையாய் , அருவருக்கத்தக்க தோற்றத்தோடு இருக்கிறது. ஆனால்... உள்ளிருக்கும் பழம்... , அழகாகவும் , ருசியாகவும் இருக்கும். பார்க்க அழகாக இல்லாவிட்டாலும் , மக்கள் இதை வாங்குவதற்குக் காரணம் , உள்ளே இது ருசியாக இருப்பதால் தான். நாம் ஜனங்களைப் பார்க்கையில் , வெளியே என்ன இருக்கிறதோ , அதை மட்டுமே நாம் பார்க்கக் கூடும். ஒருவேளை , அது உண்மை நிலையாய் இல்லாதிருக்கலாம். சிலர் , வெளியே நன்றாகத் தோற்றமளிப்பர். சிலரோ... வெளியே பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாய் இல்லாதிருக்கலாம். மற்ற ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் என்ன இருக்கிறது... என்பதைப் படித்தறியக் கூடிய பகுத்தறிதல்.... நம்மில் எல்லாருக்கும் இருப்பதில்லை. முரண்பட்ட விஷயம் என்னவென்றால் , சில சமயம்... , நம்முடைய சொந்த இதயத்தினுள் என்ன இருக்கிறது என்பதை நமக்கு நாமே பார்க்க முடியாது என்பது தான். அதனால் தான்... தாவீது ஒரு முறை , " உமக்கு வேதனை உண்டாக்க...