Posts

Showing posts from April, 2021

உபத்திரவங்களில் மட்டுமா?

Image
Thursday, May 27, 2021 B.A. Manakala தேவன் நமக்கு அடைக்கலமும் , பெலனும் , ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங். 46:1. சில வேளைகளில்... , எங்களுடைய பிஞ்சுக் குழந்தையை , அவளுடைய உடன்பிறப்புகளில் ஒருவருடன் சேர்த்து படுக்கையறையில் விட்டுவிட்டு , நாங்கள் கதவைப் பூட்டி விடுவோம். ஆயினும்... , எங்களுடைய கவனமெல்லாம் அங்கே தான் இருக்கும். அவள் அழுதால்... , உடனே நாங்கள் ஓடிச் சென்று , என்ன விஷயம் என்று பார்ப்போம். மேற்காணும் வசனத்தில்... , " தேவன் ஆபத்துக் காலத்தில் மாத்திரமே உதவி செய்ய தயாராக இருக்கிறார்" என்று சொல்வது போலத் தெரிகிறது! ஆனால்... , உண்மை என்னவென்றால்.. , நாம் ஜெபிக்கும் போது மட்டுமே தேவனை நோக்கிப் பார்க்கிறோம். நமக்கு ஆபத்து நேரிடுகையில் மட்டுமே , அவரை நோக்கிக் கதறிக் கூப்பிட முனைகிறோம். எங்கள் குழந்தை அழுகையில்... , அவளுக்கு சிறப்பான பராமரிப்பு கிடைக்கிறது. என்றாலும்... , பெற்றோராக நாங்கள் எப்போதும் அவள் மீதே கவனமாய் இருக்கிறோம். நாம் போகும் இடமெல்லாம் , தேவன் நம்மோடே கூட இருக்கிறார் (யோசு. 1:9). நாம் முழங்காலில் நிற்கையில்.. , தேவனை இன்னும் நன்றாகக் காண்கிறோம்...

ஒரு ராஜாவை என்றென்றும் துதிப்பதா?

Image
Wednesday, May 26, 2021 B.A. Manakala உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன். இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் துதிப்பார்கள். சங். 45:17. தாவீது ராஜாவின் கீர்த்தியும் , புகழ்ச்சியும் தலைமுறைகளுக்கு மட்டுமல்லாது... , என்றென்றைக்கும் இருப்பது பற்றி... , இங்கே கோராகின் புத்திரர் பேசுகின்றனர். இது... , ஓர் ராஜாவைப் புகழ்வதற்கான வழியே அன்றி வேறல்ல. ஆனாலும்... , ஒரே ஒருவரை மாத்திரமே நாம் சதாகாலங்களிலும் துதிக்க முடியும். "என் தேவனாகிய ஆண்டவரே , உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து , உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்" (சங். 86:12). மிக முக்கியமாக... , தேவனைத் துதிக்கிற பழக்கத்தை நம் பிள்ளைகளுக்கும் , இனி வரப்போகிற பல தலைமுறைகளுக்கும் நாம் பிரஸ்தாபப்படுத்த வேண்டும். நாம்... , நம் பிள்ளைகள்... , அவர்களுடைய பிள்ளைகள்.... , என எல்லாரிடமிருந்தும் துதிகளைப் பெற நம் ராஜா பாத்திரர். ஜெபம்: கர்த்தாவே , என் ஜீவிய நாட்களெல்லாம் உம்மை உண்மையோடு துதிக்கவும்... , அதையே என் பிள்ளைகளும் செய்வதற்கு , அவர்களைப் பழக்குவிக்கவும்... எனக்கு ...

நித்திய ஆசீர்வாதம்

Image
Tuesday, May 25, 2021 B.A. Manakala தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். சங். 45:2இ. இவை... , ராஜாவைப் பற்றி , கோராகின் புத்திரரால் சொல்லப்பட்ட வார்த்தைகள். தேவனுடைய ஆசீர்வாதங்களினிமித்தம்.. , ராஜா எப்படி இருக்கிறார் என்பதை , வச 3-5 விவரிக்கின்றன. யாருடைய ஆசீர்வாதங்கள் நம்மேல் தங்கியுள்ளன என்பதே முக்கியம். தற்காலிகமானதும் , அழிந்துபோகக் கூடியதுமான பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்தே... , பெரும்பாலும் நாம் ஆர்வம் கொள்கிறோம். ஆனால்... , நித்தியமான பரலோக ஆசீர்வாதங்களைப் பற்றின நம் சிந்தை என்ன ? ஒருமுறை... , தன் சகோதரனாகிய யாக்கோபு , தன்னை ஏமாற்றி , தன்னுடைய ஆசீர்வாதத்தை எடுத்துக் கொண்ட போது... , ஏசா தன் தகப்பனிடம் , " இந்த ஒரே ஒரு ஆசீர்வாதம் மாத்திரம் தானா உம்மிடத்தில் உண்டு ? என்னையும் ஆசீர்வதியும்" என்று கெஞ்சி அழுதான். பூமியிலே இழந்து போன சிலாக்கியங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்களுக்காக , எப்போதும் தேவனிடம் ஓடுங்கள். பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் தற்காலிகமானவை ; பரலோக ஆசீர்வாதங்களோ நித்தியமானவை. ஜெபம்: கர்த்தாவே , பரலோக...

வசீகரிக்கும் வார்த்தைகள்

Image
Saturday, May 22, 2021 B.A. Manakala என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன். என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. சங். 45:1. வார்த்தைகளின்றி ஒருவராலும் உயிர்வாழ முடியாது! நீங்கள் எதைப் பேச வேண்டும்... ; எதைப் பேசக் கூடாது... என்பதைத் தீர்மானிக்கிற ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்கள் வார்த்தைகளை இனிமையாக்குவதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம். மென்மையான வார்த்தைகள் , ஜீவனைக் கொண்டு வருகின்றன (நீதி. 15:4). ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேச வேண்டுமென உங்களுக்குத் தோன்றுகையில்... , ஒருபோதும் மௌனம் சாதிக்காதீர்கள்... ஏனென்றால்... , அவ்வார்த்தைகள் பிறரை ஆசீர்வதிக்கக் கூடியவை. ஓர் மலையாள முதுமொழி இவ்வாறாகச் சொல்கிறது...: "மௌனம் ஞானிகளுக்கு அலங்காரம்.... அதீத மௌனம் பைத்தியத்தின் அறிகுறி!" நாவு... , ஓர் திறமையான கவிஞருக்கு எழுத்தாணி. அதே சமயத்தில்... , அது ஓர் நெருப்புச் சுடர்! (சங் 45:1 ; யாக் 3:6) ஜெபம்: கர்த்தாவே , தேவைப்படும் போதெல்லாம்... , இனிமையான வார்த்தைகளைப் பேசுவதற்கு , எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!   (Translated fro...

தூங்குகிற தேவன்!

Image
Friday, May 21, 2021 B.A. Manakala ஆண்டவரே , விழித்துக் கொள்ளும். ஏன் நித்திரை பண்ணுகிறீர் ? எழுந்தருளும். எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.  ஏன் உம்முடைய முகத்தை மறைத்து , எங்கள் சிறுமையையும் , எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர் ? சங். 44:23-24. வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களில்.... , " நீர் ஏன் என் வேதனையைப் புறக்கணிக்கிறீர் ?"  என்று நாம் தேவனிடம் கேட்கக் கூடும். இந்தக் கொரோனா பெருந்தொற்றின் மத்தியிலும் கூட... , பலர் இதையொத்த கேள்விகளைக் கேட்கக் கூடும். தேவ ஜனங்கள் , தேவனையே பின்பற்றி , அவருடைய கட்டளை மற்றும் நியமங்களின்படி நட‌ந்தாலும் கூட... , தேவன் அவர்களைப் புறக்கணிக்கிற பல்வேறு வழிகளைப் பற்றி , சங் 44: 9-22 வசனங்கள் விவரிக்கிறது. உண்மையில்... , தேவன் உறங்குவதுமில்லை. தூங்குகிறதுமில்லை (சங். 121:4). நம்மையும் , நம்முடைய பாரங்களையும் , அவரே ஒவ்வொரு நாளும் சுமக்கிறார் (சங். 68:19). அவர் எப்போதுமே சுறுசுறுப்பாய் இயங்குகிறவர். இருப்பினும்... , தேவனுக்கு முன்பாக உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்துவது நல்லதே. இயேசுவும் கூட அப்படிச் செய்தாரே! (மத். 27:46). த...

தொடர்ந்து செய்தல்

Image
Thursday, May 20, 2021 B.A. Manakala தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம். உம்முடைய நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். சங். 44:8. நாம் எதை இடைவிடாமல் செய்கிறோம்.. , சுவாசிப்பதையா ?! ஆனால்... , இது நாம் தூங்கினாலும் , விழித்திருந்தாலும்.... தானாகவே நடக்கிறதே! சில காரியங்களை , நாம் இடைவிடாமல் செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது: 1) ஜெபித்தல் (1 தெச. 5:17). 2) அவருடைய வார்த்தையை தியானித்தல் (சங். 1:2). 3) தேவனைத் துதித்தல்/ஆராதித்தல் (இன்றைய வசனம்) 4) சக விசுவாசிகளோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளுதல் (அப். 2:4). 5) கர்த்தருக்குள் சந்தோஷமாயிருத்தல் (பிலி 4:4) தேவனுடன் சீரான ஐக்கியம் கொள்வது... தானாக நடப்பதில்லை. சுவாசிப்பதை நிறுத்துங்கள்... ; உங்கள் சரீரம் படிப்படியாக இறந்து விடும். தேவனோடுள்ள ஐக்கியத்தை நிறுத்துங்கள்... ; உங்கள் உள்ளான மனிதன் படிப்படியாக மரித்து விடுவான்! ஜெபம்: கர்த்தாவே , உம்மோடு சீரான ஐக்கியத்தில் இருப்பதற்கு , எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!   (Translated from English to Tamil by Catherine Joyce)      

என் பட்டயம்

Image
Wednesday, May 19, 2021 B.A. Manakala என் வில்லை நான் நம்பேன். என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. சங். 44:6. என் பட்டயம் ! எனக்கு வல்லமை , அதிகாரம் , திறன் , பலம் , பணம்... இன்னும் இதுபோன்று எக்கச்சக்கம் உண்டு! என்னை இரட்சிக்கவும் , நிலைநிறுத்தவும் , பாதுகாக்கவும் இவைகள் போதுமானவை என்று நான் அடிக்கடி எண்ணுகிறேன். ஆனால் , இவைகளில் எதுவுமே... , அவைகள் செய்யும் என்று நான் நினைத்ததை... , பெரும்பாலும் செய்ய முடியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால்... , இவற்றில் சில... , அவை என்ன செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ... , அதற்கு நேர்மாறாகவும் கூடச்  செய்கின்றன! ' நாம் நம்புகிற நம்முடைய பட்டயம் என்ன ' என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். நம்மையும் அறியாமலேயே... நாம் அவற்றைத்தான் பெரும்பாலும் நம்புகிறோம். எப்போதும் தேவனையே நம்பக் கற்றுக்கொள்ளுங்கள் ; நீங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்! ஜெபம்: கர்த்தாவே , என்னிடம் ஒரு பட்டயம் இருக்கும் போதும் கூட... , உம்மை மாத்திரம் நம்புவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!   (Translated from English to Tamil by Catherine Joyce)    

வலக்கரம்

Image
Tuesday, May 18, 2021 B.A. Manakala அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை. நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால் , உம்முடைய வலது கரமும் , உம்முடைய புயமும் , உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது. சங். 44:3. என்னுடைய அப்பா , இடதுகைப் பழக்கமுடையவர்கள். அவர்கள் ஏறத்தாழ எல்லாவற்றையும் தன்னுடைய இடது கையாலேயே செய்கிறார்கள். இந்தியச் சூழலில்... , பணம் கொடுப்பது , உணவு வழங்குவது , இன்னும் இதுபோன்ற பல காரியங்களை.. , வலது கையினால் செய்வதே புனிதமாகவும் , சுபமாகவும் கருதப்படுகிறது. சங் 44:3 , தேவனின் பலம் வாய்ந்த வலது கரத்தைப் பற்றிப் பேசுகிறது. நமக்கும் சுயமாக பலம் மிக்க வலக்கரம் இருந்தாலும்கூட.. , தேவனுடைய வலது கரமே நம்மை விடுவிக்கிறது. தேவன் வல்லமையானவர். அதனால் , நாமும் கூட அப்படிப்பட்டவர்களே. அவருடைய வலக்கரம் வல்லமை மிக்கது. எனவே , நம்முடையவைகளும் அதே போன்றதே. ஜெபம்: கர்த்தாவே , உம்முடைய வலதுகரம் எப்போதும் என்னோடே கூட இருக்கிறபடியினால் , நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்!   (Translated from English to Tamil by ...

பூர்வாங்க தகவல்

Image
Saturday, May 15, 2021 B.A. Manakala தேவனே , எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வ நாட்களில் , நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். சங். 44:1. இரண்டாம் நிலைத் தகவலைக் காட்டிலும்... , எந்த இடையீடுமின்றி முதல் நிலையாகக் கிடைக்கிற அசல் மூலத்தகவலே சிறந்தது. ஒரு விஷயத்தை , வேறு ஏதோ ஓரிடத்திலிருந்து கேட்பதைக் காட்டிலும்... , அதையே உங்கள் நண்பர் கூறக் கேட்பது , இன்னும் அதிகமாய் நம்பத் தகுந்ததாக இருக்கும் இல்லையா ? "ஆதி முதல் இருந்ததும் , நாங்கள் கேட்டதும் , எங்கள் கண்களினாலே கண்டதும் , நாங்கள் நோக்கிப் பார்த்ததும் , எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்" என்று 1 யோவான் 1:1ல் வாசிக்கிறோம். தேவனைக் குறித்தான , உங்களுடைய நேரடி அனுபவம் என்ன ? பிறரிடம் உறுதியான நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளத்தக்கதாய்... கர்த்தரைப் பற்றின நிஜமான தகவல் , உங்களிடம் என்ன உள்ளது ? உண்மையான தகவலை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தாவே , அனுதினமும்... , உம்மை மேன்மேலும் அனுபவிக்க எங்களுக்கு உதவி ச...

சிறந்த வழிகாட்டி

Image
Friday, May 14, 2021 B.A. Manakala உமது வெளிச்சத்தையும் , உமது சத்தியத்தையும் அனுப்பியருளும். அவைகள் என்னை நடத்தி , உமது பரிசுத்த பர்வதத்திற்கும் , உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக. சங். 43:3. அநேக நபர்கள் , எனக்கு நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவரைத் தவறவிட்டிருந்தாலும்... , நான் இன்றைக்கு எப்படிப்பட்ட நபராக இருக்கிறேனோ , அப்படி இருந்திருக்க மாட்டேன்! ஆயினும்... , அவர்களில் ஒருவரையும் , சங் 43:3ல் சொல்லப்படுகிற... ' வெளிச்சமாகவும் ,  சத்தியமாகவும் இருக்கிற மெய்யான வழிகாட்டியோடு ' ஒப்பிட முடியாது! புதிய ஏற்பாட்டில்... , இயேசுவே ஒளியாய் இருக்கிறார் (யோவா. 8:12). இயேசுவே சத்தியமாக இருக்கிறார். அவராலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (14:6).         அவரே சத்தியமாகவும் , ஒளியாகவும் இருந்தார். நீங்களும் நானும் , அந்த சத்தியத்தையும் , வெளிச்சத்தையும் எஞ்சிய உலகிற்கு பிரதிபலித்துக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். வாழ்க்கையில் , நீங்கள் பல நபர்களை சந்திக்கிறீர்கள். ஆயினும்... , எப்போதும் உங்கள் கூடவே இருந்து , வழிநடத்துபவர் ஒரே ஒ...

யார் என்னை குற்றமற்றவன் என்று அறிவிக்க முடியும்?

Image
Thursday, May 13, 2021 B.A. Manakala தேவனே , நீர் என் நியாயத்தை விசாரித்து , பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி , சூதும் , அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். சங். 43:1. என்னுடைய குழந்தைகளிடத்தில் , நான் குற்றம் கண்டுபிடித்து... , பின்பு அவர்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறேன். ஆனால்... , அடுத்த கணமே , அவர்களிடம் வேறொரு தவறைக் கண்டுபிடிக்கிறேன்! நான் இரட்சிக்கப்பட்டிருந்தாலும்... , சொல்லாலும் , செயலாலும் நான் இன்னமும் பல பாவங்களைச் செய்கிறேன். நம் அனைவருடைய நிலைமையும் அது தானே ? ஆயினும்... , நமக்கு மிகப்பெரியதோர் நம்பிக்கை உண்டு: நம்மை ' என்றென்றும் குற்றமற்றவர்கள் ' என்று அறிவிக்க நம் தேவன் தகுதியானவர்! நம்முடைய பாவ சுபாவத்தின் மத்தியிலும் , அவர் மாத்திரமே அவ்வாறு செய்ய முடியும். "என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார். என்னோடே வழக்காடுகிறவன் யார் ? யார் எனக்கு எதிராளி ? அவன் என்னிடத்தில் வரட்டும்" என்று ஏசாயா 50:8 கூறுகிறது. சாத்தான் , எப்பொழுதுமே உங்களைக் குற்றவாளியாக வைத்திருக்கவே முயற்சி செய்வான். ஆனால்... , கர்த்தரோ , உங்களை என்றென்றைக்க...

உன் தேவன் எங்கே?

Image
Wednesday, May 12, 2021 B.A. Manakala உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால் ,  இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. சங். 42:3. சமீபத்தில்... , கொரோனா பெருந்தொற்று காரணமாக , ஒரு குடும்பம் அதன் இளம் குடும்பத் தலைவனை இழந்துவிட.... , அந்த அடக்க ஆராதனையை இணையத்தில் நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்த நல்ல விசுவாசி ஒருவர் , தேவனிடம்.... , ' தேவனே , நீர் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர் ?' என்று மனமார்ந்து வினவிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். ' உன் தேவன் எங்கே ?' என்கிற கேள்வியை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டதுண்டா ? நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் , ' தேவன் எங்கே ?' என்று நாம் சிந்தித்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட வேளைகளை... , வாழ்வின் இனிமையான நல்ல நாட்களை நினைத்துப் பார்க்கவும் (சங் 42:4) , தேவனைத் துதிக்கவும் , அவர் மீது நம்பிக்கை கொள்ளவும் , அவரை நினைவுகூரவும் (வச 5-6) பயன்படுத்திக் கொள்ளுங்கள்.   இயேசுவும் கூட... , ' என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர் ?' என்று சிலுவையில் கதறின போது... , அங்கிருந்த ஜனங்...

தீராத வாஞ்சை

Image
Saturday, May 08, 2021 B.A. Manakala மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல , தேவனே , என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன் மேல் , ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் ? சங். 42:1 , 2. தாகமுள்ள ஒரு மான்... , நீரோடையின் அருகே இருக்கும்போது , தன்னுடைய எதிரிகளைப் பற்றி மிகுந்த கவனத்தோடு இருந்தாலும்கூட.. , சுற்றிலும் இருக்கும் சூழ்நிலைகளால் , அவ்வளவு எளிதாக அது திசைதிருப்பப்படுவதில்லை. தண்ணீரைக் கண்டுபிடித்து , மிகுந்த ஆவலோடு ஓடிச்சென்று , அதைப் பருகும். இணையதளமோ , சமூக ஊடகங்களோ இன்றி , ஒரு நாளை நம்மால் சமாளிக்க முடியுமா ? நம்முடைய வழக்கமான உணவு அல்லது சாதம் இல்லாமல் , ஒரு வாரம் நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா ? ரொம்பவே கஷ்டம் தான்... , இல்லையா ?! ஜெபம் மற்றும் வேதவாசிப்பு இல்லாமல் நம்மால் ஒரு நாளோ , ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ இருக்க முடியுமா ? தேவனோடு இருப்பதற்கு நாம் எந்த அளவிற்கு வாஞ்சிக்கிறோம் அல்லது ஏங்குகிறோம் ? தேவனுக்காக நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம் ? தேவனிடமிருந்து ,  நம்முடைய கவனத்தை எவ்வளவு எளிதாக சித...

புகழ்ச்சியை விரும்புகிறீர்களா?

Image
Tuesday, May 11, 2021 B.A. Manakala இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர். ஆமென் , ஆமென். சங். 41:13. நம்முடைய பிள்ளைகள்... , ஏதோ ஒரு காரியத்தை தாங்கள் நன்றாகச் செய்துவிட்டதாக உணர்கிற போதெல்லாம் , அதைப் பெற்றோராகிய நம்மிடமும் , அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமும் அறிவிப்பார்கள்... ஏன் ? அவர்கள் பாராட்டப்படவும் , புகழப்படவும் விரும்புகிறார்கள் என்பதே அதற்கான காரணம்... இல்லையா ? நானும் கூட... , நான் செய்த ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காக யாராவது என்னைப் புகழ்கையில் , பெருமிதமாக உணர்கிறேன். பிறரைப் பாராட்டுவது முக்கியம். "நன்மை செய்யும்படி உனக்குத் திராணி இருக்கும் போது , அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி. 3:27). ஆனாலும்... , புகழ்ச்சி என்பது இறுதியாக... , என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் கர்த்தருக்கே உரியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் , எதையெல்லாம் நம்மால் சாதிக்க முடிகிறதோ , அவற்றுக்கான மகிமையும் , புகழ்ச்சியும் கர்த்தரையே சென்றடைய வேண்டும். எப்போதும் தேவனையும் , மற்றவர்க...

நேர்மையாக இருங்கள்

Image
Friday, May 07, 2021 B.A. Manakala நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி , என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். சங். 41:12. பச்சைப்பசேலென்ற ஏராளமான இலைகளோடு , மிக அழகாய்க் காட்சியளித்த ஓர் அத்திமரத்தை... , ஒருமுறை இயேசு கண்டார். ஆனால் , அதன் அருகில் சென்று அவர் பார்த்த போதோ... , அதில் ஒரு கனி கூட இல்லை! (மத் 21:18-22). ' நாம் எவ்வளவு நல்லவர்கள் ' என்பதை... வெளியே மற்றவர்களுக்குக் காண்பிப்பதில் நாம் கைதேர்ந்தவர்கள் தான்! உண்மையிலேயே ஒரு நபரிடம் கோபமாக இருக்கும் போதும்... ,  அவர்களைப் பார்த்து செயற்கையாக ஒரு புன்னகை பூக்கிறோமா ? உள்ளே வேறு விதமாக நாம் இருக்கையில்... , வெளித்தோற்றத்தில்... மற்றொரு விதமாக நம்மைக் காட்டிக் கொள்கிறோமா ? நாணயம் அல்லது உத்தமம் அல்லது நேர்மை என்பது கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத ஓர் குணநலன் ஆகும். வஞ்சகத் தன்மையையும் , இரண்டகமும் மாறுபாடுமுள்ள மனதையும் , தேவன் அறவே வெறுக்கிறார். பார்ப்பதற்கு பசுமையாகக் காட்சியளித்த அத்தி மரத்தை இயேசு சபித்தார். உண்மையோடும் , உத்தமத்தோடும் இருக்கிற எவரையும் தேவன் தாங்கி , தம்முடைய சமுக...

பரத்திலிருந்து வரும் சுகம்

Image
Thursday, May 06, 2021 B.A. Manakala கர்த்தாவே , என்மேல் இரக்கமாயிரும். உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன். என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். சங். 41:4. எப்போதாவது... , எந்த வியாதியிலிருந்தாவது... , உங்களைக் கர்த்தர் சுகமாக்கி இருக்கிறாரா ? ஆம்! அவரே நம் பரிகாரி. அவரால்  எப்பேர்ப்பட்ட வியாதியையும் குணமாக்க முடியும்! ஆயினும்... , தேவன் நம்மைக் குணமாக்கினாலும்... , நாம் மீண்டும் நோய்வாய்ப்படுகிறோம். இயேசுவானவர் இவ்வுலகில் இருந்த போது.. , ஏராளமானோரை சுகமாக்கினார். அவர்கள் அனைவரும் மீண்டும் சுகவீனம் அடையவே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? வெகு சிலரை அவர் மரித்தோரிலிருந்தும் கூட எழுப்பினார்! ஆனாலும்... , அந்த சரீரங்களோடு , அவர்கள் பூமியில் என்றென்றும் வாழ்ந்தார்களா ? ' நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் , என்னைக் குணமாக்கும் ' ( சங். 41:4) என்கிற தாவீதின் ஜெபம் இங்கே முக்கியமானது. நம்முடைய பாவத்திலிருந்து குணமடைய வேண்டும் என்று நாம் எப்போதாவது ஜெபித்திருக்கிறோமா ? நிச்சயமாக , நாம் இரட்சிக்கப்பட்ட நாளில் ஜெபித்திருப்போம். அனுதினமும் நம்முடைய பாவங்களிலிருந்து குண...

ஏழைகளிடம் கருணை காட்டல்

Image
Wednesday, May 05, 2021 B.A. Manakala சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான். தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து , அவனை உயிரோடே வைப்பார். பூமியில் அவன் பாக்கியவானாய் இருப்பான். அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். சங். 41:1-2. ஒரு சிறு வெகுமதியை ஏழைக்குக் கொடுக்க... ஒருவேளை நான் விருப்பமாய் இருக்கலாம். ஆனால்... , பணத்தைத் திருப்பித் தராத.. , அல்லது தர முடியாத... ஏழைகளுக்குக் கடன் கொடுக்க இன்னமும் நான் தயங்குகிறேன்! ஏழைக்கு இரங்குகிறவர்களுக்கு , ஏராளமான வாக்குத்தத்தங்களை வேதாகமம் அளிக்கிறது (நீதி. 19:17 ; 28:27). சங்கீதம் 41ன் முதல் மூன்று வசனங்கள் , சிறுமைப்பட்டவர்கள் மேல் கனிவு காட்டுகிறவர்களின் பல சலுகைகளைப் பட்டியலிடுகிறது:- 1) அவர்கள் தீங்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 2) கர்த்தர் அவர்களைப் பாதுகாக்கிறார். 3) அவர் அவர்களை உயிரோடே வைக்கிறார். 4) அவர்கள் செழித்திருப்பார்கள். 5) அவர்கள் சுகவீனமாய் இருக்கையில் , கர்த்தரே அவர்களைப் பராமரிக்கிறார். 6) அவர்களுடைய ஆரோக்கியத்தை அவரே மீட்டெடுக்கிறார். இது அற்புதம் அன்றோ ? ஏழை...

உயிருக்கு ஆபத்தா?

Image
Tuesday, May 04, 2021 B.A. Manakala என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி , நாணி , எனக்குத் தீங்கு செய்ய விரும்புகிறவர்கள்  பின்னிட்டு இலச்சையடைவார்களாக. சங். 40:14. இஸ்ரவேலர்கள் , ஏராளம் யுத்தங்களைச் செய்தார்கள். ஒருமுறை கிதியோன்... , மிகப்பெரிய சேனையைக் கொண்டிருந்த மீதியானியருக்கும் , அமலேக்கியருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணினான். தேவன் வழிகாட்டிய படி , வெறும் 300 பேர் கொண்ட ஓர் சிறு படையை கிதியோன் ஆயத்தம் செய்து , யுத்தம் பண்ணினான். கடைசியில் , அந்த 300 பேரும் எக்காளங்களை ஊதுகையில்... , தேவன் அவர்களுடைய சத்துருக்களை , ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பப் பண்ணினார் (நியா. 7:22). உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்த தருணம்... எப்போதாவது உங்களுக்கு உண்டா ? எப்போதுமே நாம் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம். நம்முடைய சத்துருவைப் பார்த்து நாம் பயப்படுகிறோமா ? அல்லது.... ' நம் சத்துருவிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவனை வெட்கத்திற்கும் , அவமானத்திற்கும் உள்ளாக்க தேவனால் முடியும் ' என்று நாம் விசுவாசிக்கிறோமா ? ( சங் 40:14) கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகைய...

நீதியும், உண்மையும், வல்லமையும் உள்ளவர்!

Image
Saturday, May 01, 2021 B.A. Manakala உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும் , உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன். உமது கிருபையையும் , உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்து வைக்கவில்லை. சங். 40:10. நான் கல்லூரியில் பயின்ற போது... , நான் கொஞ்சம்கூட ஈடுபடாத ஓர் ஒழுங்கற்ற நடத்தைக்காக.. , ஆசிரியர் ஒருவரால் மிகவும் மோசமாகத் தண்டிக்கப்பட்டேன்! நீதி , நியாயத்திற்கு அங்கே மதிப்பே இல்லை. ' நூறு குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால்... , ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது ' என்னும் கோட்பாடு... இந்திய குற்றவியல் நீதி அமைப்பால் பின்பற்றப்படுகிறது. ஆனாலும்.. , அதை எப்போதுமே வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா ? நம்முடைய தேவன்... நீதியும் , உண்மையும் , இரட்சிப்பதற்கு வல்லமையும் உள்ளவர் (சங். 40:10). இந்த மூன்றையுமே செய்யக்கூடிய வேறெந்த அமைப்போ , வல்லமையோ இல்லை. அவருடைய நீதியையும் , உண்மையையும் , இரட்சிக்கக் கூடிய வல்லமையையும் பற்றி... , நம் குடும்பம் , சபை , சமுதாயம் என நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் பறைசாற்றுவோமா...

அவருடைய சித்தம் செய்கிறதில் மகிழ்கிறீர்களா?

Image
Friday, April 30, 2021 B.A. Manakala என் தேவனே , உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். சங். 40:8. வார இறுதி நாட்களில்... , பச்சைப்பசேல் என்றிருக்கும் செடிகொடிகள் , பறவைகள் , இன்னும் இது போன்றவை உள்ள இடங்களுக்கு... நாங்கள் குடும்பமாக , காலாற நடந்து வர முயல்வோம். இப்படிப்பட்ட அழகான படைப்புகளை நாங்கள் அனைவரும் பார்த்து ரசிக்கிறோம். நீங்கள் எதை மிகவும் ரசிக்கிறீர்கள் ? எதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் ? தேவனுடைய சித்தத்தைச் செய்கிறதிலே , தான் மகிழ்ச்சி அடைகிறதாக சங் 40:8ல் தாவீது கூறுகிறார். தேவனுடைய கட்டளைகளை தன் இருதயத்தில் எழுதி வைத்திருப்பதாக , இந்த வசனத்தின் பின்பகுதியில் தாவீது ஒப்புக்கொள்கிறார்.  இதற்குக் காரணம் என்னவென்றால் , தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே நமக்கான தேவசித்தம் வெளிப்படுகிறது. அவருடைய வசனத்தில் பிரியமாயிருந்து , இரவும் பகலும் அதில் தியானமாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (சங். 1:2). தேவனுடைய சித்தத்தைச் செய்கிறது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா ? கர்த்தரை நேசிக்கிறவர்கள் , அவருடைய சித்தத்தைச...