Posts

Showing posts from May, 2021

கூர்மையான கத்தியா?

Image
Monday, July 05, 2021 B.A. Manakala நீ கேடுகளை செய்ய எத்தனம் பண்ணுகிறாய். கபடு செய்யும் உன் நாவு , தீட்டப்பட்ட சவரகன் கத்தி போல் இருக்கிறது. சங். 52:2. சமீபத்தில்... , நாங்கள் எங்களுடைய சமையலறையின் பயன்பாட்டிற்காக , ஒரு கத்தியை வாங்கினோம். நாங்கள் இதுவரை பயன்படுத்திய மற்ற எல்லா கத்திகளையும் விட... , இது மிகவும் கூர்மையாக இருக்கிறது! எங்கள் விரல்களையும் கூட அடிக்கடி வெட்டி விடுகிறது. நம்முடைய நாவும் கூட , கூர்மையான கத்தி போன்று இருக்க முடியும் (52:2). சமையலறை கத்தி ஏற்படுத்தும் காயங்கள்... , பெரும்பாலும் பாதிப்பற்றவை. ஆனால்... நாவினால் ஏற்படக்கூடிய காயங்கள்... , கையாளக் கடினமானவை. வேதத்தில் , நாவைக் குறித்து பல குறிப்புகள் உள்ளன...: அதிகப் பேச்சு (நீதி. 10:19) , மாறுபாடுள்ள நாவு (15:4ஆ) , கோள் சொல்லும் நாவு (26:20) , நெருப்பு (யாக் 3:6). கெட்ட வார்த்தைகள் பேசுதல் (எபே. 4:29)... இப்படி இன்னும் பல! மிக முக்கியமாக... , நாவானது , ஆரோக்கியத்தையும் கொண்டுவர முடியும் (நீதி. 15:4அ). உங்கள் நாவை... , குத்துவதற்கா.. , குணமாக்குவதற்கா... , எவ்வாறு பயன்படுத்துவது என்பதை... , நீங்கள் தீர்மானிக்க முட...

இது அநீதி இல்லையா?

Image
Sunday, July 04, 2021 B.A. Manakala பலவானே , பொல்லாப்பில் ஏன் பெருமை பாராட்டுகிறாய் ? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. சங். 52:1. இந்த கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் , தேவன் மௌனம் சாதிப்பது... அநீதி இல்லையா ?  நீங்கள் இளமையாக இருக்கும் போதே உங்களுக்கு நரைமுடி இருந்தால்... , அது அநீதியா ? உங்கள் எதிரிகள் தூக்கிலிடப்பட்டால்... , அது நியாயமா ? அநீதியை நீங்கள் எவ்வாறு வரையறுக்கிறீர்கள் ? தேவன் , தாம் செய்து வருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர் (தானி. 9:14). தேவனோடு வாதிட்டு , மனிதனால் ஜெயிக்க முடியாது (யோபு 33:5). தேவனே யோபை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தார் (யோபு 1:6-12). சாத்தான் உட்பட... யாதொன்றையும் , தேவன் நோக்கம் இல்லாமல் உருவாக்கவோ , அனுமதிக்கவோ இல்லை (நீதி. 16:4). இந்த கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து தோன்றியது... , எத்தனை பேர் மரணிப்பர்... , எப்போது அது முடியும்... , உலகம் அதினால் எவ்விதம் பாதிக்கப்படும்... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக தேவன் அறிந்திருக்கிறார்! வேறு ஒருவரும் அறியார்! மனிதனின் நீதி , அநீதியை உள்ளடக்கியது. தேவன் ஒருவர் மட்டுமே மெய்யாய் நீதியுள்ளவர்! ஜெபம்: ...

சிறந்த பலி!

Image
Saturday, July 03, 2021 B.A. Manakala தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவி தான். தேவனே , நொறுங்குண்டதும் , நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங். 51:17. "என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன். மேலும் , வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன்" என்று அந்த பரிசேயன் தற்பெருமையுடன் கூறினான் (லூக். 18:12). தாவீது ராஜாவாக இருந்தார். அதனால் , தேவனுக்குக் கொடுப்பதற்கு , அவருக்குப் போதுமானவை இருந்தது. ஆனால்... , எல்லா மிருகஜீவன்களும் தேவனுக்குச் சொந்தமானவைகளாய் (சங். 50:10) இருக்கும் போது , தன்னைவிட... , அதாவது... தன் சொந்த ஆவி , ஆத்துமா , சரீரத்தை விட விலையேறப்பெற்ற வேறு எதையும் , தான் தேவனுக்குக் கொடுக்க முடியாது என்பதையும் தாவீது அறிந்திருந்தார். நன்மை செய்கிறதும் , தேவையுள்ளவர்களோடு நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறதுமே , தேவனுக்குப் பிரியமான பலிகள் (எபி. 13:16). எப்போதும் தேவனைத் துதித்துக் கொண்டே இருக்கிற ஸ்தோத்திர பலியே நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது (எபி. 13:15). நம்முடைய சரீரங்களும் கூட , ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் (ரோம. 12:1). மனந்திரு...

நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?

Image
Friday, July 02, 2021 B.A. Manakala தேவனே , என்னை இரட்சிக்குந் தேவனே , இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கி விடும். அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும். சங். 51:14. எனக்கு மனசு சரியில்லை என்றால்... , ஒன்றும் பேசாமல் மௌனம் சாதிப்பேன்! ஆனால்... , உற்சாகமான மனநிலையில் இருக்கையில்... , நான் எக்கச்சக்கம் பேசுவேன்! நீங்கள் எப்படி உங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள் ? தேவனுடைய மன்னிப்பை அனுபவிக்கும் போது... , ' தான் எவ்வாறு பாடுவார் ' என்பதை தாவீது கற்பனை செய்கிறார் (சங் 51:14). ' தேவன் யார் ' என்பதை அறிந்து கொள்ள , நாம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கலாம் (சங். 46:10). ஆனால்... , தேவன் யார் என்பதையும் , அவருடைய மன்னிக்கும் சுபாவத்தையும் பற்றி , மெய்யாகவே நாம் அறிந்து கொள்ளும் போது , நம்மால் அமைதியாக இருக்க முடியாது (சங். 100:1).   மகிழ்ச்சி , நம்மைப் பாட வைக்க வேண்டும் (யாக். 5:13). ஒரு பாவி மனந்திரும்பும் போது... அல்லது அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது... , பரலோகத்திலும் கூட மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது (லூக். 15:10). நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இ...

பாவம் நம் மகிழ்ச்சியை சூறையாடுகிறது

Image
Thursday, July 01, 2021 B.A. Manakala உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து , உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். சங். 51:12. என் மனைவி , எங்களுக்காக பிரத்யேகமான கறி வகை ஒன்றை தயாரித்தார். அதைக் குறித்து என் குழந்தைகள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால்... அது சாப்பாட்டு மேஜைக்கு வந்தபோது... , அவர்கள் ஏமாற்றமடைந்தனர். காரணம்... , அதில் சில மூலிகைகள் இருந்தன! இரட்சிப்பின் அனுபவம் , நமக்கு மகத்தான மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது (சங். 9:13 ; 13:5). ஆனால்... , பாவம் செய்த போது , தாவீது அந்த இரட்சிப்பின்  சந்தோஷத்தை இழந்து போனான்! (சங். 51:12). உலகம் என்ன கொடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்: மாம்ச சிற்றின்பங்கள் , கட்டுக்கடங்கா ஆசை இச்சைகள் மற்றும் பெருமையையே உலகம் அளிக்கிறது.(1 யோவா. 2:16) இவை தற்காலிகமானவை. மேலும்... , இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெரும்பாலும் இவை களவாடி விடுகின்றன. உலகம் தருகிற இவற்றை நீங்கள் நேசித்தால்... , உங்களால் பிதாவை நேசிக்க முடியாது (1 யோவா. 2:15). தற்காலிக சிற்றின்பத்திற்காக... , நித்திய பேரின்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்ளா...

நம்மில் பரிசுத்த ஆவியானவர்

Image
Wednesday, June 30, 2021 B.A. Manakala உமது சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும் , உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும். சங். 51:11. நம்முடைய பாவங்களினிமித்தம்... , பரிசுத்த ஆவியானவரை நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள தேவன் முடிவு செய்துவிட்டால்... , என்ன செய்வது ? உண்மையைச் சொல்லப்போனால்... , சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்தி (யோவா. 16:13) , நம்மைப் பாவத்திலிருந்து விலக்கிக் காக்கிறவரே... (கலா 5:16) பரிசுத்த ஆவியானவர் தானே.. ?! அப்படியானால்... , தீர்வு... , பாவத்தை அறிக்கையிடுதலும் , மனந்திரும்புதலும் தான். நாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு , தேவனிடம் திரும்பும் போது , அவர் நம்மை மன்னிக்கிறார் (1 யோவா. 1:9). தேவனுடைய மன்னிப்பு.. , நம்முடைய புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டது (லூக். 15:11-43). ஆயினும்.. , நாம் தொடர்ந்து பாவம் செய்யும்போது , கிருபை பெருகும் என்று எண்ணாதீர்கள் (ரோம. 6:1-2). பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருந்தால்.. , நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் (ரோம. 8:9). நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாய் இருந்தால்... , பரிசுத்த ஆவியானவர் உங்களை விட்டு ஒருபோதும்...

இதை நீங்கள் சீரமைக்க முடியாது!

Image
Tuesday, June 29, 2021 B.A. Manakala தேவனே , சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங். 51:10. ஒரு தடவை... , என் மகன் என்னிடம் ஓடி வந்து , " அப்பா , தயவுசெய்து என் சைக்கிளை சரிசெய்து கொடுங்கள்" என்றான். சின்னச்சின்ன பிரச்சனைகள் என்றால்... , அவனே சரிசெய்ய முயற்சிப்பான். ஆனால் இந்த தடவை... , பெரிய பழுது ஒன்றை சரிசெய்ய வேண்டியதாய் இருந்ததால்... , என்னாலும் முடியாமல்... , நான்   அதைப் பழுது நீக்கும் கடைக்கு எடுத்துச்செல்ல வேண்டியதாயிற்று! பல பிரச்சனைகளை நாமே சரிசெய்துவிட முடியும். ஆயினும்... , எல்லாவற்றையும் அல்ல! சைக்கிளை சரிசெய்யக் கூடிய  இடத்தை நான் அறிந்திருந்ததைப் போலவே... , தான் அதிதீவிரமாய் வாஞ்சித்த... சுத்தமான ஓர் இருதயத்தை உருவாக்கக்கூடியவரை தாவீது அறிந்திருந்தார். இதயம் என்பது... , அடிக்கடி , விரைவாய் அழுக்காகிவிடும் ஒன்று. மேலும்... , அதனுடைய சிருஷ்டிகர் மட்டுமே அதை சுத்திகரிக்க முடியும். மனதைப் புதுப்பித்தல்... , ஓர் தொடர்ச்சியான செயல்முறை (ரோம. 12:2). பல விஷயங்களை மனிதன் சரிசெய்ய முடியும் ; ஆனால்... , பாவம் நிறைந்த இருதயத...

பார்த்துக் கொண்டே இருத்தல்

Image
Monday, June 28, 2021 B.A. Manakala என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து , என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். சங். 51:9. நம்முடைய சொந்த கடந்த கால பாவங்களை.. ,  நாம் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்! இன்னும் ஒருபடி மோசமாக... , நாம் பிறருடைய பாவங்களையும் கூட நினைவில் வைத்துக் கொண்டே இருக்கிறோம்! நம்முடைய கடந்த கால பாவங்களுக்காக தேவன் நம்மைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவதாக நாம் நினைக்கிறோம்.  ஆனால்... , தேவன் தாவீதை மன்னித்து விட்டார் (2 சாமு. 12:13). ஒரு முறை மன்னித்துவிட்டால்... , பின்னர் ஒருபோதும் தேவன் நம்முடைய பாவங்களை நினைவில் கொள்வதில்லை (எரே. 31:34). அவருடைய பிள்ளைகளாகிய நாமும் கூட... , அது போன்ற செயலைச் செய்ய வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். தாவீதையும் , பத்சேபாளையும் , இயேசுவின் வம்ச அட்டவணையில் சேர்க்க.. , நாம் ஒருபோதும் விரும்பாதிருக்கலாம்... ஆனால் தேவன் அப்படியில்லை! (மத். 1:6). மன்னிக்கப்பட்டுவிட்ட உங்களுடைய கடந்த கால பாவங்களையும் , மற்றவர்களுடையவற்றையும் , பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள். தேவன் செய்வதைப் போலவே... , உங்களையும் , ...

மதி Vs மதியீனம்

Image
Sunday, June 27, 2021 B.A. Manakala இதோ , உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். சங். 51:6. "நான் முப்பதே விநாடிகளில் , 5000 புள்ளிகளைப் பெற்றுவிட்டேன்!" என்று... , அவர்களுடைய விளையாட்டின் நடுவே... , ஒரு சிறுவன் மற்றொருவனிடம் , கூறினான்! இந்த நவீன உலகிலே.. , மனிதனுக்கு எக்கச்சக்கமாய் அறிவும் , ஞானமும் இருக்கிறது. தன்னுடைய சுய ஞானத்தின் அடிப்படையில் , அவன் மற்றவர்களுக்கு ஏராளம் கற்பித்துக் கொண்டே இருக்கிறான். ஆனாலும்... , இந்த உலகத்தின் ஞானம் , தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாய் இருக்கிறது... என்பதை நினைவில் கொள்ளுங்கள்! (1கொரி 3:19). தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது , மனுஷனுடைய ஞானத்திலும் அதிக ஞானமாய் இருக்கிறது! (1 கொரி. 1:25). கருவிலேயே தேவன் ஞானத்தை அருளுகிறார்! (சங் 51:6) அவரே ஞானத்தின் மெய்யான மூல ஆதாரம் (நீதி. 2:6). மனிதனின் மதி... , மதியீனம் ஆக முடியும் ; தேவனின் புத்தியீனம்.. , புத்தியாய் இருக்க  முடியும்! ஜெபம்: கர்த்தாவே , எப்போதுமே மெய் ஞானத்தைத் தேடுவதற்கு , எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!   (Translated from ...

எப்போதும் என் முன்னால்..!

Image
Saturday, June 26, 2021 B.A. Manakala என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன். என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங். 51:3. நம்மில் வெகு சிலருக்காவது... , கொரோனா பற்றிய செய்திகளே , எப்போதும் நம் கண் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கலாம். உங்கள் முன்பாக எப்போதும் இருப்பது என்ன ? தாவீதைப் பொறுத்தவரை... , இந்தச் சூழலில் , அவருடைய பாவம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து , அவரைக் காயப்படுத்தியது (51:3). நம்முடைய சொந்த பாவங்களை , நாம் கண்டுணர வேண்டியது அவசியம் (51:3அ). ஆயினும்... , எவ்வளவு முடியுமோ அவ்வளவு சடுதியாக... நாம் மனந்திரும்பி , மறுசீரமைக்கப்பட்ட உறவுக்குள் திரும்பி வருவது அதைவிட அவசியம் (51:2). தேவன் மோசேயிடம் , " நான் உன்னோடு செல்வேன்" என்றார் (யாத். 33:14). இயேசு , " நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன்" என்றார் (மத் 28:20). நம்மில் உள்ள அவருடைய வார்த்தையே , நம்மைப் பாவத்திலிருந்து விலக்கிக் காக்கிறது (சங். 119:105). பாவத்துடன் வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தேவனோடும் , அவரது வார்த்தையோடும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தாவே , உம்மாலும் , உம்...

தேவனுக்கு விரோதமாக!

Image
Friday, June 25, 2021 B.A. Manakala தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து ,  உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்.  நீர் பேசும் போது உம்முடைய நீதி விளங்கவும் , நீர் நியாயந்தீர்க்கும் போது , உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை  அறிக்கையிடுகிறேன். சங். 51:4. யானைகளும் , சிங்கங்களும்... மனிதனை விட மிக அதிக பலம் வாய்ந்தவையாக இருந்தாலும்... , அவைகள் , மனிதனால் வசப்படுத்தப்பட்டு , அடக்கப்படுகின்றன. எப்போதாவது , நாம் தேவனுக்கு விரோதமாக எதையாவது செய்ய முடியுமா ? தேவன் ஒருவரே ஏக சக்ராதிபதி என்பதையும் அவரே வல்லமையுள்ளவர் என்பதையும் நான் அறிந்திருக்கிறபடியால்... , நான் வேண்டுமென்றே தேவனுக்கு விரோதமாக எதையும் செய்கிறதில்லை என நான் நினைக்கிறேன். எனக்கும் , தேவனுக்கும் இடையே.. , பகையை உருவாக்குகிற ஒரே விஷயம்... , பாவம்! இதுவே... , ' எனக்கு விரோதமாக ' தேவனின் நியாயத்தீர்ப்பையும் விளைவிக்கிறது! ஆயினும்... , நான் மனந்திரும்பும் போது... , இயேசு கிறிஸ்துவின் மூலமாக.. , தேவனுடைய இரக்கத்தை நான் கண்டுகொள்கிறேன் ( 1 தீமோ. 1:16) உங்களுக்காகவும் , எனக்காகவும்... , இடைவிடாமல் இயேச...

ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

Image
Thursday, June 24, 2021 B.A. Manakala ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான். தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்கிறார். சங். 50:23. ' உங்கள் தொல்லைக்கு நன்றி! ' - இது அர்த்தமுள்ள வாக்கியமா ? மனிதனுக்கு ஒருவேளை அப்படி இல்லாதிருக்கலாம். நமக்கு ஏதாவதொரு நன்மை செய்கிற ஒருவருக்கு , நாம் எளிதாக நன்றி சொல்லிவிட முடியும். ஆயினும்... , நல்லதோ , கெட்டதோ... , எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்தோத்திரம் செலுத்த வேதம் நமக்குக் கற்றுத் தருகிறது (1 தெச. 5:18). இன்னும் ஓர் படி தீவிரமானது எதுவென்றால்.. , உங்கள் உபத்திரவங்களிலும் களிகூர்வது ஆகும் (யாக். 1:2). நாம் அனுபவிக்கிற எல்லா நல்ல விஷயங்களுக்காகவும் , தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக. மேலும்.... , வேதனைகளிலும் , சோதனைகளிலும் கூட... , தேவனுக்கு நன்றி செலுத்த நாம் கற்றுக் கொள்வோமாக. ஏனென்றால்... , அப்படிப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலையையும் கூட... , அவர் நமக்கு நன்மையாக மாற்றுகிறார் (ரோம. 8:28). மெய்யாய் தேவனை மகிமைப்படுத்த மிகவும் எளிய வழி.. , நன்றி செலுத்தும் இதயமே (50:23) . ஜெபம்: கர்த்த...

தேவன் பொருட்படுத்தவில்லையா?

Image
Wednesday, June 23, 2021 B.A. Manakala இவைகளை நீ செய்யும் போது , நான் மவுனமாயிருந்தேன். உன்னைப் போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய். ஆனாலும் , நான் உன்னைக் கடிந்து கொண்டு , அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். சங். 50:21. என் சிறு பிராயத்திலே... , நான் ஒருவனிடமிருந்து தினமும் ஏதாவதொன்றை திருடிக் கொண்டே இருந்தேன். அவன் , சில நாட்களுக்கு அமைதி காத்துக் கொண்டே வந்தான். திடீரென ஒரு நாள்... , என்னைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டான்! உங்களுடைய பாவங்களைப் பற்றி , தேவன் மௌனமாய் இருக்கும் போது... , அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்று நினைக்காதீர்கள். 16-20 வரை உள்ள வசனங்களில்.. , வரிசைப்படுத்தப்பட்டுள்ள பாவங்களின் பட்டியல் இதோ...: பாசாங்காய் நடித்தல் , அவர் வார்த்தையைப் புறக்கணித்தல் , திருடரை அங்கீகரித்தல் , விபச்சாரம் , துன்மார்க்கம் , பொய்கள் , மற்றும் அவதூறு. தேவனின் கிருபை தான் நம்மைத் தாங்கி , நிலைநிறுத்துகிறது. ஆனாலும்... , தேவன் தம்முடைய ஆச்சரியமான கிருபையை மேலும் மேலும் காண்பிக்கிறதற்காக... , நாம் தொடர்ந்து பாவம் செய்ய வேண்டுமோ ? ஒருபோதும் கூடாதே! (ரோம. 6:...

அற்பமாகும் தேவனின் வார்த்தை!

Image
Tuesday, June 22, 2021 B.A. Manakala சிட்சையை நீ பகைத்து , என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்து போடுகிறாய். சங். 50:17. வழக்கமாக... , ஒவ்வொரு உணவு வேளையின் முடிவிலும்.. , என் குழந்தைகளுடைய தட்டுகளில் ஏராளம் மிச்சம் இருக்கும். அதே சமயம் , எங்களுடைய தட்டுகளோ.. , காலியாகி , பொதுவாக சுத்தமாய் இருக்கும். காரணம்... , அவர்கள் காய்கறிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். நாங்கள் அவற்றை சாப்பிட்டு விடுகிறோம். குழந்தைகள் , காய்கறிகளை உணவின் இன்றியமையாத பகுதியாகக் கருதினாலும்... , உணவின் முடிவில் , அவை வீணாகின்றன என்பது தெளிவாகிறது. நம்மில் யாரும் தேவனுடைய வார்த்தையை , குப்பை போல் அற்பமாகக் கருதுவதாக நான் நினைக்கவில்லை (சங். 50:17). ஆயினும்... , நாம் அதைக் கேட்டுவிட்டு , அடிக்கடி அதைப் புறக்கணித்து விடுகிறோமன்றோ ? ( யாக். 1:21-25). நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கவில்லையா ? ( 1 யோ. 2:3). நாம் சத்தியத்தை சிதைத்துப் போடவில்லையா ? ( அப். 20:30). நாம் புறக்கணித்து , மதிப்பற்றதாய்க் கருதுகிற எதுவும் குப்பை போல் அற்பமாகின்றது... , அது தேவனுடைய வார்த்தையே என்றாலும் கூட! ஜெபம்: க...

நாம் தேவனுக்கு ஒரு வெகுமதியைக் கொடுக்க முடியுமா?

Image
Saturday, June 19, 2021 B.A. Manakala சகல காட்டுஜீவன்களும் , பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். சங். 50:10. என்னுடைய பிள்ளைகள் இளம் பிராயத்தில் இருந்த போது... , அவர்கள் , என்னுடைய சொந்த அலமாரியில் ( shelf) இருந்தே ஒரு பொருளை எடுத்து , அழகான காகித உறையில் அதைப் பொதிந்து , என் பிறந்தநாளில் , எனக்கே பரிசளித்தார்கள். எனக்கு பரிசளிக்க வேண்டும் என்ற அவர்களுடைய வாஞ்சையையும் , அவர்களுடைய அன்பையும் நான் மெச்சினேன். ஏற்கனவே தேவனுக்கு சொந்தமானவற்றை மட்டுமே , நாம் அவருக்குக் கொடுக்கிறோமா ?  அவருக்குச் சொந்தமல்லாத ஏதாவதொன்றை , நம்மால் அவருக்குக் கொடுக்க முடியுமா ? உங்களுடைய நன்றிகளை நீங்கள் தேவனுக்கு பலியாகச் செலுத்துங்கள். உன்னதமானவருக்கு நீங்கள் பண்ணின பொருத்தனைகளை நிறைவேற்றுங்கள் (50:14). அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவரை மகிமைப்படுத்துங்கள் (50:15). ஸ்தோத்திர பலிகளைச் செலுத்துங்கள் (எபி. 13:15-16).  நீங்கள் கபடாய் நடக்காதபடிக்குப் பாருங்கள் (50:16). அவருடைய கட்டளைகளைக் குப்பையைப் போல எறிந்து போடாதிருங்கள் (50:17). நம் வெகுமானங்கள்.. , நம்முடைய இதயங்களில் இருந்து உத...

மகிமையின் பிரகாசம்!

Image
Friday, June 18, 2021 B.A. Manakala பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். சங். 50:2. என் சகோதரனுடைய வீட்டின் படுக்கையறையிலே... , முழு வீட்டையும் , உள்ளேயும் வெளியேயும் ஒளிரச் செய்யக்கூடிய.. , ' அவசரகால பிரதான சுவிட்ச் ' (emergency master switch) ஒன்று உண்டு.  முழு உலகத்தையும் ஒளிரச் செய்கிற ' மகிமையின் பிரகாசம் '... நம் தேவனிடம் உண்டு. அது... , இருளில் மறைந்திருக்கிறவற்றையும் கூட வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. அனைத்தையும் , அதன் பாணியிலே பட்சித்துப் போடப் போகிற ஓர் நியாயத்தீர்ப்பும் , அக்கினியும் காத்துக் கொண்டிருக்கிறது! (சங். 50:3-4). மரம் , புல் , வைக்கோலால் ஆனவை எதுவாயிருந்தாலும்... , அவை வெந்துபோகும். பொன் , வெள்ளி , விலையேறப்பெற்ற கற்களால் ஆனவை எதுவாயிருந்தாலும் , அவை நிலைத்திருக்கும். (1 கொரி. 3:12-14). அந்த நாளிலே... , உங்கள் வாழ்க்கையில் உள்ள எது வெளியரங்கமாக்கப்படும்... , எது நிலைநிற்கும்... என்பதைப் பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா ? ஓர் மெழுகுவர்த்தியில் உள்ள தீச்சுடர் , ஒரு அறையை ஒளிரச் செய்கிறது ; வைக்கோல் மீது பற்றும் நெருப்போ... , அன...

வல்லமையுள்ளவரா?

Image
Thursday, June 17, 2021 B.A. Manakala வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து ,  சூரியன் உதிக்குந் திசை தொடங்கி , அது அஸ்தமிக்குந்  திசை வரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். சங். 50:1. பூமியிலே , வெறும் மூன்று நபர்கள் மீது மட்டுமே எனக்கு ஆற்றலும் , அதிகாரமும் இருக்கிறதாக நான் உணர்கிறேன்... அவர்கள்... என்னுடைய மூன்று குழந்தைகள்! தன் வல்லமையிலும் , அதிகாரத்திலும் , மனிதன் வரையறைக்கு உட்பட்டவனாய் இருக்கிறான்.  நாம் பலவீனர்கள் என்றும் , பல விஷயங்களை நம்மால் செய்யவே முடியாது என்பதையும் நாம் உணருகிறோமா ? வல்லமையும் , அதிகாரமும் படைத்தவராய்... , முழு மனித குலத்திற்கும் , சிருஷ்டிப்பு அனைத்திற்கும் , தேவனாய் இருக்கிற ஒருவர் இங்கே இருக்கிறார். நம்முடைய தேவன் , ' எவ்வளவு வல்லமையுள்ளவர் ' என்பதையும் , ' எவ்வளவு இறையாண்மை படைத்தவர் ' என்பதையும் , புரிந்து கொள்கிறதிலே... , நாம் குறுகிய வரம்புக்குள்ளே தான் இருக்கிறோம்... , இல்லையா ? அவருடைய அறிவு அளவில்லாதது! ( சங் 147:5) அவர் இரட்சிக்க வல்லமையுள்ளவர் (செப். 3:17). ' தேவன் எவ்வளவு வல்லமையானவர் ' என்பதை , நான் எவ்வளவு அதிகமாக...

பிறர் வெற்றியுள்ளவர்களாய் இருக்க உதவுங்கள்!

Image
Wednesday, June 16, 2021 B.A. Manakala அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும் , நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்... சங். 49:18. பொதுவாக... ,  வெற்றியுள்ளவர்களாகவும் , அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பதிலே தான் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.... , இல்லையா ? ஆயினும்... , நம்முடைய வெற்றிகள்... , ஆஸ்திகள்... , மற்றும் நாம் பேணிக் காக்கிற யாவும்... , இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமே இருக்குமோ ? ஏனென்றால்... , நாம் மரிக்கும் போது , நம்மோடு ஒன்றும் கொண்டு போக முடியாதே! (சங். 49:17). என்றாலும்... , பிறருடைய ஆசீர்வாதம் , வெற்றி , மற்றும் வளங்களுக்கான காரணியாக மாறுவதன் மூலம் நம்முடைய செயல்பாட்டிலே நாம் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்தால்... , அதன் தாக்கம் , இந்த வாழ்க்கையையும் தாண்டி , அதற்கப்பாலும் செல்ல முடியும்! எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ , அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் (நீதி. 11:25). மெய்யாகவே நாம் கர்த்தரை நேசித்தால்... , மற்ற எல்லார்மீதும் நமக்கு சமூக அக்கறை இருக்கும். பிறர் செழித்தோங்கும் போது , மெய்யாகவே நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா ? அப்படியானால்... , உங்...

நாம் அதை வாங்க முடியுமா?

Image
Tuesday, June 15, 2021 B.A. Manakala எவ்விதத்திலாவது அவனை மீட்டுக் கொள்ளவும் , அவனிமித்தம் மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. சங். 49:8. சிலர் தங்கள் செல்வத்தை நம்பி , அதைக் குறித்து பெருமைபாராட்டுகிறார்கள் (வச. 6). மரணத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக , ஒருவரும் தேவனுக்கு மீட்புத் தொகையைச் செலுத்த முடியாது (வச. 7).   நம்மிடம் இருப்பவை.. , நம்முடைய மீட்புக்காக செலுத்துவதற்கு போதுமானதாக இருந்திருந்தால்... ,  நம்மில் பலர் எளிதாக அதை வாங்கி இருப்போம். மேலும்... , வேறு சிலருக்கும் கூட மீட்கும் பொருளை செலுத்துவதன் மூலம் , நாம் அவர்களுக்கும் உதவியிருப்போம். ' உங்களுக்குப் போதுமானது இருக்கிறது ' என்று நீங்கள் நினைத்தால்... , ' உண்டானவைகளை எல்லாம் விற்று , தரித்திரருக்குக் கொடுக்க வேண்டும் ' என்பதே இயேசுவின் அறிவுரை (மத். 19: 16-21). உங்களுக்கும் , ' உங்களுக்கு சொந்தமானவை ' என்று நீங்கள் நினைக்கிற அனைத்திற்கும் தேவனே சொந்தக்காரர். அவரே நம் எல்லாருக்காகவும் கிரயம் செலுத்தி இருக்கிறார் (1 யோவா. 2:2). தேவன் உங்களுக்காக வாங்கியதை , அவரால் மட்டுமே வாங்க முடிய...

உங்கள் வார்த்தைகள் ஞானமுள்ளவைகளா?

Image
Saturday, June 12, 2021 B.A. Manakala என் வாய் ஞானத்தைப் பேசும். என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். சங். 49:3. "வீட்டில் இருங்கள்! பாதுகாப்பாய் இருங்கள்!"... இது பெருந்தொற்றுச் சூழலில் , பலருக்கும் உதவிய புத்திசாலித்தனமான முழக்கம்! உங்களுடைய வாயிலிருந்து வெளிவருகின்ற ஞானமுள்ள வார்த்தைகள் என்ன ? மற்றவர்களை , சரியான தெரிந்தெடுப்புகளையும் , தீர்மானங்களையும் எடுக்கச் செய்கிறதில்... , உங்களுடைய ஞானம் எவ்வாறு அவர்களுக்கு உதவுகிறது ? பேசாதிருந்தால்.. , மூடன் கூட ஞானவான் என்று கருதப்படுவானாம் (நீதி. 17:28). தேவனே ஞானத்தின் மூல உற்பத்தி ஸ்தானமானவர் (யோபு 12:13). நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாய் இருந்தால்.. , கர்த்தரிடம் கேளுங்கள் (யாக். 1:5). உங்களுக்கு ஞானம் இருக்கும் போது மட்டும் பேசுங்கள் ; அர்த்தமற்ற வார்த்தைகளைப் பார்க்கிலும் மௌனம் சாலச் சிறந்தது! ஜெபம்: கர்த்தாவே , நான் எப்போதும் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசத்தக்கதாக.. , என்னை உம்முடைய ஞானத்தினால் நிரப்பியருளும். ஆமென்!   (Translated from English to Tamil by Catherine Joyce)    

ஐசுவரியவான்களும் ஏழைகளும்

Image
Friday, June 11, 2021 B.A. Manakala சிறியோரும் , பெரியோரும் , ஐசுவரியவான்களும் , எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். சங். 49:2. உங்கள் சொந்தப் புரிதலில்... , ' ஐசுவரியவான் ' மற்றும் ' ஏழை ' ஆகிய வார்த்தைகளின் அர்த்தம் என்ன ? தேவனுக்கு , இந்த வார்த்தைகளின் பொருள் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய புரிந்துகொள்ளுதலில்... , ஐசுவரியவான்கள் என்றால்... , அவர்களுக்கு அதிக பணம் இருக்கலாம்.  ஏழைகளுக்கு பணம் குறைவாகவோ , அல்லது பணம் இல்லாமலோ இருக்கலாம். ஆயினும் , கஷ்ட  காலங்களில்... , அவ்விருவருமே தேவனிடம் தான் திரும்ப வேண்டும். மேலும்... , தேவனே பணக்காரரையும் ,  தரித்திரரையும் உண்டாக்கினவர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் (நீதி. 22:2). இறுதியில்.. , முக்கியமானது என்னவென்றால் ,  ' ஐசுவரியவான்களாய் இருப்பது என்றால்... உண்மையில் என்ன ' என்பதின் அர்த்தத்தை இருவருமே புரிந்து கொள்கிறது தான் (கொலோ. 2:27). ' மெய்யாகவே ஐசுவரியவான்களாய் இருப்பது என்றால் என்ன ' என்பதை அவர்கள் உணரும்  போது... , ஐசுவரியவான் உண்மையிலேயே ஐசுவரியவா...